Turmeric Face Pack: சருமத்தை பொலிவாக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்! இந்த பொருள்களோட சேர்த்து யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Turmeric Face Pack: சருமத்தை பொலிவாக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்! இந்த பொருள்களோட சேர்த்து யூஸ் பண்ணுங்க


மஞ்சளை மற்ற பிற சரும ஆரோக்கிய பொருள்களுடன் கலந்து பயன்படுத்தலாம். மஞ்சள் அழகு பராமரிப்பில் அற்புதமான துணைப் பொருளாகும். ஏனெனில், வழக்கமான அடிப்படையில் மஞ்சளை சேர்த்துக் கொள்வது துடிப்பான சருமத்தைத் தருகிறது. இயற்கையான முறையில் பளபளப்பான சருமத்தைப் பெற மஞ்சள் சிறந்த தீர்வாக அமைகிறது. இதில் மஞ்சள் கொண்டு தயார் செய்யப்படும் ஃபேஸ் பேக்குகள் சிலவற்றைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Mosambi For Face: பார்லர் போகாமல் முகம் பளபளப்பாக சாத்துகுடியை இப்படி பயன்படுத்துங்க!

மஞ்சள் ஃபேஸ் பேக்குகள்

மஞ்சளுடன் சில ஆரோக்கியமான பொருள்களைக் கலந்து பயன்படுத்துவது சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், பளபளப்பையும் தருகிறது.

மஞ்சள் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

எலுமிச்சை மற்றும் மஞ்சளில் உள்ள பண்புகள் சருமத்திற்கு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
  • தண்ணீர் - சிறிதளவு

இந்த மூன்று பொருள்களையும் கலந்த கலவையை எடுத்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். பின் இதை உலர வைத்து, 30 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.

மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் பேக்

  • மஞ்சள் - தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் - 4 முதல் 5 சொட்டுகள்

மஞ்சள், தேங்காய் எண்ணெயை சரியான அளவில் கலந்து இதை முகத்தில் தடவலாம். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக்கில் மஞ்சள், கடலை மாவு இரண்டுமே சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

  • கடலை மாவு - ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் - சில துளிகள்

இவை மூன்றையும் கலந்து தடிமனான பேஸ்ட்டை உருவாக்கி, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவலாம். இதை 20 நிமிடங்கள் உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Orange Peel Powder: இனி ஆரஞ்சு தோல தூக்கி போடாதீங்க. சருமத்திற்கு இப்படி யூஸ் பண்ணுங்க

கடலை மாவு, எலுமிச்சை மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

இதில் மூன்று பொருள்களைச் சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை தருகிறது.

  • கடலை மாவு - 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சைச் சாறு - 4-5 துளிகள்

கொடுக்கப்பட்ட இந்த அளவுகளுடன் மூன்று பொருள்களையும் கலந்து சருமத்திற்கு பயன்படுத்தலாம். பின் சிறிது நேரம் கழித்து, கழுவி விடலாம்.

மஞ்சள் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்

மஞ்சளை கற்றாழையுடன் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்திற்கு பொலிவைத் தருகிறது.

  • முல்தானி மிட்டி - 1 டீஸ்பூன்
  • தயிர் - 1 டீஸ்பூன்
  • கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - சிறிதளவு

இந்த பொருள்கள் அனைத்தையும் நன்றாகக் கலந்து, முகத்தில் சமமாக தடவி, பின் 20 நிமிடம் கழித்து கழுவலாம்.

இந்த மஞ்சள் ஃபேஸ் பேக்குகள் சருமத்திற்கு மிகுந்த நன்மையைத் தருகிறது. இதன் பல்வேறு பண்புகள் சருமத்தைப் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Heat Wave: வெப்ப அலையால் ஏற்படும் தோல் பிரச்சனைகள்.. வீட்டிலேயே சரிசெய்வது எப்படி?

Image Source: Freepik

Read Next

Heat Wave: வெப்ப அலையால் ஏற்படும் தோல் பிரச்சனைகள்.. வீட்டிலேயே சரிசெய்வது எப்படி?

Disclaimer