Foods To Eat For Water Borne Diseases: மழைக்காலத்தில் பலரும் பல்வேறு நோய்த் தொற்றுக்களால் பாதிப்படைகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் நீர் மூலம் பரவும் நோய்களான காலரா, வயிற்றுப்போக்கு, இரைப்பை குடல் அழற்சி, டைபாய்டு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பெரும்பாலான நீரினால் பரவும் நோய்த்தொற்றுக்களைச் சரியான முறையில் கவனிக்கப்படாவிட்டால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும். மேலும், இந்த காலகட்டத்தில் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகமாக வைத்திருக்க வேண்டும். உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், நீர் மூலம் பரவும் நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Cumin Powder Benefits : சீரகப் பொடியை இப்படி குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நீர் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள்
மஞ்சள்
பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட உணவுப் பொருள்களில் ஒன்று மஞ்சள். இது பல்வேறு பிரச்சனைகளுக்குச் சிறந்த வீட்டு வைத்தியமாகச் செயல்படுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மழைக்காலத்தில் மஞ்சள் கலந்த பால் எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு நன்மையைத் தருகிறது.
புதினா
இதில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. பருவ மழைக்கு புதினாவை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு நன்மையைத் தரும். மேலும் இவை நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. புதினாவை உட்கொள்வது செரிமானம் மற்றும் தொண்டை புண் போன்றவற்றிற்கு நல்லது. புதினா தேநீர் அருந்தலாம் அல்லது நேரடியாக சிறிதளவு புதினாவை மென்று சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Saffron Tea Benefits: மூட்டுவலி காணாமல் போக சூப்பரான இந்த டீ குடிங்க.
வெந்தய விதைகள்
வெந்தய விதைகளில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. இந்த விதையில் நோயெதிர்ப்புச் சக்திகள் நிறைந்துள்ளன. முந்தைய நாள் இரவில் ஊறவைத்த வெந்தய விதைகளை எடுத்துக் கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. வெந்தய விதைகள் வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
துளசி
இன்று பெரும்பாலானோர் வீட்டில் துளசி செடிகள் வைத்திருப்பதைக் கண்டிருப்போம். இதன் இலைகள் அதீத மருத்துவ குணம் வாய்ந்தவையாகும். துளசி இலைகளை எடுத்துக் கொள்வது ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து தடுக்க உதவுகிறது. இவற்றில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
பூண்டு
இந்திய உணவுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிறந்த உணவாகும். இதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுகிறது. எனவே தினசரி உணவில் கணிசமான அளவு பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pineapple Juice Benefits: அன்னாசிப்பழச் சாறு குடிச்சா இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கும்
Image Source: Freepik