What Happens If You Drink Saffron Milk Everyday: குங்குமப்பூ மிகவும் மலிவான மூலப்பொருள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. எனினும், இதன் ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாகும். உடல் ஆரோக்கியத்திற்குக் காய்கறிகள், விதைகள், பழங்கள் போன்றவை பல்வேறு நன்மைகளைத் தருகிறது. கூடுதலாக, இந்த ஆரோக்கியமான உணவுப்பொருள்களுடன், குங்குமப்பூ கலந்த பாலை தினமும் எடுத்துக் கொள்வது சிறந்த நன்மைகளைத் தரும் பானமாக அமைகிறது.
பெண்கள் பெரும்பாலானோர்க்கு சரும ஆரோக்கியத்திற்காக கர்ப்ப காலத்தில் வழங்கப்படும் சிறந்த பொருள் குங்குமப்பூ ஆகும். ஆனால், இது விலையுயர்ந்தது என்பதால், ஒரு சிலர் மட்டுமே வாங்குவர். அதே சமயம், குங்குமப்பூ பாலை தினமும் அருந்தி வருவது உடலில் பல்வேறு மாற்றங்களைத் தருகிறது. இதில் தினமும் குங்குமப்பூ பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Milk Vs Curd: குடல் ஆரோக்கியத்திற்கு எது மிகவும் நல்லது? பால் அல்லது தயிர்?
தினமும் குங்குமப்பூ பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
குங்குமப்பூ அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகும். இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உடலுக்குப் பாதிப்பை ஏற்படும் பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
மனநிலை மேம்பாட்டிற்கு
குங்குமப்பூ மனநிலை ஆரோக்கியத்தைத் தூண்டும் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே தினமும் குங்குமப்பூ பால் அருந்துவது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த
குங்குமப்பூவில் உள்ள பண்புகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) போன்றவற்றின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது.
மாதவிடாய் முன் அறிகுறிகளைக் குறைக்க
மாதவிடாய் முன் நோய்க்குறியின் அறிகுறிகளாக வீக்கம், பிடிப்புகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம். இவற்றைப் போக்க குங்குமப்பூ நிறைந்த பாலை உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Health Tips: மழைக்காலங்களில் செரிமானத்தை மேம்படுத்த இந்த ஆயுர்வேத குறிப்புகளை பின்பற்றுங்கள்!
நினைவாற்றலை அதிகரிக்க
குங்குமப்பூ அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் கலவைகளைக் கொண்டுள்ளது. இது மூளை சக்தியை அதிகரிக்க விரும்புவோர்க்கு சிறந்த பானமாகக் கருதப்படுகிறது.
ஆற்றலை அதிகரிக்க
குங்குமப்பூ பால் உட்கொள்வது உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், சர்க்கரை அல்லது காஃபின்களுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.
சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்க
குங்குமப்பூவில் சஃப்ரானால் என்ற இயற்கையான மயக்கமருந்து உள்ளது. இது ஓய்வெடுக்கவும், விரைவாக தூங்கவும் உதவுகிறது. எனவே இரவில் தூங்கும் முன் குங்குமப்பூ பால் குடிப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
சரும ஆரோக்கியத்திற்கு
குங்குமப்பூவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதன் மூலம் இளமை மற்றும் பொலிவான நிறத்தைப் பெறலாம்.
பாலில் எத்தனை குங்குமப்பூ இழைகள் பயன்படுத்தலாம்?
பொதுவான வழிகாட்டுதலின் படி, ஒவ்வொரு கப் பாலுக்கும் 5 முதல் 7 குங்குமப்பூ இழைகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் சிலர் சுவைக்கேற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயன்படுத்த விரும்புகின்றனர். இதன் வலுவான சுவை மற்றும் நறுமணத்தைக் கொண்டிருப்பதால், இதை சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக மேலும் சேர்த்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Foods For Glowing Skin: முகப்பரு இல்லாத பளபளப்பான முகம் வேண்டுமா? அப்போ இவற்றை சாப்பிடுங்க!
Image Source: Freepik