How to use turmeric and camphor for acne and pimples: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சருமம் தொடர்பான பிரச்சனைகளும் அடங்கும். அதாவது சருமத்தில் எரிச்சல், அரிப்பு, வடுக்கள், மெல்லிய கோடுகள் உள்ளிட்ட பல சரும பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, பெரும்பாலான நேரங்களில் நாம் சந்திக்கும் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாக கொப்புளங்கள் தோன்றுவதாகும்.
பொதுவாக நீண்ட நேரம் சருமத்தை பராமரிக்காததன் காரணமாக, சரும செல்களில் அழுக்கு சேரத் தொடங்கலாம். இதனால் முகப்பரு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகிறது. இது தவிர, சூரிய ஒளி மற்றும் அழுக்கு காரணமாகவும் சருமத்தில் அழுக்கு சேர்வதுடன், முகப்பருவுக்கு வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: சருமத்தைப் பொலிவாக்க மஞ்சள் யூஸ் பண்றீங்களா? அப்ப இந்த ஒரு பொருளையும் சேர்த்துக்கோங்க
சரும பராமரிப்பு முறைகள்
சருமத்தில் ஏற்படும் இது போன்ற பிரச்சனையிலிருந்து விடுபட மக்கள் பலரும் மருத்துவ மற்றும் சரும பராமரிப்பு முறைகளைக் கையாள்கின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக சந்தையில் கிடைக்கும் பொருட்களில் பெரும்பாலும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சிலர் அவற்றைப் பயன்படுத்துவதன் காரணமாக பக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். இதிலிருந்து விடுபட சரும பராமரிப்பு முறையில் சில இயற்கையான பொருள்களைக் கையாளலாம்.
அவ்வாறு சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் மஞ்சள் மிகவும் நன்மை பயக்கும். அதே சமயம், மஞ்சளைத் தணித்து பயன்படுத்துவதைக் காட்டிலும் இன்னும் சில பொருள்களை சேர்த்து பயன்படுத்துவது கூடுதல் நன்மைகளைத் தரும். அவ்வாறு சரும ஆரோக்கியத்தில் மஞ்சள், கற்பூரம் இரண்டுமே முக்கிய பங்கு வகிக்கிறது. இவை இரண்டும் வீக்கத்தைக் குறைக்க உதவுவதுடன், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகிறது.
மஞ்சள் மற்றும் கற்பூர ஃபேஸ் பேக் தயார் செய்யும் முறை
- இந்த ஃபேஸ் பேக்கைத் தயார் செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் அளவிலான மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு இதில் 2 சிட்டிகை கற்பூரப் பொடியைச் சேர்க்கலாம். இதற்கு நீங்கள் ஆர்கானிக் கற்பூரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- இதனுடன் 2 டீஸ்பூன் சந்தனப் பொடியைச் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யலாம்.
- முகப்பரு லேசானதாக இருந்தால் மட்டும் இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்த வேண்டும். முதலில் முகத்தைத் தண்ணீரில் கழுவி, அதன் பிறகு இதைப் பயன்படுத்தலாம். இதை சருமத்தில் குறைந்தது 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் முகத்தை வெற்று நீர் கொண்டு கழுவ வேண்டும். இந்த ஃபேஸ்பேக்கை சருமத்திற்கு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தடவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Powder Or Raw Turmeric: மஞ்சள் தூளை விட பச்சை மஞ்சள் சிறந்ததா? எதை எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
சருமத்திற்கு மஞ்சள் மற்றும் கற்பூர ஃபேஸ் பேக் தரும் நன்மைகள்
- மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
- மேலும், இதில் சேர்க்கப்படும் சந்தனம் குளிர்ச்சியான விளைவுகளைக் கொண்டுள்ளது. இவை முகத்திற்கு பளபளப்பைத் தருவதுடன், சருமத்தில் ஏற்படும் அரிப்பைக் குறைக்கிறது.
- பெரும்பாலும் தோல் அழற்சியின் காரணமாக முகப்பரு பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில், தோல் அரிப்பு மற்றும் சருமத்தின் சிவத்தல் போன்றவை அதிகரிக்கலாம். இந்நிலையில், மஞ்சளைப் பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும், சருமத்தின் சிவப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
- இந்த ஃபேஸ்பேக்கை சருமத்திற்குப் பயன்படுத்துவது முகப்பரு பிரச்சனையைக் குறைக்கிறது. மேலும் இது சருமத்தில் காணப்படும் மந்தமான தன்மை மற்றும் கரும்புள்ளிகளைக் குறைப்பதிலும் நன்மை பயக்கும்.
- இது சருமத்திற்கு ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் ஆக செயல்பட்டு, சருமத்தை குணப்படுத்தவும் சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
- மஞ்சள், கற்பூரம் ஃபேஸ் பேக் ஆனது சருமத்தை உரிந்து சருமத்தை பளபளப்பாக்குகிறது. மேலும் இது சருமத்தை இளமையாகக் காட்டுகிறது.
- இந்த இரண்டு பொருள்களும் சருமத்தை குளிர்விக்கவும், முகப்பருவின் விளைவுகளை குறைக்கவும் உதவுகிறது.
இது தவிர, இந்த ஃபேஸ்பேக் முகப்பருவை நீக்குவது மட்டுமல்லாமல் சருமத்திற்கு மேலும் சில நன்மைகளையும் தருகிறது.
சருமத்தைப் பளபளப்பாக்க
சருமத்தைப் பளபளப்பாக்க வைப்பதுடன், கரும்புள்ளிகள் உட்பட சீரற்ற சரும நிறத்தை நீக்குவதில் கற்பூரம் நன்மை பயக்கும். இதற்கு 2-3 கற்பூரங்களை நசுக்கி, அதை தயிர் மற்றும் தேனுடன் கலக்க வேண்டும். இந்தக் கலவையை நன்கு கலந்து முகத்தில் தடவலாம். இதை 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்க
கற்பூரம் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டதாகும். எனவே இவை சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கற்பூரம் ஆனது சருமத்தில் ஃபைப்ரோபிளாஸ்ட்களைத் தூண்டி அதிக கொலாஜன் மற்றும் எலாஸ்டினை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் காயம் விரைவாக குணமடைவதை ஊக்குவிக்கிறது. இது தவிர, பல அழகு சாதனப் பொருட்களிலும் ஒரு சக்திவாய்ந்த சுருக்க எதிர்ப்பு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric for Skin: ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போதும்... வெயிலில் கூட உங்க முகம் சும்மா தங்கம் மாதரி ஜொலிக்கும்!
Image Source: Freepik