Turmeric Face Pack For Glowing Skin: முகம் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். சருமத்தில் முகப்பரு, வடுக்கள், கருமை நிறம் போன்றவை தோன்ற முக்கிய காரணம் மாசு, ஆரோக்கியம் மற்றும் சருமத்தின் மீதான கவனக் குறைவே ஆகும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட பெண்கள் பல்வேறு அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது ஆயிரக்கணக்கில் செலவழிப்பதுடன், விளைவுகளைத் தருவதாகவும் அமைகிறது.
இதனைத் தவிர்க்க இயற்கையான முறைகளைக் கையாள்வது நல்லது. இயற்கையான முறைகளின் மூலம் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கலாம். அந்த வகையில் சருமத்தைப் பொலிவாக்க உதவும் இயற்கை பொருளாக மஞ்சள் உதவுகிறது. மஞ்சளுடன் சில பொருள்களைக் கலந்து ஃபேஸ் பேக்காக தயார் செய்து சருமத்திற்கு பயன்படுத்துவது சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dragon Fruits For Skin: டிராகன் பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க! தகதகனு ஜொலிப்பீங்க!
சருமத்திற்கு ஏன் மஞ்சள்
மஞ்சளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்து பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கிறது. மேலும் இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், கிருமி நாசினிகள் போன்றவை முகப்பரு பிரச்சனையை அகற்ற உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
மஞ்சள் ஃபேஸ் பேக் தயார் செய்யும் முறை
மஞ்சளுடன் மற்ற சில இயற்கைப் பொருள்களைக் கலந்து தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். இது சருமத்தைப் பொலிவாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.
மஞ்சளுடன் தயிர்
தயிரில் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இது சருமத்தை பளபளப்பாக மற்றும் மென்மையாக வைக்க உதவுகிறது. மஞ்சளுடன் தயிர் கலந்து பயன்படுத்துவது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தின் பொலிவை அதிகரிக்கிறது. சிலருக்கு தயிர் ஒவ்வாமை ஏற்படலாம். எனவே அவர்கள் பச்சைப் பாலையும் தேர்வு செய்யலாம்.
எலுமிச்சை மற்றும் மஞ்சள்
எலுமிச்சைப் பழத்தில் வைட்டமின் சி ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இது சருமத்தைப் பொலிவாக்கி புத்துணர்ச்சியைத் தருகிறது. மஞ்சள் தூளில் எலுமிச்சை சாறு கலந்து சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து பின் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இந்த ஃபேஸ்பேக்கை வாரம் இருமுறை பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்க சூப்பர் வீட்டு வைத்தியம்!
தேனுடன் மஞ்சள்
சருமத்தைப் பளபளப்பாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும் சரும பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் மஞ்சளுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம். இவை இரண்டுமே சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு பண்புகளைக் கொண்டுள்ளன.
கற்றாழை மற்றும் மஞ்சள்
மஞ்சள் மற்றும் கற்றாழை இரண்டிலுமே ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. கற்றாழை மற்றும் மஞ்சள் கலவையைச் சேர்த்து சருமத்தில் பயன்படுத்துவது முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை சருமத்திற்குத் தடவலாம்.
மஞ்சளுடன் ரோஸ்வாட்டர்
மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டரில் கிருமி நாசினிகள் நிறைந்துள்ளது. இவை சருமத்தை குளிர்ச்சியாக வைத்து சருமப் பொலிவை அதிகரிக்கிறது. இதற்கு மஞ்சளில் ரோஸ் வாட்டரைக் கலந்து சருமத்தில் தடவி அரை மணி நேரம் வைக்கவும். அதன் பிறகு தண்ணீரில் கழுவி விடலாம். மஞ்சள் மற்றும் ரோஸ்வாட்டர் ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தலாம்.
மஞ்சள் கலந்த இந்த ஃபேஸ் பேக்குகளை சருமத்திற்கு பயன்படுத்துவது சருமத்தைப் பொலிவாக வைப்பதுடன், பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Amla Benefits For Face: ஆம்லாவை இப்படி யூஸ் பண்ணா முகத்தில் இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்!
Image Source: Freepik