Fri Sep 11, 2026 | 11:44 PM IST

Glowing Skin Tips: சருமத்தில் இயற்கையான பொலிவை பெற மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க!

Turmeric Face Packs For Natural Glow In Winters: மஞ்சள் கிட்டத்தட்ட ஒவ்வொரு சமையலறையிலும் பயன்படுத்தப்படும் பிரபலமான மசாலா பொருட்களில் ஒன்று. பாட்டி காலத்திலிருந்தே, மஞ்சளைப் பயன்படுத்தி பல சருமப் பிரச்சனைகளுக்கு நாம் மஞ்சள் பயன்படுத்தி வருகிறோம். மஞ்சள் சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும், களங்கமற்றதாகவும் ஆக்குகிறது. இதில், உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தழும்புகளை நீக்குவது மட்டுமின்றி சருமத்தை பளபளப்பாக மாற்றும்.

பெரும்பாலும், குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று காரணமாக, தோல் மிகவும் வறண்டு போவதோடு, பளபளப்பும் குறைகிறது. இந்நிலையில், மஞ்சள் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொண்டுவரும் மற்றும் பருக்கள் குறையும். மஞ்சள் சருமத்தை உள்ளிருந்து பளபளப்பாக்குவதுடன், நிறத்தையும் மேம்படுத்துகிறது. குளிர்காலத்தில் சருமத்தில் இயற்கையான பளபளப்பைப் பெற மஞ்சள் ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இந்த பதிவும் உதவலாம் : Skin Whitening: வெறும் 7 நாளில் வெள்ளையாக கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!

மஞ்சள் மற்றும் பாதாம் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

பாதாம் பவுடர் - 2 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்.
பால் - 3 ஸ்பூன்.

மஞ்சள் மற்றும் பாதாம் ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

மஞ்சள் மற்றும் பாதாம் தூள் ஃபேஸ் பேக் செய்ய, அனைத்து பொருட்களையும் கலந்து கெட்டியான கலவையை உருவாக்கவும். இப்போது இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் 20 நிமிடங்கள் தடவவும். அதன் பிறகு முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த பேக் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

மஞ்சள் மற்றும் முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

முல்தானி மிட்டி - 2 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்.
தயிர் - 2 ஸ்பூன்.

மஞ்சள் மற்றும் முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

மஞ்சள் மற்றும் முல்தானி மிட்டியை ஃபேஸ் பேக் செய்ய, எல்லாவற்றையும் நன்கு கலந்து ஒரு பேஸ்ட் உருவாக்கவும். இப்போது இந்த கலவையை முகத்தில் 15 நிமிடங்கள் தடவி வைக்கவும். அதன் பிறகு முகத்தை கழுவவும். இந்த பேக் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து முகத்தை சுத்தப்படுத்துகிறது. இந்த பேக்கைப் பயன்படுத்துவதால் சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : எப்பவும் அழகா இளமையா தெரியனுமா? இந்த 2 பொருட்களை முகத்தில் தடவுங்க!

மஞ்சள் மற்றும் உளுந்து மாவு ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்.
கிரீம் - 2 ஸ்பூன்.

மஞ்சள் மற்றும் உளுந்து மாவு ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

மஞ்சள் மற்றும் உளுந்து மாவுடன் ஃபேஸ் பேக் செய்ய, அனைத்து பொருட்களையும் கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் 20 நிமிடங்கள் தடவவும். அதன் பிறகு முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த பேக் சருமத்திற்கு ஊட்டமளித்து, நிறத்தை மேம்படுத்துகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.

இந்த பதிவும் உதவலாம் : Glowing Skin: குளிர்காலத்தில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் 5 காய்கறி ஃபேஸ் பேக்!

குளிர்காலத்தில் சருமத்தில் இயற்கையான பளபளப்பைக் கொண்டுவர இந்த பேக்கை பயன்படுத்தலாம். இருப்பினும், முகத்தில் தடவுவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Acne: குளிர்காலத்திலும் முகப்பரு பிரச்சனை வருகிறதா? காரணமும், தீர்வும் இதோ..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content