$
How To Treat Nosebleeds During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பெண்களின் உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் ஒன்றாகவே சில பெண்களுக்கு சில நேரங்களில் மூக்கில் இரத்தப் போக்கு ஏற்படும் பிரச்சனையும் அடங்கும்.
இதனைத் தவிர்க்க சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனினும், இது பெரிய பிரச்சனை ஏதுமில்லை. கர்ப்ப காலத்தில் மூக்கில் இரத்தப்போக்கு பிரச்சனையைத் தவிர்க்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Stomach Gas Remedies: வயிறு உப்புசத்தால் அவதியா? எளிதில் சரியாக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் இதோ
கர்ப்ப காலத்தில் மூக்கில் இரத்தப்போக்கத் தடுப்பது எப்படி?
கர்ப்பிணி பெண்களின் மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க சில வீட்டு வைத்தியங்களைக் கையாள வேண்டும்.
வாய் வழியாக சுவாசிப்பது
கர்ப்ப காலத்தில் மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படின், மூக்கு வழியாக சுவாசிக்காமல் வாய் வழியாக சுவாசிப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் மூக்கு வழியாக சுவாசிப்பது பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம். இதற்கு மாற்றாக, வாய் வழியாக சுவாசிப்பது மூக்கில் அழுத்தம் கொடுக்காது. இந்த சமயத்தில் வாயை மேல்நோக்கி வைத்து சுவாசிப்பது நல்லது.

நேராக நிற்பது
கர்ப்பிணி பெண்களுக்கு மூக்கில் இரத்தம் வந்தால், நேராக உட்கார்ந்து அல்லது படுத்துக் கொள்ள வேண்டும். பின் தலையை மேல்நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கார்ந்து கொள்வதால் மூக்கில் இரத்தம் வரும் பிரச்சனை குறையலாம். இந்த நிலையில் இருப்பது இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Knee Pain Oil: மூட்டு வலி டக்குனு குறைய இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க.
குளிர் அழுத்தம் செய்வது
கர்ப்ப காலத்தில் மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க குளிர் அழுத்தத்தைத் தேர்வு செய்யலாம். குளிர் அழுத்தத்தைப் பயன்படுத்துவது, இரத்த நாளங்களின் சுருக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இவை மூக்கில் ஏற்படும் இரத்தபோக்கை குறைக்கிறது. இதற்கு ஐஸ் துண்டுகளை உடைத்து, துணி ஒன்றில் வைத்து மூக்கை சுற்றி தடவலாம்.
சுற்றுப்புறச்சூழலை குளிர்ச்சியாக வைப்பது
கர்ப்ப காலத்தில் மூக்கில் இரத்தம் வடிதல் பிரச்சனையைச் சந்திப்பவர்கள் சுற்றுச்சூழலையும் கவனித்துக் கொள்வது அவசியமாகும். ஏனெனில், சில நேரங்களில் அதிக வெப்பம் அல்லது வெப்பமான சூழல் காரணமாக மூக்கில் இருந்து இரத்தம் வரலாம். அதிக வெப்பநிலையால், நாசி குழாய்கள் விரிவடைந்து, மூக்கில் இருந்து இரத்தம் வரும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம், கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மூக்கில் ஏற்படும் இரத்தப்போக்கு பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஆஸ்துமா நோயாளிகள் இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும் வீட்டு வைத்தியம்
Image Source: Freepik