Waterborne Diseases In Children: மிக்ஜாம் புயல் (michaung cyclone) காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னை போன்ற சில முக்கிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தற்போது மழை ஓந்தப்பின்னும் வெள்ளம் நீரை நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெய்து வந்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சரி செய்யும் வரை குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தேங்கியுள்ள நீரினால் பரவும் நோய்கள் குழந்தைகளை பாதிக்கலாம். இந்த நேரங்களில் குழந்தைகளை என்ன நோய்கள் பாதிக்கும் என்பதையும், அதை தடுக்கும் முறை குறித்தும் இங்கே காண்போம்.

காலரா
காலரா தேங்கியுள்ள நீரில் இருந்து பரவும் நோய். இது பாக்டீரியாவால் உண்டாகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இந்த நோய்கள் விரைவாக குழந்தைகளை தாக்கும். இதனால் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது கைகளை நன்கு கழுவிக்கொள்ளவும். இந்த நேரங்களில் குழந்தைகளுக்கு முடிந்த வரை வீட்டில் செய்த உணவை கொடுக்கவும். வெளியில் வாங்கித்தருவதை தவிர்க்கவும். மேலும் கழிவறையை சுற்றமாக வைத்துக்கொள்ளவும்.
உங்கள் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தால், அது காலராவாக இருக்கலாம். உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச்செல்லவும். மேலும் காலரா தடுப்பூசியை மருத்துவரின் பரிந்துரையோடு, குழந்தைகளுக்கு போட வேண்டும்.
டெங்கு
தேங்கியுள்ள நீரில் இருந்து உருவாகும் கொசுவால், டெங்கு நோய் பரவுகிறது. இந்த கொசு நம்மை கடிக்கும் போது, அதன் வைரஸ் நேரடியாக இரத்தத்தில் கலக்கிறது. இதனால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. குழந்தைகளை தேங்கியுள்ள நீரில் விளையாட அனுப்பாதீர்கள். மேலும் வீட்டை சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகள் தலைவலி, பலவீனம், காய்ச்சல் போன்றவற்றை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச்செல்லவும். இது டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம். டெங்குவில் இருந்து உங்கள் குழந்தையை காக்க, பூச்சி விரட்டிகளை பயன்படுத்தவும். மேலும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
டைஃபாய்டு
நீரினால் பரவும் நோயில் டைஃபாய்ட் முக்கியமான ஒன்று. அசுத்தமான நீரினால் இது பரவுகிறது. இது சால்மோனெல்லா பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
உங்கள் குழந்தைகள் காய்ச்சல், வயிற்று வலி, கடுமையான தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச்செலுங்கள். இது டைஃபாய்டு அறிகுறியாக இருக்கலாம். இதனை தடுக்க தடுப்பூசி போட்டு விடவும். மேலும் வெளி உணவை தவிர்க்கவும்.
Image Source: Freepik