Causes Symptoms Treatment And Prevention Of Bleeding Gums: இன்று பலரும் பல்வேறு காரணங்களால் ஈறு அல்லது வாய் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். இதன் பொதுவாக அறிகுறிகளில் ஒன்றாக அமைவது ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு வெளிப்படுதலாகும். இந்த இரத்தப்போக்கு ஏற்படுவது உடலில் ஏற்படும் பல உடல்நலப் பிரச்சனைகளைக் குறிக்கிறது. என்ன சொல்றீங்க? ஈறுகளில் இரத்தப்போக்கு வருவது சாதாரணமான ஒன்று தானே என சிலர் நினைப்பர். ஆம். அதுவே அதிகளவிலாக ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு மீண்டும் மீண்டும் வந்தால் அது கடுமையான நோய்களைக் குறிக்கிறது.
இந்தத் தொடர் இரத்தப்போக்கு பல காரணங்களால் ஏற்படலாம். அதாவது உடலில் வைட்டமின்கள் குறைபாடு அல்லது பிளேட்லெட்டுகள் குறையும் போது, சில சமயங்களில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான நோயான பீரியண்டோன்டிடிஸ் போன்றவற்றின் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படலாம். இந்த சூழ்நிலையில், ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுவதை புறக்கணிக்கக் கூடாது. இதில் பற்களின் ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் சிலவற்றைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Clay Pot Cooking: மண்பானை உணவுக்கு தனி ருசி மட்டுமல்ல! இந்த சூப்பரான நன்மைகளும் இருக்கு
ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான அறிகுறிகள்
பற்களின் ஈறுகளில் இரத்தம் கசிவதால் பின்வரும் அறிகுறிகள் தென்படலாம்.
- பற்களில் இடைவெளி இருப்பது அல்லது தளர்வடைதல்
- வாய் துர்நாற்றம்
- ஈறுகளில் வீக்கம்
- ஈறுகளைத் தொடும்போது வலி ஏற்படுவது
- வாய் அல்லது ஈறுகளைச் சுற்றி வலி உணர்வு
- ஈறுகளின் நிறம் மாறுதல் (அதாவது சிவப்பு அல்லது அடர் ஊதா நிறங்களில் ஈறுகள் தோன்றும்)

ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்
பல் தொற்று அல்லது வேறு சில உடல்நலப் பிரச்சனைகளால் ஈறுகளில் இரத்தம் வரக்கூடும். இதில் ஈறுகளின் இரத்தக்கசிவுக்கான காரணங்களைக் காணலாம்.
வைட்டமின் சி மற்றும் கே குறைபாடு
உடலில் போதுமான வைட்டமின் சி மற்றும் கே இல்லாத போது ஈறுகளில் ரத்தம் வரலாம். இதில் வைட்டமின் கே உடலில் இரத்தம் உறைதல் செயல்முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பற்றாக்குறை ஈறுகளில் இரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது. அதே சமயம், வைட்டமின் சி குறைபாட்டால், ஈறுகளில் வலி மற்றும் வீக்கம் உண்டாகும்.
ஈறுகளில் ஏற்பட்ட காயம்
பற்களை அதிக அழுத்தத்துடன் துலக்கும்போது, ஈறுகளில் அதிக அழுத்தம் உண்டாகும். இதனால், ஈறுகள் காயமடைகிறது. இது இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கிறது.
சரியாக சுத்தம் செய்யாத போது
சிலர் பற்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் சரியாக சுத்தம் செய்ய மாட்டார்கள். இந்நிலையில் அவர்களின் ஈறுகள் வீக்கமடைந்து, இரத்தப்போக்கு ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: High Cortisol Symptoms: உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தா ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்குனு அர்த்தம்!
வளைந்த பற்கள்
பற்கள் வளைந்து காணப்படும் போது, அதை சரியாக சுத்தம் செய்ய முடியாது. இதனால் பற்களில் உணவு சிக்கி, வீக்கம் மற்றும் இரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது.
கல்லீரல் நோய்
அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களாகவோ அல்லது கல்லீரலில் ஏதேனும் நோய் ஏற்பட்டாலோ கல்லீரல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு, பற்களின் ஈறுகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தலாம்.
ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக
கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு பொதுவாக இரண்டாவது அல்லது மூன்றாவது மாதத்தில் இருந்து எட்டாவது மாதம் வரை ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்களால் ஈறுகளில் வலி, வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு போன்றவை நிகழும்.
ஈறு இரத்தப்போக்கை தடுக்கும் முறைகள்
ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்கைத் தடுக்க சில குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
பல் துலக்குதலைச் சரிபார்த்தல்
ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், பல் துலக்குதலை கட்டாயம் மாற்ற வேண்டும். அதாவது, பல் துலக்குதல் கடினமாக இருப்பின், இரத்தப்போக்கு ஏற்படும். இதற்குப் பதிலாக மென்மையான முட்கள் கொண்ட துலக்குதலைப் பயன்படுத்தலாம்.
ஓய்வெடுப்பது
போதுமான தூக்கம் இல்லாத போது உடலில் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன் அதிகமாகிறது. இது உடலின் பிற பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே போதுமான தூக்கம் பெறுவது அவசியமாகும்.
சீரான உணவு
வைட்டமின் சி, கே, கால்சியம் போன்றவை நிறைந்த சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்களின் உதவியுடன் ஈறுகளின் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
மருத்துவரை எப்போது அணுகலாம்?
நாம் முன்பே பார்த்தது போல, ஈறுகளில் இரத்தப்போக்கு ஒரு பொதுவான பிரச்சனையாகும். எனினும், ஈறுகளில் நீண்ட நேரம் இரத்தப்போக்கு நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Toothpick Side Effects: பற்களில் சிக்கிய உணவுகளை எடுக்க குச்சி யூஸ் பண்றீங்களா? அப்ப இத முதல்ல பாருங்க
Image Source: Freepik