ஆடி மாத கூழுக்குப் பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருக்கா? இது தெரிஞ்சா நீங்களும் குடிப்பீங்க

Why is there a practice of serving Koozh: ஆடி மாதத்தில் கூழ் குடிப்பதை பலரும் பாரம்பரியமாக பின்பற்றும் ஆன்மீக நடைமுறை என்றே கூறலாம். எனினும், இதில் அறிவியலும் காணப்படுகிறது. இதில் ஆடி மாதத்தில் கூழ் குடிப்பதற்கான காரணங்களையும், அதன் நன்மைகளையும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
ஆடி மாத கூழுக்குப் பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருக்கா? இது தெரிஞ்சா நீங்களும் குடிப்பீங்க


Why consuming nutritious food during Aadi masam is important: பொதுவாக, தமிழ் மாதங்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த வரிசையில் ஆடி மாதம் ஆன்மீகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால், உங்களுக்குத் தெரியுமா? ஆன்மீகம் மட்டுமல்லாமல், அறிவியல் காரணங்களும் இந்த ஆடி மாதத்திற்கு உள்ளது. ஆடி மாதத்தில் கூழ் அருந்துவதை பலரும் பாரம்பரியமாக பின்பற்றி வரும் ஒரு பழக்கமாகும்.

கோவில்களில் கூழ் ஊற்றப்படுவது ஆன்மீகமாக இருப்பினும், எந்த மாதத்திலும் இல்லாமல் ஆடி மாதத்தில் ஏன் கூழ் ஊற்றப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கான அறிவியல் காரணங்கள் பலரும் அறியாத ஒன்றாகும். இதில் ஆடி மாதத்தில் ஏன் கூழ் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களையும், கூழ் குடிப்பதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்தும் இந்தப் பதிவின் மூலம் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வெயிலுக்கு இதமான கம்மங்கூழ்.. வீட்டிலேயே சிம்பிளா இப்படி செஞ்சி குடிச்சா ஏராளாமான நன்மைகளைப் பெறலாம்

பருவகால மாற்றங்கள்

பொதுவாக வருடம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் உத்ராயணம் (கடவுளுக்கு பகல் நேரம்), சூரியன் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில், காற்று வறண்டதாக இருக்கக்கூடியதாகும். இதில் மனிதர்கள் பலவீனமாக இருப்பார்கள். தட்சிணாயனம் (கடவுளுக்கு இரவு நேரம்), சந்திரன் தெளிவாக இருக்கும் இடத்தில், பூமி குளிர்ச்சியாக இருக்கும். இந்நிலையில் மனிதர்கள் வலிமையாக இருப்பார்கள்.

பெரும்பாலும், பருவங்களின் மாற்றத்தினால் ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே வாழ்க்கை முறை, உணவு முறைகளை மாற்றவும், பருவங்களுக்கு ஏற்ப உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

ஆடி மாதத்திற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள்

அவ்வாறு, ஆடி மாதம் ஆனது தட்சிணாயனத்தின் தொடக்க மாதமாகும் (ஜனவரி வரை பண்டிகை காலத்தின் தொடக்கமும் கூட) மற்றும் இந்த மாதம் ஆன்மீகத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த காலநிலையின் போது காற்று குளிர்ச்சியடைந்து செரிமான அமைப்பு தூண்டப்படுகிறது. மேலும் பசி அதிகரிக்கலாம்.

இந்த ஆடி மாதம் காற்று மற்றும் வெப்பம் இணைந்து உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடும். இதனால், பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே இந்த பருவத்தில் நல்ல சத்தான உணவுகளை அனுபவிக்க வேண்டும். அதன் படி, வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் கீர், சக்கரைப் பொங்கல் போன்ற இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், வெண்ணெய், நெய் போன்ற அதிக கொழுப்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் சிறப்பு ரெசிபியாக ஆடி கூழ் போன்ற புளிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளும் ஆடியின் போது தயாரிக்கப்படுகிகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Summer Special: கோடை காலத்திற்கு ஏற்ற சுவையான ராகி கூழ் செய்வது எப்படி?

ஆடி மாதத்தில் கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இந்த மாதத்தில் கூழ் குடிப்பது உடலுக்கு இதமான விளைவை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. ராகி, கேழ்வரகு, மோர், வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றைக் கொண்டு தயார் செய்யப்படும் இந்த கூழ் ஆனது குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். பொதுவாக, மழை பெய்யத்தொடங்கும் போது பல்வேறு நோய்த்தொற்றுக்களின் அபாயங்களைச் சந்திக்க நேரிடலாம். இந்நிலையில் காற்றில் பரவும் நோய்களுக்கு எதிராக போராட கூழ் பெரிதும் உதவுகிறது.

கூழ் குடிப்பதால் கிடைக்கும் சில நன்மைகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் & டயட்டீஷியன் டாக்டர்.மைதிலி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் சிலவற்றைக் காண்போம்.

கேழ்வரகு கூழ் குடிப்பதன் நன்மைகள்

  • ஆடி மாதத்தில் கேழ்வரகு கூழ் குடிப்பது, உடல் உஷ்ணத்தைத் தடுத்து செரிமானப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி அஜீரணம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • கேழ்வரகில் உள்ள அதிகளவிலான இரும்புச்சத்துக்கள், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் அனிமியா அல்லது இரத்த சோகை பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இந்த மாதம் மட்டுமல்லாமல், எல்லா மாதத்திலும் கேழ்வரகு கூழை உட்கொள்வது நன்மை பயக்கும்.
  • இது தவிர, இதில் கால்சியம் ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இவை வளரும் குழந்தைகளுக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • மேலும் கேழ்வரகு கூழ் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இது போன்ற ஏராளமான நன்மைகளைப் பெற அன்றாட உணவில் கேழ்வரகு கூழ் குடிப்பது மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Aadi Koozh Recipe: ஆடி மாசம் வந்துருச்சி! ஆடி கூழ் இப்படி செஞ்சி குடிங்க! மிச்சமே இருக்காது

Image Source: Freepik

Read Next

நெல்லிக்காயில் மறைந்துள்ள சூப்பர் பவர்.. 2 வாரத்தில் உங்கள் உடலே மாறிடும்.! நிபுணர் பகிர்ந்த உண்மை..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version