இஞ்சி (Ginger) என்பது இந்தியர்கள் பல தலைமுறைகளாக மருத்துவத்தில் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த மூலிகை. இது வெறும் சமையல் பொருள் மட்டுமல்ல; நம்முடைய உடலை உள்ளிருந்தே சுத்திகரிக்கும் ஒரு இயற்கை டிடாக்ஸ்! இப்போது, பலர் "இஞ்சி தண்ணீர் குடிச்சா என்ன ஆகும்?" என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்குப் பதில் இந்த பதிவு..
ஒரு வாரத்திற்கு தொடர்ந்து வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால், முக்கியமான உடல் பிரச்சனைகளை இயற்கையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.
இஞ்சி தண்ணீரின் மருத்துவ குணம்
இஞ்சி தண்ணீர் என்பது, இஞ்சியை காய்ச்சிய நீரால் தயாரிக்கப்படும் இயற்கை டிரிங். இதில் Gingerol எனப்படும் ஒரு சக்திவாய்ந்த சேர்மம் உள்ளது. இது:
- அலெர்ஜியை குறைக்கும்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- ஜீரணத்தை தூண்டும்
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
- செரிமான உறுப்புகளை தூய்மைப்படுத்தும்
இஞ்சி தண்ணீர் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
- இஞ்சி – 1 அங்குலம் (நன்கு சுத்தம் செய்து நறுக்கவும்)
- தண்ணீர் – 2 கப்
- தேன் – 1 டீஸ்பூன் (விருப்பத்திற்கேற்ப)
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
செய்முறை
- ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும்.
- 10 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.
- பிறகு வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
- இதை காலை வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இஞ்சி டீ குடிப்பதன் நன்மைகள்
ஜீரணத்தை மேம்படுத்தும்
இஞ்சி, எஞ்சியுள்ள பித்த சுரப்புகளை தூண்டி, செரிமான சிரமங்களை தடுத்து விடுகிறது. பசியின்மை, எரிச்சல், வாயுபோன்ற பிரச்சனைகள் குறையும்.
உடல் எடையை குறைக்கும்
இஞ்சி மெட்டபாலிசத்தை (வளர்சிதை மாற்றம்) ஊக்குவிப்பதால், உடலில் உள்ள கொழுப்பு குறையும். 15 நாளில் ஒரு மாற்றம் நிச்சயம் தெரியும்.
அலெர்ஜி குறையும்
மூட்டுவலி, தசை வலி, சைநஸிடிஸ் போன்ற அலெர்ஜி நோய்களில் நிவாரணம் கிடைக்கும். Gingerol மற்றும் Shogaol சேர்மங்கள் அலெர்ஜியை கட்டுப்படுத்தும்.
சர்க்கரை மேலாண்மை
இஞ்சி, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். டயபடீசுக்கான உணவுப் பழக்கத்தில் இது முக்கிய இடம் பெறும்.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இஞ்சி ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்தது. தினமும் குடித்தால், கிருமிகள், வைரஸ்கள் எதிரான சக்தி உருவாகும். இவை வறண்ட பருவம், மழைக்காலங்களில் மிகவும் பயனளிக்கும்.
பீரியட்ஸ் வலி குறையும்
இஞ்சி நீர் குடிப்பதால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வலி, தூக்கமின்மை போன்றவை குறையும். இயற்கையான “pain reliever” மாதிரி செயல்படுகிறது.
சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு
இஞ்சி தண்ணீர் சளி, இருமல், நெஞ்சு பிடிப்பு, ஆஸ்தமா போன்ற சின்ன சின்ன சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இது காற்று நாளங்களில் உள்ள சளியை சிதைக்கும் திறன் கொண்டது.
தோல் மற்றும் கூந்தலுக்கு நல்லது
இஞ்சி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது முகத்தில் ஜொலிப்பு தரும், முடி வளர்ச்சிக்கும் உதவும். Anti-ageing உணவுகளில் இஞ்சி முக்கியமான ஒன்று!
யாரெல்லாம் இதை தவிர்க்க வேண்டும்?!
இஞ்சியில் இருக்கும் தீவிரமான சேர்மங்கள் சிலருக்கு ஒத்துவராமலிருக்கும். குறிப்பாக:
- கர்ப்பிணிப் பெண்கள்
- இரத்தம் உறைதல் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள்
- வயிறு புண் / அல்சர் உள்ளவர்கள்
இந்தக் குழுவில் நீங்கள் வந்தால், மருத்துவர் ஆலோசனையின்றி இஞ்சி தண்ணீர் குடிக்க வேண்டாம்.
இவற்றை மறக்காதீங்கள்..
- தினமும் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
- எலுமிச்சை சேர்ப்பது சுவைக்கும், சுத்திகரிக்கவும் உதவும்.
- தேன் சேர்த்தால், வலிமை மற்றும் Immunity அதிகரிக்கும்.
15 நாட்கள் தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள், முடிவில் உங்கள் ஆரோக்கியத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்
குறிப்பு
இஞ்சி தண்ணீர் என்பது உங்களுக்குள் உள்ள நச்சுச்சத்துக்களை வெளியேற்றும் ஒரு சிறப்பு மருந்து. ஒரு வார்த்திற்கு தொடர்ந்து குடித்தால், உங்கள் உடல் மட்டும் அல்ல, உங்கள் தோல், மனநிலையும் நல்ல மாற்றத்தை பெறும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காம ஷேர் பண்ணுங்க..
Read Next
கொஞ்சம் மருந்து மாத்திரையை தள்ளி வைங்க.. இதையெல்லாம் சாப்பிடுங்க.. தைராய்டு காணாமல் போகும்.!
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version