Sat Sep 12, 2026 | 02:17 AM IST

Ginger for Weight Loss: வேகவேகமா எடையைக் குறைக்கணுமா? இஞ்சி தண்ணீரை இப்படி குடிச்சி பாருங்க

Best Way To Drink Ginger Water: இன்று பலரும் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகமாகி பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் உடல் எடை குறைய பலரும் பல வழிகளைத் தேர்வு செய்கின்றனர். உடல் எடையைக் குறைக்க சில இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் காணலாம். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க இஞ்சி தண்ணீர் பெரிதும் உதவுகிறது. இதில் உடல் எடை குறைய இஞ்சி தண்ணீர் உட்கொள்ளும் முறை குறித்து காணலாம்.

உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கலோரி எரிப்பதை அதிகரிக்கவும் இஞ்சி நீர் உட்கொள்ளல் சிறந்த தேர்வாக அமைகிறது. இது உடலின் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளைக் குறைக்கிறது. இதில் நிறைந்துள்ள செரிமான பண்புகள் திறமையான செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இஞ்சியில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், மேலும் இதில் இயற்கையான தெர்மோஜெனிக் பண்புகள் நிறைந்துள்ளது. இது உடலில் கொழுப்பு எரிப்பதை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியுடன் இஞ்சி நீரை சேர்த்துக் கொள்வது எடை இழப்பிற்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Fenugreek For Weight Loss: வெயிட் டக்குனு குறையணுமா? வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க

இஞ்சி நீரை எப்படி உட்கொள்வது?

இஞ்சியை உட்கொள்வதற்கான மிகச் சிறந்த வழியாக அமைவது இஞ்சி நீர் உட்கொள்வதாகும். இதற்கு இஞ்சியை நசுக்கி சூடான நீரில் சேர்த்து, பின்னர் நீர்த்த சாற்றை அருந்தலாம். இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். இதில் பாதி இஞ்சியை தட்டி மீண்டும் 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின் இதில் ஒரு சிட்டிகை எலுமிச்சைச் சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து தினமும் முழு கரைசலையும் குடிக்க வேண்டும்.

இஞ்சி நீர் உட்கொள்வதற்கான சரியான நேரம்

உடல் எடையைக் குறைக்க இஞ்சி நீரை நாள் முழுவதும் பருகலாம். ஒரு கப் அளவுக்கு அதிகமாக இஞ்சி நீர் அருந்தலாம். எனினும் உடல் எடையைக் குறைக்க இஞ்சி நீரைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. அதே சமயம், பெரியவர்கள் ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு மேல் இஞ்சியை உட்கொள்ளக் கூடாது.

பச்சை இஞ்சி உட்கொள்வது பாதுகாப்பானதா?

பச்சை இஞ்சியை உட்கொள்வது பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமான பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எனினும், அதிகப்படியான உட்கொள்ளல் வயிறு அசௌகரியம் அல்லது நெஞ்செரிச்சலை உண்டாக்கும். எனினும் சில மருந்துகளை உட்கொள்பவர்கள் அல்லது குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளை உள்ளவர்கள் உணவில் அதிகளவு பச்சை இஞ்சியைச் சேர்ப்பதற்கு முன்னதாக மருத்துவரை அணுகி பயன்பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Reduces Fruits: தொப்பையை வேகமா குறைக்கணுமா? இந்த 6 பழங்களை சாப்பிடுங்க போதும்

இஞ்சி தண்ணீர் அதிகளவு உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்

ஒருவர் அதிகளவு இஞ்சி தண்ணீர் உட்கொள்வது வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், துர்நாற்றம், வயிற்று வலி அல்லது பிடிப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறுகிய கால நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் போது இது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

இன்னும் சிலர் இஞ்சி பேஸ்ட்டை சருமத்தில் தடவுவர். இது அனைத்து சருமத்திற்கும் பொருந்தாது. ஏனெனில் இது தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம் மற்றும் சில தோல் வகைகளில் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.

இஞ்சி தண்ணீர் உட்கொள்வதன் நன்மைகள்

இஞ்சி தண்ணீர் உட்கொள்வது உடல் எடையைக் குறைப்பதுடன், இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயிறு அசௌகரியத்தைக் குறைக்கிறது. மேலும் இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். கூடுதலாக, இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், பசியைக் குறைப்பதன் மூலமும் உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.

இஞ்சி தண்ணீரை இந்த வழிகளில் குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கவும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறவும் முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Radish for Weight Loss: எவ்ளோ பெரிய தொப்பையையும் அசால்ட்டாக குறைக்க முள்ளங்கியை சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

Weight Loss Drinks: இந்த ஜூஸ் எல்லாம் குடிங்க! மெட்டபாலிசம் அதிகரிக்கும், உடல் எடையும் குறையும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content