Turmeric coffee: காபியில் மஞ்சள் சேர்த்து குடிச்சி பாருங்க! எதிர்பார்க்காத லெவலில் வெயிட்டை குறைக்கலாம்

What happens when you mix turmeric and coffee: காபி மற்றும் மஞ்சள் கலவையானது எடை மேலாண்மைக்கு ஒரு சிறந்த கலவையாகக் கருதப்படுகிறது. இது எடையிழப்புக்கு உதவக்கூடிய பல்வேறு பண்புகளைக் கொண்டுள்ளது. இது கொழுப்பை எரிக்கவும், பசியை அடக்கவும் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இந்த எளிய செயல்முறையானது காய்ச்சிய காபியுடன் மஞ்சள் மற்றும் இன்னும் சில பொருள்களைச் சேர்த்து தயார் செய்யப்படுகிறது. இதில் மஞ்சள் காபி எவ்வாறு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
Turmeric coffee: காபியில் மஞ்சள் சேர்த்து குடிச்சி பாருங்க! எதிர்பார்க்காத லெவலில் வெயிட்டை குறைக்கலாம்

Is turmeric coffee good for weight loss: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாகவே உடல் எடை அதிகரிப்பும் அடங்கும். இதன் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நீண்டகால பிரச்சனைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க பலரும் உடல் எடை குறைப்பு முயற்சிகளைக் கையாள்கின்றனர். இதற்கு யோகா, உடற்பயிற்சி, ஜிம் செல்வது போன்றவற்றை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

இது போன்ற பல்வேறு முறைகளைக் கையாண்ட பிறகும் பலரும் உடல் எடையைக் குறைக்க முடியாமல் தவிர்க்கின்றனர். ஏனெனில் உடல் எடையைக் குறைக்க சீரான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும். அந்த வகையில், எடை குறைய மஞ்சள் கலந்த காபி உதவுகிறது. இதில் எடை குறைய மஞ்சள் காபி எவ்வாறு உதவுகிறது என்பதையும், எடையைக் குறைப்பதற்கு இதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பது குறித்தும் காணலாம்.

உடல் எடை குறைய மஞ்சள் காபி (Turmeric Coffee for Weight Loss)

அனைத்து வகையான உணவுகளிலும் மஞ்சள் ஒரு சிறந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பொருளாகக் கருதப்படுகிறது. இதை விருப்பமான பானமான காபியுடன் சேர்த்து அருந்துவது ஒரு சக்திவாய்ந்த பானமாக அமைகிறது. இந்த தனித்துவமான மஞ்சளை காபியுடன் சேர்த்து சூடாக அருந்துவது எடை அதிகரிப்புடன் போராடும் நபர்களுக்கு சிறந்ததாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric side effects: அளவுக்கு அதிகமாக மஞ்சள் எடுத்துக்கிட்டா உங்களுக்கு இந்த பிரச்சனை வர்றது கன்ஃபார்ம்

மஞ்சள் காபி

மஞ்சள் காபி என்பது காய்ச்சப்பட்ட காபி மற்றும் மஞ்சள் தூள் போன்றவற்றின் கலவையைக் குறிக்கிறது. சில சமயங்களில் இந்தக் கலவையில் இஞ்சி, இலவங்கப்பட்டை அல்லது கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருள்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இதில் மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற நன்மை பயக்கும் பண்புகள் நிறைந்துள்ளது. மேலும் காபியில் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் பண்புகள் காணப்படுகிறது. இந்த பண்புகள் இரண்டும் ஒருங்கிணைந்து வழக்கமான காபிக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான மாற்றாக உள்ளது.

எடை இழப்புக்கு மஞ்சள் காபியின் நன்மைகள்

கொழுப்பு எரிவதை ஊக்குவிக்க

மஞ்சளில் உள்ள சேர்மமான குர்குமின், உடலில் கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது கொழுப்பு அமிலங்களைத் திரட்டும் காபியின் திறனுடன் இணைவதால், உடலில் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது.

மேம்பட்ட வளர்ச்சிதை மாற்றம்

காபியில் காஃபின் நிறைந்துள்ளது. இவை மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டவும், வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், மஞ்சள் சேர்ப்பது வீக்கத்தைக் குறைக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் எடை மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த விளைவைத் தருகிறது.

வீக்கத்தைக் குறைக்க

உடல் எடை அதிகரிப்பானது நாள்பட்ட வீக்கத்துடன் நேரடி தொடர்புடையதாகும். மஞ்சள் சேர்ப்பதன் மூலம் அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்கிறது. இது வீக்கம் குறைவதை எளிதாக மாற்றுவதுடன், ஒட்டுமொத்த உடல் எடையையும் மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric for weight lose : சீக்கிரமா எடையை குறைக்கனுமா? - அப்போ இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!

பசியைக் கட்டுப்படுத்த

காபி அருந்துவது தற்காலிகமாக பசியைக் குறைக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மஞ்சளுடன் காபியை இணைப்பது கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதுடன், பசி ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துகிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு

சீரான செரிமானத்தின் உதவியுடன் உடல் எடையிழப்பை ஊக்குவிக்கலாம். மஞ்சள் ஆனது பித்தத்தின் சுரப்பை ஊக்குவிக்கவும், கொழுப்பை சீராக செரிமானம் அடையச் செய்யவும் வழிவகுக்கிறது. இவ்வாறு செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் உடல் எடையிழப்பை ஊக்குவிக்கலாம்.

மஞ்சள் காபி தயார் செய்யும் முறை

தேவையானவை

  • புதிதாக காய்ச்சப்பட்ட காபி - 1 கப்
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • பாதாம் பால் அல்லது தேங்காய்ப்பால் - 50 மில்லி
  • விரும்பினால் கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கலாம்.

செய்முறை

  • முதலில் வழக்கம்போல காபி செய்து கொள்ளலாம்.
  • பின், ஒரு வாணலியில் காபியை சூடாக்கி, கருப்பு மிளகு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை போன்றவற்றைப் பயன்படுத்தினால் சேர்த்து கிளறவும்.
  • பிறகு இந்தக் கலவையை 2-3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
  • இதில் விரும்பினால் தேன் சேர்த்து, கிரீமிக்காக பாதாம் அல்லது தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டும்.
  • இதை ஒரு குவளையில் ஊற்றி, நன்கு கிளறி சூடாக அருந்தலாம்.

மஞ்சள் காபி ஒரு சத்தான மற்றும் பல்துறை விருப்பமாகும். இது காபி, மஞ்சள் ஆகிய இரண்டின் ஆரோக்கிய நன்மைகளுடன் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. சிறந்த முடிவுகளுக்கு சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை சட்டுனு குறைக்க இஞ்சி மற்றும் மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Green Tea for Weight Loss: உடல் எடை இழப்புக்கு க்ரீன் டீ எவ்வளவு முக்கியம் தெரியுமா?

Disclaimer