சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளி விதை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!

How to use flaxseed for hair and skin: சருமம், முடி ஆரோக்கியத்திற்கு ஆளிவிதை ஜெல் பெரிதும் உதவுகிறது. இந்த ஆளிவிதை ஜெல்லை சில குறிப்பிடப்பட்ட வழிகளின் உதவியுடன் சருமம் மற்றும் முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமானதாக மாற்றலாம். இதில் சருமம், முடிக்கு ஆளிவிதை ஜெல் பயன்படுத்துவதன் நன்மைகள் மற்றும் அதனைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளி விதை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!

Benefits of flaxseed gel for hair and skin: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறையால் பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். அவ்வாறே சருமத்தில் எரிச்சல், வறட்சியான சருமம், வெடிப்புகள், கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளும், முடி வறட்சி, முடி உடைதல் மற்றும் இன்னும் சில முடி சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படலாம். சிலர் இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட சந்தைகளில் விற்கும் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆனால், சில நேரங்களில் இந்த பொருள்கள் இரசாயனங்கள் கலந்ததாக இருக்கலாம். இது பாதிப்பை மேலும் அதிகரிக்கலாம். இந்நிலையில், இயற்கையான தேர்வுகளைத் தேர்வு செய்வதன் மூலம் சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதன் படி, சருமம் மற்றும் முடி இரண்டிற்கும் நன்மை பயக்கும் வகையில் ஆளிவிதை ஜெல் பெரிதும் உதவுகிறது. இதில் சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை ஜெல் தரும் நன்மைகள் மற்றும் அதைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Flaxseed Face Mask: முகத்தை மினுமினுக்க வைக்கும் ஆளிவிதை ஃபேஸ் மாஸ்க்! எப்படி தயார் செய்வது?

ஆளிவிதை ஜெல்

உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு விதைகள் மிகவும் நன்மை பயக்கும். அந்த வகையில் ஆளி விதைகள் உடல் நலத்தைக் காப்பது மட்டுமல்லாமல், அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் ஆளிவிதைகள் உதவுகிறது. இந்த ஆளிவிதைகளைப் பதப்படுத்தி தயாரிக்கப்படும் கண்டிஷனர் ஆளிவிதை ஜெல் ஆகும். இதில் வைட்டமின் பி மற்றும் ஈ, மக்னீசியம், இரும்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது.

முடி ஆரோக்கியத்திற்கு ஆளிவிதை ஜெல்லின் நன்மைகள்

முடி வளர்ச்சிக்கு

ஆளி விதை ஜெல்லை கூந்தலுக்குப் பயன்படுத்துவது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடியை வேகமாகவும், நீளமாகவும் வளர உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் ஊட்டச்சத்தை அளிக்கவும், ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை குறைக்கவும் உதவுகிறது. இதற்கு ஆளிவிதை ஜெல்லை முடிக்கு பயன்படுத்தும் முன்னும், பின்னும் முடி வளர்ச்சியைக் கண்காணித்து வித்தியாசத்தைக் கவனிக்கலாம். சிறந்த முடிவுகளைப் பெற ஆளிவிதை ஜெல்லை ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.

உச்சந்தலை வீக்கத்தைக் குறைக்க

ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை அழற்சி உறுப்பு மாற்றத்தைத் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆளிவிதை ஜெல்லை உச்சந்தலையில் பயன்படுத்துவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Flaxseed Hair Growth: முடி நீளமாக வளர ஆளி விதையை எப்படி பயன்படுத்துவது?

சுருள் முடிக்கு ஆளிவிதை ஜெல்

ஆளிவிதைகளில் உள்ள வைட்டமின் ஈ ஒரு பிரபலமான ஆக்ஸிஜனேற்ற மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது முடிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துச் செயல்பட்டு சுருள் முடியை நிர்வகிக்க உதவுகிறது. எனவே இது இயற்கையாகவே சுருள் முடிக்கு மிகுந்த நன்மை பயக்கும். சுருள் முடிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை ஜெல்லைப் பயன்படுத்தலாம். இது ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும் வைக்க உதவுகிறது.

முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க

ஆளிவிதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு போன்ற ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது. இது முடி உதிர்தல், முடி முதுமை அடைவது, முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. தலைமுடிக்கு ஆளிவிதை ஜெல்லின் மேற்பூச்சு பயன்பாடு முடியின் தரத்தை மேம்படுத்துவதுடன், முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது.

சரும ஆரோக்கியத்திற்கு ஆளிவிதை ஜெல்லின் நன்மைகள்

நெகிழ்ச்சியான சருமத்திற்கு

சருமத்திற்கு ஆளிவிதை ஜெல்லைப் பயன்படுத்துவது ஆன்டி-ஏஜிங் ஜெல்லாக செயல்படுகிறது. இது சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்குகிறது. மேலும், இந்த ஜெல்லில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமம் உலர்வது மற்றும் தளர்த்துவதைத் தடுப்பதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. சருமத்திற்கு இந்த ஜெல்லைப் பயன்படுத்தும் போது, அதன் மேல்தோல் மற்றும் உள்தோல் அடுக்கில் தண்ணீரைத் தக்கவைத்து, சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Flaxseed Gel: கரும்புள்ளிகளை விரைவில் மறைக்கும் ஆளி விதை ஜெல்! ஈஸியா தயார் செய்ய இந்த இரண்டு பொருள் போதும்

சருமத்தின் உணர்திறனைக் குறைக்க

உணர்திறன் வாய்ந்த சருமத்தில் அழற்சி மற்றும் எதிர்விளைவுகளுக்கு அதிக வாய்ப்புள்ளது. இதன் தினசரி பயன்பாடு சருமத்தின் உணர்திறனைக் குறைக்க உதவுகிறது. ஜெல்லில் பாலி-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளது. இவை தோல் தடுப்பு செயல்பாட்டை மேம்படுத்தவும், சருமத்தின் நீரேற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சரும சேதத்தைத் தடுக்கிறது. எனினும், இந்த ஜெல்லைப் பயன்படுத்தும் முன்னதாக முதலில் ஒரு பேட்ச் டெஸ் செய்வது நல்லது.

முகப்பரு, கரும்புள்ளிகள் நீங்க

ஆளிவிதை ஜெல் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜனை சமன் செய்து முகப்பரு வெடிப்பைக் குறைக்கிறது. பொதுவாக முகப்பருவுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்றாக முகத்தில் அதிகப்படியான எண்ணெய்கள் சுரப்பதும் அடங்கும். இந்நிலையில் சருமத்திற்கு ஜெல்லில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம், எண்ணெய் சருமம் மற்றும் சரும உற்பத்தியை நிர்வகிக்கிறது. ஆய்வுகளில் இது முகப்பருவைத் தடுக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. ஈரமான முடி அல்லது சருமத்தில் மாய்ஸ்சரைசர் அல்லது ஹேர் மாஸ்க்காக தடவி 10 முதல் 20 நிமிடங்கள் தடவ வேண்டும். அதன் பிறகு, குளிர்ந்த நீரில் சரியாக கழுவ வேண்டும்.

இவ்வாறு சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆளிவிதை ஜெல்லைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Flaxseed Gel For Hair: பட்டு போன்ற மென்மையான முடிக்கு ஆளிவிதை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

மூக்கை சுற்றியுள்ள கரும்புள்ளியால் அவதியா? - அழகுக்கலை நிபுணர் தரும் ஈசியான வீட்டுக்குறிப்புகள் இதோ!

Disclaimer