$
How To Make Flaxseed Gel For Skin At Home: சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். ஆனால், பல்வேறு காரணமாக சருமம் தொய்வாகி மந்தமாகவும், வயதானதாகவும் காட்டுகிறது. இதில் உணவுமுறை, மோசமான சரும பராமரிப்பு போன்ற பிரச்சனைகள் அடங்கும். இவை மிகவும் பொதுவானவை என்றாலும், சருமத்தை இறுக்கமாக்க, சில பயனுள்ள இயற்கையான வழிகளைக் கையாள வேண்டும்.
ஆளிவிதைகளின் ஊட்டச்சத்துக்கள்
இந்த விதைகள் அல்சி விதைகள் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை சருமம் முன்கூட்டியே வயதாவதைத் தடுத்து, சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
ஆளிவிதை ஜெல்
சரும ஆரோக்கியத்திற்கும், பல்வேறு சரும பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் ஆளி விதைகளைப் பயன்படுத்தலாம். அந்த வகையில் சருமத்திற்கு ஆளி விதை ஜெல்லைப் பயன்படுத்துவது சிறந்த நன்மைகளைத் தருகிறது. இதில் ஆளி விதை ஜெல் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ice Facial Benefits: வெயில் காலத்தில் சருமம் ஜில்லுனு இருக்க ஐஸ் ஃபேஷியல் செய்யுங்க
வீட்டிலேயே ஆளிவிதை ஜெல் தயார் செய்யும் முறை
தேவையானவை
- தண்ணீர் - 2 கப்
- ஆளி விதைகள் - 1/2 கப்

ஆளிவிதை ஜெல் செய்முறை
- முதலில் கடாய் ஒன்றை எடுத்து, அதில் தண்ணீர் மற்றும் விதைகளைச் சேர்க்க வேண்டும்.
- இதை மிதமான தீயில் கொதிக்க வைத்து, பொருள்களைத் தொடர்ந்து கிளற வேண்டும்.
- இதில் நீர் ஜெல்லாக மாறுவதைக் காணலாம்.
- பிறகு சுடரை அணைத்து, வடிகட்டியைப் பயன்படுத்தி ஜெல்லை வடிகட்ட வேண்டும்.
- பின் இதை குளிர்வித்து, கொள்கலன் ஒன்றில் மாற்ற வேண்டும்.
- அதன் பிறகு, இந்த ஜெல்லை குளிர்சாதன பெட்டியில் ஒரு மாதத்திற்கு சேமித்து வைக்கலாம்.
- கூடுதலாக, இந்த ஜெல்லில் வாசனை சேர்க்க சருமத்திற்கு பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்துக் கொள்லலாம்.
ஆளிவிதை ஜெல் உபயோகிக்கும் முறை
- சருமத்திற்கு ஆளி விதை ஜெல்லை மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தலாம்.
- முதலில் முகத்தை தண்ணீரில் கழுவி நன்கு உலர வைக்க வேண்டும்.
- பிறகு, சிறிது ஜெல்லை எடுத்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவ வேண்டும்.
- சருமத்தில் இந்த ஜெல்லை 10 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Ginseng For Skin: அடடே! கொரிய பெண்களின் அழகு ரகசியத்துக்கு இந்த ஒற்றை மூலிகை தான் காரணமா?
சருமத்திற்கு ஆளிவிதை ஜெல் தரும் நன்மைகள்
- சரும பராமரிப்பில் ஆளிவிதை ஜெல்லைப் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அதில் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
- ஆளிவிதை ஜெல் சருமத்தை இறுக்கமாகவும், இளமையாகவும் வைக்க உதவுகிறது.
- சருமத்தை பளபளப்பாக்க ஆளிவிதை ஜெல் உதவுகிறது.
- மந்தமான மற்றும் சீரற்ற சருமத்திற்கு ஆளிவிதை ஜெல் பயன்படுத்துவது ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவுகிறது.
- ஆளிவிதை ஜெல்லில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தை உலர்த்துவதைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
- இது சருமத்திற்கு ஒரு எக்ஸ்ஃபோலியண்டாக செயல்பட்டு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி அழகான பொலிவைத் தருகிறது.
- இந்த விதைகளில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்கள் மற்றும் மாசுபட்ட காற்று போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
- இந்த ஜெல் முதன்மை தடுப்பாக செயல்பட்டு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளின் தோற்றைக் குறைக்கிறது.
- ஆளிவிதை ஜெல்லுடன் சிறிது தேன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கலாம்.

இவ்வாறு ஆளிவிதை ஜெல்லைப் பயன்படுத்துவது சருமத்திற்கு பளபளப்பையும் பொலிவையும் தருகிறது. இந்த ஹெல் முற்றிலும் இயற்கையானது என்பதால், எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. எனினும், இதை சருமத்திற்கு பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Chia Seeds Skin Benefits: சருமத்தை நச்சுத்தன்மையாக்க இந்த சிறிய விதை எப்படி உதவுகிறது தெரியுமா?
Image Source: Freepik