Ways To Get Rid Of Winter Headache: நெருங்கி வரும் குளிர்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திப்பர். அந்த வகையில், குளிர்காலத்தில் ஒற்றைத் தலைவலி என்பது குளிர்காலப் பிரச்சனைகளில் பொதுவான ஒன்றாகும். எனினும், ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக பிரச்சனையைச் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் குறைந்தளவு தண்ணீர் குடிப்பது, அதிகம் சாப்பிடுவது போன்ற பழக்க வழக்கங்களுக்கு மாறலாம்.
இதனால், உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை குளிர்கால ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தலாம். இதிலிருந்து விரைவில் நிவாரணம் பெறுவது அவசியமாகும். குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இணை இயக்குநர்- நரம்பியல் டாக்டர் வினித் பங்கா அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
குளிர்கால ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடுவது எப்படி?
குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட சில வாழ்க்கை முறை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
நீரேற்றமாக வைத்திருப்பது
குளிர்காலத்தில் ஏற்படும் நீரிழிவு பிரச்சனை ஒற்றைத் தலைவலிக்கு ஒரு காரணமாகும். குளிர்காலத்தில் இயற்கையாகவே, நமது உடல் நீர் உட்கொள்ளலைக் குறைக்கிறது. இதனால், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். எனவே, குளிர்காலத்தில் ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட போதுமான அளவு நீரை உட்கொண்டு உடலை நீரேற்றமாக வைக்க வேண்டும்.
மருந்து எடுத்துக் கொள்வது
சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம், குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம். லேசான தலைவலி இருப்பதை உணர்ந்தால், உடனடியாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறிய உணவைத் தேர்ந்தெடுப்பது
ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஏற்படின், நீண்ட நேரம் பசியுடன் இருப்பது வலியின் அபாயத்தை அதிகரிக்கலாம். இதனால், நரம்புகள் பாதிக்கப்பட்டு ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். எனவே பகலில் சிறிய உணவைத் திட்டமிட்டு எடுத்துக் கொள்வது பிரச்சனையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
காஃபி உட்கொள்ளலைக் குறைப்பது
காஃபி உட்கொள்ளல் அதிகம் காரணமாக பலரும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையை அனுபவிப்பர். அதாவது, அதிகப்படியான காஃபின் நுகர்வு ஒற்றைத் தலைவலி பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும், ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
உணவில் கவனம் செலுத்துதல்
குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையைக் கட்டுப்படுத்த, உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு, நிபுணர்கள் கடல் சார்ந்த உணவை பரிந்துரைக்கின்றனர். இதனுடன், கூடுதலாக உணவில் அதிக காய்கறிகள், பழங்கள் உட்கொள்வதை முக்கியமாகக் கருதுகின்றனர்.
வெயிலில் செல்வது
குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாகவே காணப்படும். ஆனால், ஒற்றைத் தலைவலில் சூரிய ஒளி கிடைக்காத போதும் ஏற்படலாம். எனவே, சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பது ஒற்றைத் தலைவலி பிரச்சனையிலிருந்து விடுபட வைக்கிறது.
ஈரப்பதம் கொண்ட நெருப்பு பயன்பாடு
மிகவும் குளிராக உணர்ந்தால், வீட்டில் ஈரப்பதம் கொண்ட நெருப்பை பயன்படுத்தலாம். இது அறையில் வெப்பத்தை பராமரிக்கவும், ஒற்றைத் தலைவலி அபாயத்தை குறைப்பதாகவும் அமைகிறது. மேலும், வானிலைக்கு ஏற்றவாறு ஆடைகளை அணிய வேண்டும்.
இந்த குறிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
Image Source: Freepik