$
What Are The Side Effects Of Eating Too Much Almonds: இன்று பெரும்பாலானோர் நட்ஸ் மற்றும் விதைகள் உட்கொள்வதை அதிகம் விரும்புவர். அந்த வகையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஊட்டமளிக்கும் சிறந்த பருப்புகளில் ஒன்று பாதாம் பருப்பாகும். பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது.
கூடுதலாக, மூளை சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எனினும், அதிகபட்ச பலன்களைப் பெற ஒவ்வொரு நாளும் சரியான அளவு உண்ண வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும், அதிகப்படியான பாதாம் நுகர்வு அசௌகரியமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Raw Coconut Water: சுட்டெரிக்கும் வெயிலில் இந்த பானத்தை மட்டும் மிஸ் பண்ணீடாதீங்க
அளவுக்கு அதிகமாக பாதாம் சாப்பிடுவதன் விளைவுகள்
தினமும் பாதாம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதில் சிலவற்றைக் காணலாம்.
அதிகளவு வைட்டமின் ஈ
சில பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ சத்துக்கள் 25 மில்லிகிராம் நிறைந்துள்ளது. ஆனால் தினசரி தேவையாக 15 மில்லி கிராம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரங்களில் அதிகளவு பாதாம் சாப்பிடுவதால், அதிகப்படியான ஊட்டச்சத்து காரணமாக பலவீனம், வயிற்றுப்போக்கு மற்றும் மங்கலான பார்வை பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

செரிமான பிரச்சனை
அதிகம் பாதாம் பருப்புகளை உட்கொள்வது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தலாம். பாதாமில் நிறைந்த நார்ச்சத்துக்கள், உடல் அதிகம் உட்கொள்ளும் பழக்கமில்லாததன் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படலாம். எனவே தண்ணீர் அதிகம் அருந்தாமல் பாதாம் உட்கொள்ளை அதிகப்படுத்தினால் செரிமான கோளாறு ஏற்படலாம்.
சிறுநீரகக் கற்கள்
ஒரு நாளில் அதிகளவு பாதாம் சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும் அபாயத்திற்கு வழிவகுக்கும். இது உடலில் அதிகளவு கால்சியம் ஆக்சலேட்டுகள் இருக்கும் போது உருவாகிறது. பாதாமில் ஆக்ஸலேட்டுகள் அதிகம் இருப்பதால், இது எளிதில் உறிஞ்சப்படாது.
இந்த பதிவும் உதவலாம்: Eyesight Improve Foods: நல்ல தெளிவான, ஆரோக்கியமான கண்களைப் பெற உதவும் டாப் உணவுகள் என்னென்ன தெரியுமா?
எடை அதிகரிப்பு
பாதாம் அதிகளவு கொழுப்பு நிறைந்த பருப்புகள் ஆகும். பாதாமை ஒரு நாளைக்கு அதிகம் சாப்பிடுவதால், உடலில் கொழுப்பு படிவதை அதிகரிக்கிறது. அதன் படி, சுமார் 100 கிராம் அளவிலான பாதாமில் 50 கிராம் கொழுப்பு நிறைந்துள்ளது. ஆனால், இதில் கணிசமான பகுதி மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளாகும். இது இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். அதே சமயம் உட்கார்ந்த வாழ்க்கை முறை பல கலோரிகளை எரிக்க அனுமதிக்காது.
ஒவ்வாமை பிரச்சனைக்கு
சிலருக்கு பாதாமை ஆரம்பத்திலிருந்தே சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மேலும் ஒரு நபர் பாதாமை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுகிறது. உடலில் ஏதேனும் ஒன்று அதிகமிருப்பின், சகிப்புத்தன்மையை உருவாக்கலாம். இதில் ஒரே நாளில் பாதாம் பருப்பை அதிகம் உட்கொள்வது அல்லது நீண்ட காலத்திற்கு மிதமான அளவு இல்லாமல் அதிகளவு உட்கொள்வது ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
பாதாம் பருப்பை தினசரி எடுத்துக் கொள்வது 1/3 கப் அதாவது 40 கிராமுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. பாதாமை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக இருப்பினும், அதிகம் உட்கொள்வது உடல் நலனைப் பாதிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஏன் வால்நட்டை ஊறவைத்து சாப்பிடணும் தெரியுமா?
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version