Rain In Tamil Nadu: தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, தமிழ்நாட்டை நோக்கி வந்துக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி புயலாக வலுபெறும் எனவும், டிசம்பர் 4ஆம் தேதி அன்று வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயலாக கரைய கடக்கும் என்றும் வானைலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) என்று பெயரிடப்பட்டுள்ளது.

மழைக்கால நோய்கள் (Common Rain Diseases)
பெய்து வரும் கனமழையால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக மழை காலத்தில் நோய்கள் அதிகம் பரவும். குறிப்பாக மலேரியா, வயிற்றுப் போக்கு, டெங்கு காய்ச்சல், டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் பரவும். இது போன்ற நோய்களில் இருந்து உங்களை எப்படி காத்துக்கொள்வது என்பதை இங்கே காண்போம்.
மழைக்கால நோய்களும் தடுக்கும் முறைகளும் (Common Monsoon Diseases Prevention Tips)
* மழைக்கால நோய்களில் மலேரியா முதல் இடம் வகிக்கிறது. இது பெண் அனாஃபிலிஸ் கொசுக்களால் உருவாகிறது. இந்த கொசுக்கள் தேங்கி இருக்கும் நீரில் இருந்து இனப்பெருக்கம் செய்கிறது. இதனை தடுக்க, தண்ணீர் தேங்கும் இடங்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
* மழைக்காலத்தில் எளிதில் தாக்கப்படும் நோய்களில் ஒன்று வயிற்றுப் போக்கு. மழைக்காலத்தில் போதுமான சுகாதாரம் இல்லாமையால், இது பரவும். குடிக்கும் தண்ணீரில் இருந்து, சாப்பிடும் உணவு வரை எல்லாவற்றிலும் சுகாதாரம் தேவை. இதற்கு சாப்பிடும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். மேலும் மழைக்காலத்தில் ஈ, கொசு போன்றவை அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் வீட்டில் உள்ள உணவுப்பொருட்களை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும்.
* மழைக்காலத்தில் கொசுவின் இனப்பெருக்கம் அதிகமாவதால், டெங்கு காய்ச்சல் அதிகரிக்கிறது. இந்த நோய் பரவுவதற்கான டைகர் கொசுக்கள் தான். இந்த கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதற்கு கொசு மருந்து போன்ற பூச்சி விளக்கிகளை
* டைபாய்டு நோய் தண்ணீரால் பரவக்கூடியது. எஸ்.டைஃபி என்ற பாக்டீரியா காரணமாக இது ஏற்படுகிறது. இது நோய் வராமல தடுக்க கைகளை நன்கு கழுவ வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். நம் இருப்பிடத்தையும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.
* மழைக்காலத்தில் தண்ணீரால் பரவும் நோய் மஞ்சள் காமாலை. இதனை தடுக்க கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும். வெளி உண்வுகளை தவிர்க்க வேண்டும்.
மேற்கூறிய தடுப்பு முறைகளை பின்பற்றி மழைக்காலத்தில் ஏற்படும் நோயில் இருந்து உங்களை நீங்கள் காத்துக்கொள்ளுங்கள். அவசர நிலை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
Image Source: Freepik