Saffron Tea Health Benefits: குங்குமப்பூவை உணவுப் பொருளாக சேர்ப்பது மட்டுமல்லாமல், சருமப் பராமரிப்புப் பொருள்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குங்குமப்பூவை அடிக்கடி சேர்த்துக் கொள்வது பல்வேறு விதமான நன்மைகளைத் தருகிறது. குங்குமப் பூவை சரியான அளவில், சரியான முறையில் எடுத்துக் கொள்வதே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். அதன் படி, உடல் எடையைக் குறைக்க, மூட்டு வலிக்குத் தீர்வாக மற்றும் இன்னும் பிற ஆரோக்கிய நன்மைகளைத் தரும் விதமாக குங்குமப்பூ அமைகிறது. இதில் குங்குமப்பூ டீ எடுத்துக் கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
குங்குமப்பூ டீ
குங்குமப்பூவைக் கொண்டு தயாரிக்கப்படுபவை, உடல் ஆரோக்கியத்தில், பல்வேறு அற்புத மாற்றங்களை நிகழ்த்துகிறது. குங்குமப்பூவை பால், கீர் அல்லது இனிப்புகளுடன் சேர்த்து சுவைத்திருப்போம். ஆனால், குங்குமப்பூ டீ அருந்துவதும் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இதற்கு குங்குமப்பூவில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துகளான சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் சி போன்றவையே ஆகும்.
முக்கிய கட்டுரைகள்

குங்குமப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
குங்குமப்பூவில் உள்ள பண்புகள் மன ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். இந்த தேநீர் மனச்சோர்வின் மேம்பட்ட அறிகுறிகளுக்கு உதவுவதாக அமைகிறது. குங்குமப்பூ டீ அருந்துவதால் உடல் ஆரோக்கியத்திற்குக் கிடைக்கும் பல்வேறு நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Acute Kidney Disease: கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்
நினைவாற்றலை மேம்படுத்த
நினைவாற்றல், கவனம் மற்றும் செறிவு போன்றவற்றை அதிகரிப்பதில் குங்குமப்பூ டீ உதவுகிறது. இதில் குரோசின் மற்றும் குரோசெடின் போன்றவை நிறைந்துள்ளன. இவை நினைவாற்றல் மற்றும் கற்றல் தொடர்பான பிரச்சனைகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற மூளை தொடர்பான பிரச்சனைகளுக்கும் குங்குமப்பூ உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க
உடல் எடையைக் குறைக்க குங்குமப்பூ டீ உதவுகிறது இவற்றைச் சரியான அளவில் எடுத்துக் கொள்வது, உடலை சரியான எடையுடன் வைக்க உதவும். இவை நம் உடலில் மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தி, வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இவற்றை எடுத்துக் கொள்வது கலோரிகளைக் குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியத்தை மேம்படுத்த
குங்குமப்பூ தேநீர் அருந்துவது கெட்ட கொலஸ்ட்ரால், திசுக்களை சேதப்படுத்தும் வாய்ப்புகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய பிரச்சனைகளுக்கு எதிராக பாதுகாப்பு விளைவை உருவாக்குகிறது. மேலும், இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
புற்றுநோய்க்கு எதிராக
குங்குமப்பூவில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் நிறைந்துள்ளன. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலை நச்சு இராசயனங்களுக்கு எதிராக பாதுகாப்பை ஊக்குவிக்கிறது. மேலும் இதில் உள்ள ஃபிளவனாய்டுகள் பூஞ்சைகள் மற்றும் பிற நோய்களைத் தடுக்க உதவுகின்றன. கூடுதலாக குங்குமப்பூ எடுத்துக் கொள்வது சில வகையான புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.
மூட்டு வலிக்குத் தீர்வாக
இன்றைய மோசமான வாழ்க்கை முறை சூழலில், பலரும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். இந்த மூட்டு வலியைக் குறைக்க குங்குமப்பூ உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், மூட்டுவலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
இதய நோய்களைத் தடுக்க
குங்குமப்பூ டீ கலவையில் கெட்ட செல்களை அழிக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இவை நம் இதயத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுடன், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ragi Benefits: நீங்க எப்போதும் இளமையா இருக்கணுமா? அப்ப ராகி எடுத்துக்கோங்க.
Image Source: Freepik