Side effects of eating too much turmeric: நம் அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளும் பெரும்பாலான உணவுப்பொருள்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும் சில உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது உடலுக்கு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி நினைத்ததுண்டா?. ஆம், நாம் தினமும் உணவுப்பொருளாக பயன்படுத்தும் மஞ்சள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் உள்ள பல்வேறு ஆரோக்கியமான பண்புகள் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தருகிறது.
பொதுவாக மஞ்சளானது அதன் அழற்சி எதர்ப்புப் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக மிகவும் பெயர் பெற்றதாகும். எனவே தான் இது பல நூற்றாண்டுகளாகவே பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், மஞ்சளை அதிகளவு உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இதில் அளவுக்கு அதிகமாக மஞ்சள் எடுத்துக் கொள்வதன் விளைவுகள் குறித்து காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் சாப்பிடுவது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துமா?
அதிகளவு மஞ்சள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள்
குறைந்த இரத்த சர்க்கரை
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மஞ்சள் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. ஆய்வு ஒன்றில் மஞ்சளில் நிறைந்துள்ள குர்குமின் ஆனது இரத்தச் சர்க்கரைக் குறைவு விளைவுகளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனினும், அதிகளவு மஞ்சள் நுகர்வு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகளவு குறைக்க வழிவகுக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் மஞ்சள் உட்கொள்ளலை கவனிப்பது நல்லது.
முக்கிய கட்டுரைகள்
இரத்தத்தை மெலிக்கும் விளைவுகள்
மஞ்சள் ஆனது இயற்கையாகவே இரத்தத்தை மெலிக்கும் பண்புகளைக் கொண்டதாகும். இது இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், மஞ்சளையும் அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது ஆபத்தை விளைவிக்கலாம். ஆய்வு ஒன்றில், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது இரத்தப்போக்கு கோளாறு கொண்டவர்கள் அதிகளவு மஞ்சள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், இரத்தத்தை மெலிக்கும் மருந்தை உட்கொள்பவர்களும், மஞ்சள் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும் முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
ஒவ்வாமை பிரச்சனைகள்
மஞ்சள் ஒவ்வாமை பிரச்சனை கொண்டவர்களாக இருப்பின், அவர்களின் உணர்திறன் வாய்ந்த சருமத்தின் காரணமாக தோல் வெடிப்பு, அரிப்பு அல்லது படை நோய் போன்றவை ஏற்படலாம். கூடுதலாக, மஞ்சளை அதிகளவு உட்கொள்ளும் போது சருமத்தின் உணர்திறன் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும், சில சமயங்களில் அதிகளவு மஞ்சள் உட்கொள்வதால் ஹார்மோன் சமநிலை சீர்குலைக்கப்பட்டு, தோல் நிலைகளை அதிகரிக்கும் என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒவ்வாமை எதிர்வினைகளை சோதிப்பதற்கு, சிறிய அளவுகளுடன் மஞ்சளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், மேற்பூச்சு பயன்பாடுகளில் அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric Water: தினசரி ஏன் கட்டாயம் மஞ்சள் தண்ணீர் குடிக்கனும்? ஏதும் பாதிப்பு வருமா?
சிறுநீரக கற்கள் அபாயம்
மஞ்சளில் ஆக்சலேட்டுகள் நிறைந்துள்ளது. இவை கால்சியத்துடன் பிணைக்கப்பட்டு சிறுநீரக கற்களை ஏற்படுத்தலாம். ஆய்வு ஒன்றில் அதிகப்படியான ஆக்சலேட் உட்கொள்ளல் காரணமாக கால்சியம் ஆக்சலேட் சிறுநீரகக் கற்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே அதிப்படியான ஆக்சலேட் உருவாக்கத்தைத் தடுக்க மஞ்சள் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக, சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
இரைப்பை குடல் பிரச்சினைகள்
பொதுவாக மஞ்சளை செரிமான ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தலாம். ஆனால், இதன் அதிகப்படியான நுகர்வால் இரைப்பை குடல் அசௌகரியம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆராய்ச்சி ஒன்றில், மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கலவையின் அதிகளவு நுகர்வு, வயிற்றுப் புறணியை எரிச்சலடையச் செய்து வீக்கம், அமில வீச்சு அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே அமில ரிஃப்ளக்ஸ் உள்ளவர்கள் மஞ்சளை மிதமான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: மஞ்சளுடன் தேன் கலந்த ட்ரிங்க் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Image Source: Freepik