Chicken Side Effects: தினமும் சிக்கன் சாப்பிடுபவர்களா நீங்க? இது தெரியாம சாப்பிடாதீங்க

  • SHARE
  • FOLLOW
Chicken Side Effects: தினமும் சிக்கன் சாப்பிடுபவர்களா நீங்க? இது தெரியாம சாப்பிடாதீங்க

புரதம் நிறைந்த உணவான சிக்கனை ஜிம்மிற்கு செல்பவர்கள் மற்றும் ஃபிட்னஸை பின்பற்றுவர்கள் போன்றோர் தங்களது உணவுமுறையில் சிக்கனை சேர்க்கின்றனர். கோழி உண்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும், ஆய்வுகளில் தினமும் கோழிக்கறி சாப்பிடுவது சில பாதகமானவிளைவுகளை ஏற்படுத்தலாம். இதில் தினமும் சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வானிலை மாற்றம் தலைவலியை ஏற்படுத்துமா? தடுப்பு முறைகள் இங்கே!

தினமும் சிக்கன் சாப்பிடுவதன் விளைவுகள்

கொலஸ்ட்ரால் அதிகரிப்பு

கோழியை சரியான முறையில் உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது. ஆனால் அதை எப்படி உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே கொலஸ்ட்ரால் அளவு அமைகிறது. அதிலும் குறிப்பாக, வறுத்த கோழி உட்கொள்ளலை வழக்கமான ஒன்றாக சேர்ப்பது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். உண்மையில் ஆய்வு ஒன்றில், சிவப்பு இறைச்சியைப் போலவே வெள்ளை இறைச்சி கோழி உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த வறுத்த, வேகவைத்த அல்லது கிளறி வறுத்த கோழியை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

எடை அதிகரிப்பு

தினமும் தொடர்ந்து கோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் மற்றொரு விளைவாக அமைவது எடை அதிகரிப்பு ஆகும். அதன் படி, சிக்கனில் தயாரிக்கப்படும் சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன், ஃபிரைடு சிக்கன் மற்றும் இன்னும் பல உணவுப் பொருட்கள் அதிக கலோரி அளவு கொண்டவையாகவும், மிகவும் கனமாகவும் கருதப்படுகிறது. இந்த வகை உணவுகளை எப்போதாவது ஒரு முறை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இதன் வழக்கமான நுகர்வு கண்டிப்பாக எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. மேலும் இது கொலஸ்ட்ரால் அதிகரிப்பிற்கும் வழிவகுக்கும்.

உடல் வெப்பத்தை அதிகரிக்க

சிக்கன் அதிக வெப்பமான உணவாக கருதப்படுகிறது. இதனை உட்கொள்வது உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கிறது. இந்த வெப்ப அதிகரிப்பின் அறிகுறியாக சிலருக்கு மூக்கு ஒழுகுதல் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக, கோடைக்காலத்தில் தினமும் கோழிக்கறி உட்கொள்வது மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து கோழிக்கறி சாப்பிட்ட பின் மூக்கில் இரத்தம் வடிந்தால், சில நாள்கள் இடைவெளி விட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Bleeding Gums: பல் ஈறுகளில் இரத்தக் கசிவா? அதுக்கு இது தான் காரணம்! எப்படி தவிர்ப்பது?

சோடியம் உட்கொள்ளல்

கோழி அதிகளவிலான சோடிய அளவைக் கொண்டுள்ளது. உடலில் சோடிய அளவு அதிகரிப்பது மிகவும் கடுமையான ஹைப்பர்நெட்ரீமியா எனப்படுகிறது. இந்த அதிகளவு சோடியம் தசை இழுப்பு, வலிப்பு, கோமா போன்ற அபாயங்களை ஏற்படுத்தலாம். மேலும் உணவில் அதிகப்படியான சோடியம் ஏற்படுவது இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் மற்றும் மரணம் போன்ற சூழ்நிலைகளும் ஏற்படலாம். எனவே அதிகப்படியான சோடிய நுகர்வைக் குறைக்க இடைவெளி விட்டு சிக்கன் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

UTI தொற்று

சில வகையான கோழி உட்கொள்ளலால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கள் அல்லது UTI உடன் இணைக்கப்படலாம். ஆய்வு ஒன்றில் கோழி சாப்பிடுவது UTI உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக நுண்ணுயிர் எதிர்ப்பு இல்லாத கோழி வகைகளை உட்கொள்ளலால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக, பதப்படுத்தப்படாத, முழுதும் வேக வைக்கப்படாத உணவு வகைகளைச் சாப்பிடும்போது, அவற்றில் உள்ள பாக்டீரியா, சிறுநீர்ப் பாதையில் தொற்றை ஏற்படுத்தி விடலாம்.

அதன் படி, தினமும் சிக்கன் உட்கொள்ளல் உடலில் பல்வேறு வகையான நோய் அபாயங்களை ஏற்படுத்துகிறது. எனவே தினந்தோறும் சிக்கன் உட்கொள்ளலைத் தவிர்த்து இடைவெளி விட்டு சிக்கன் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: High Blood Pressure: இரத்த அழுத்தத்திற்கு கல் உப்பு சாப்பிடலாமா? இதன் நன்மைகள் இங்கே!

Image Source: Freepik

Read Next

தூக்கத்தில் வரும் சுவாசப் பிரச்சனையும் மனநல பிரச்சனையும்!

Disclaimer

குறிச்சொற்கள்