Urad Dal Face Pack Recipes: இன்று பலரும் சரும பராமரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகள் சில சமயங்களில் நேர்மறையான விளைவுகளையும், சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகளையும் தரலாம். ஆம். பலரும் சந்தையில் கிடைக்கும் பொருள்களையே பயன்படுத்துகின்றனர். இதில் இரசாயனங்கள் கலந்திருக்கலாம். இவற்றைத் தவிர்க்க இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தலாம்.
அந்த வகையில் சருமத்திற்கு வீட்டு சமையலில் பயன்படுத்தப்படும் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒன்றாகவே உளுத்தம்பருப்பு அமைகிறது. பொதுவாக, உளுத்தம்பருப்பை இட்லி மற்றும் தோசை போன்றவற்றில் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். இது பருப்பு வகைகளைச் சார்ந்ததாகும். உளுத்தம் பருப்பு அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. இதில் சரும ஆரோக்கியத்தில் உளுத்தம் பருப்பு பயன்படுத்துவது எப்படி என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Powder For Skin: குறைந்த நேரத்தில் சருமத்தைப் பொலிவாக்கும் ஆம்லா பவுடர்! இப்படி யூஸ் பண்ணி பாருங்க
ஏன் உளுத்தம்பருப்பு?
உளுத்தம் பருப்பில் வைட்டமின் பி, புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், உளுத்தம் பருப்பில் ஃபோலிக் அமிலம், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்றவையும் காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதனால், பெண்கள் இந்த பருப்பை அதிகமாக உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் உள்ளிருந்து ஆரோக்கியத்தைத் தருகிறது. இந்த ஆரோக்கியமான பருப்பு வகைகள் தோல் பதனிடுதல், முகப்பரு மற்றும் இறந்த சரும செல்களை நீக்குதல் போன்றவற்றில் அதிகமாக நன்மை பயக்கும். மேலும், இது போன்ற சரும பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் உளுந்து ஃபேஸ்பேக் பயன்படுத்துவது சிறந்த நன்மைகளைத் தருகிறது.
சருமத்தைப் பொலிவாக்கும் உளுத்தம் பருப்பு ஃபேஸ் பேக்
உளுத்தம் பருப்பு ஃபேஸ் ஸ்க்ரப்
சருமத்திற்கு உளுத்தம் பருப்பு ஃபேஸ் ஸ்க்ரப் பயன்படுத்துவது சருமத்தில் இறந்த செல்களை அகற்றுவதற்கு உதவுகிறது. சருமத்துளைகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது.
தேவையானவை
- உளுத்தம் பருப்பு - 1 கப் (ஊறவைத்தது)
- பால் - 2-4 தேக்கரண்டி
- கடுகு எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
- ஊற வைத்த உளுத்தம்பருப்பை தண்ணீர் சேர்க்காமல் கெட்டியான பேஸ்ட்டாக தயார் செய்ய வேண்டும்.
- இந்த விழுதை பாத்திரம் ஒன்றில் எடுத்து வைத்து, அதில் பால் மற்றும் எண்ணெய் சேர்க்க வேண்டும். இப்போது கலவை தயாராக உள்ளது.
- முகத்தைக் கழுவி, பின்னர் இந்த ஸ்க்ரப்பை முகத்திற்கு பயன்படுத்தவும். இதை மெதுவாக எக்ஸ்ஃபோலியேட் செய்து 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Flaxseed Gel: கரும்புள்ளிகளை விரைவில் மறைக்கும் ஆளி விதை ஜெல்! ஈஸியா தயார் செய்ய இந்த இரண்டு பொருள் போதும்
சரும டானை நீக்கும் உளுந்து ஃபேஸ்பேக்
கோடைக்காலம் என்றாலே சூரிய ஒளியினால் சருமத்தில் டான் உருவாகலாம். இந்த சரும டானை உளுத்தம் பருப்பைக் கொண்டு நீக்கலாம்.
தேவையானவை
- உளுத்தம் பருப்பு - 1/2 கப் (ஊறவைத்தது)
- அரிசி பவுடர் - 1/4 கப்
- எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி (வறண்ட சருமம் இருப்பின் 1/2 தேக்கரண்டி பயன்படுத்தலாம்)
செய்முறை
- முதலில் உளுத்தம் பருப்பை அரைத்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும்.
- இந்தக் கலவையை பாத்திரம் ஒன்றில் சேர்த்து அதில் அரிசி பவுடர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும்.
- இதை சுமார் 10-15 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவி விடலாம்.
- எனினும், டான் நீக்குவது மெதுவான செயல்முறையாகும். இதனால் உடனடி முடிவுகளைப் பார்க்க மாட்டீர்கள். சரியான முடிவுகளைப் பெற ஒரு வாரம் அல்லது இரு வாரங்கள் தொடர்ந்து முயற்சி செய்யலாம்.

முகப்பருவை குறைக்க உளுத்தம் பருப்பு ஃபேஸ் பேக்
முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உளுத்தம்பருப்பில் ஆன்டி செப்டிக் பண்புகள் நிறைந்துள்ளதால் இவை முகப்பருவைக் குறைக்க உதவுகிறது.
தேவையானவை
- உளுத்தம் பருப்பு - 1/2 கப் (ஊறவைத்தது)
- ரோஸ் வாட்டர்
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் (எண்ணெய் சருமம் இருப்பின் 1/2 தேக்கரண்டி பயன்படுத்தலாம்)
- கிளிசரின் - 1 1/2 தேக்கரண்டி (வறண்ட சருமம் இருப்பின் 1 தேக்கரண்டி பயன்படுத்தலாம்)
செய்முறை
- முதலில் ஊறவைத்த உளுத்தம்பருப்பை நன்றாக பேஸ்ட் செய்து, மிருதுவாக இருக்குமாறு வைத்து பாத்திரம் ஒன்றில் ஊற்றவும்.
- பின் கிளிசரின், ரோஸ் வாட்டர் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, இந்தக் கலவையை நேரடியாகப் பயன்படுத்த வேண்டும். இதை சுமார் 20-25 நிமிடங்கள் வைத்து பின்னர் கழுவி விடலாம்.
இந்த வகை உளுத்தம்பருப்பு ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ginseng For Skin: அடடே! கொரிய பெண்களின் அழகு ரகசியத்துக்கு இந்த ஒற்றை மூலிகை தான் காரணமா?
Image Source: Freepik