Thu Oct 29, 2026 | 12:54 PM IST

Expert

Foods For Glowing Skin: முகப்பரு இல்லாத பளபளப்பான முகம் வேண்டுமா? அப்போ இவற்றை சாப்பிடுங்க!

Foods For Glowing Skin: முகப்பரு இல்லாத பளபளப்பான முகம் வேண்டுமா? அப்போ இவற்றை சாப்பிடுங்க!Foods For Glowing Skin: முகப்பரு இல்லாத பளபளப்பான முகம் வேண்டுமா? அப்போ இவற்றை சாப்பிடுங்க!

Vitamin E-Rich Foods for Youthful Skin: சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சரியான கவனிப்புடன், சத்தான உணவும் தேவை. நமது உணவில் அனைத்து சத்துக்களும் சரியான அளவில் இல்லை என்றால், சருமம் மந்தமாகி, சேதமடையும். சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் ஈ. இதை நமது உணவில் சேர்க்க நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்.

இது நமது சருமத்தின் பளபளப்பு மற்றும் ஊட்டச்சத்திற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் ஈ நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் சருமம் மற்றும் முகப்பரு பிரச்சினைகளை போக்கலாம். அந்தவகையில், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்ற உணவில் சேர்க்கக்கூடிய வைட்டமின் ஈ கொண்ட உணவுப் பொருட்களின் பட்டியலை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

வைட்டமின் ஈ நிறைந்த உணவுப் பொருட்கள்

பாதம்

பாதாம் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது, இது சருமத்தை வறட்சி மற்றும் சுருக்கங்களிலிருந்து பாதுகாக்கிறது. இது மட்டுமின்றி, பாதாமில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. தினமும் வெறும் 4 முதல் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால், சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

ப்ரோக்கோலி

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, ப்ரோக்கோலியில் போதுமான அளவு வைட்டமின் ஈ உள்ளது, இது சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, ப்ரோக்கோலியில் ஜிங்க் மற்றும் ஃபைபர் ஏராளமாக உள்ளது, இது குடலை ஆரோக்கியமாக வைத்து சருமத்தை பளபளக்க உதவுகிறது.

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின் ஈ உள்ளது. இது வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைத் தடுக்க உதவுகிறது.

நிலக்கடலை

வைட்டமின்-ஈ நிறைந்த வேர்க்கடலை சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. வேர்க்கடலையை உட்கொள்வதால் சருமத்தில் ஏற்படும் தொற்றுகளையும் தடுக்கலாம். இது தவிர, சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. நிலக்கடலையை தொடர்ந்து உட்கொள்வதால் முகப்பரு மற்றும் பருக்கள் பிரச்சனை வராது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கீரை

பச்சைக் காய்கறிகள் அதாவது கீரைகள் ஆரோக்கியம் நிறைந்தவை. இதனை தினமும் உட்கொள்வதால் உடலில் இரத்தப் பற்றாக்குறை ஏற்படாது. இது தவிர, வைட்டமின் ஈ உடன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் கே போன்ற பல ஊட்டச்சத்துக்கள் கீரையில் உள்ளன. வைட்டமின் ஈ காரணமாக, இது மெல்லிய கோடுகளை குறைக்க உதவுகிறது.

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, வைட்டமின் ஈ நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் தோல் தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்கலாம், ஆனால் அடிக்கடி தோல் மற்றும் குடல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் நிபுணர் அல்லது மருத்துவரை அணுக வேண்டும். ஆலோசனையைப் பெற வேண்டும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Iron Boosting Seeds: இரும்புச்சத்து கம்மியா இருக்கா? இந்த விதைகளை சாப்பிடுங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.