$
How To Use Dragon Fruits For Skin: விலை அதிகமாக இருந்தாலும், டிராகன் பழத்தை வாங்க மக்கள் முன்வருகின்றனர். டிராகன் பழம் ஒரு வெப்பமண்டல பழம். இந்த பழம் சுவையானது மட்டுமல்ல, மிகவும் சத்தானதும் கூட. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்தப் பழம் உடலின் உட்புறத்திலிருந்து ஆற்றலைத் தருவதோடு, வெளியில் இருந்து அழகை அதிகரிக்கவும் உதவுகிறது.
உங்கள் சருமத்தி டிராகன் பழத்தை எப்படி பயன்படுத்துவது? இதனால் சருமத்திற்கு என்னென்ன நன்மைகள் உள்ளன? இதற்கான விளக்கத்தை இங்கே காண்போம்.

சருமத்திற்கு டிராகன் பழத்தால் என்ன நன்மை? (Dragon Fruits For Skin)
சரும பராமரிப்பின் சிறந்த மூலப்பொருளாக டிராகன் பழம் திகழ்கிறது. இது சருமத்தில் சுருக்கங்களை குறைக்கவும், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை வழங்கவும் உதவுகிறது.
டிராகன் பழத்தை ஃபேஸ் பேக்காக போட்டுக்கொண்டால், அது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஈரப்பதத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது. இதற்கு இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் காரணமாகும். டிராகன் பழத்தை முகத்தில் தடவினால், வீக்கம் குறையும் மற்றும் எண்ணெய் பசை கட்டுப்படும்.

சருமத்தி டிராகன் பழத்தை எப்படி பயன்படுத்துவது? (How To Use Dragon Fruits For Skin)
* முதலில் நீங்கள் ஒரு பழுத்த டிராகன் பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* பின்னர் டிராகன் பழத்தை பாதியாக வெட்டி, தோல் மற்றும் விதைகளை நீக்கிக்கொள்ளவும்.
* இப்போது அதனை நன்கு மசித்துக்கொண்டு, முகத்தில் தடவிக்கொள்ளவும்.
* இந்த ஃபேஸ் பேக்கை 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விடவும்.
* பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
* சுத்தமான துண்டை கொண்டு முகத்தை மெதுவாக துடைக்கவும்.
* டிராகன் ஃப்ரூட் பேஸ்ட்டைப் பயன்படுத்திய பிறகு உங்கள் முகத்தில் மாய்ஸ்சரைசர் அல்லது இயற்கை எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
Image Source: Freepik