மூக்கை சுற்றியுள்ள கரும்புள்ளியால் அவதியா? - அழகுக்கலை நிபுணர் தரும் ஈசியான வீட்டுக்குறிப்புகள் இதோ!

மூக்கை சுற்றியுள்ள வெள்ளை மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற வேண்டும் என்றால் என்னென்ன மாதிரியான வீட்டுக்குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என பார்க்கலாம்...
  • SHARE
  • FOLLOW
மூக்கை சுற்றியுள்ள கரும்புள்ளியால் அவதியா? - அழகுக்கலை நிபுணர் தரும் ஈசியான வீட்டுக்குறிப்புகள் இதோ!


சிலருக்கு மூக்கைச் சுற்றி வெள்ளையாக சொரசொரவென்று இருக்கும். இதனை வெள்ளைப்புள்ளிகள் அல்லது ஒயிட் ஹெட்ஸ் என அழைக்கிறோம். இதே போல் சிலருக்கு கருமையாக இருக்கும். இதை கரும்புள்ளிகள் அல்லது பிளாக் ஹெட்ஸ் என்கிறோம்.

இதனால் சருமத்தின் மென்மைத்தன்மையை இழப்பதோடு, அந்த இடமும் சற்று அசிங்கமாக காணப்படும். பலரும் வெள்ளைப்புள்ளிகளைப் போக்க குளித்து முடித்ததும், காட்டன் ஈரத்துணியைக் கொண்டு தேய்ப்பார்கள். ஆனால் இப்படி செய்வதால் மட்டும் மூக்கை சுற்றி வரும் புள்ளிகளை நீக்க முடியாது எனும் அழகுக்கலை நிபுணர் விஜயலட்சுமி அதற்கான தீர்வுகளையும் சொல்கிறார்.

சருமம் வறட்சி அடைந்து உங்கள் மூக்கைச் சுற்றி சொரசொரப்பாக இருப்பதற்கு சரும துளைகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது தான் முக்கிய காரணம் . சில பேஸ் பேக்குகள் உங்கள் சருமத்துளைகளை சுத்தம் செய்வதோடு, உங்கள் சரும ஆரோக்கியத்தையும், பொலிவையும் மேம்படுத்தும்.

கரும்புள்ளியை அகற்றுவதற்கான வீட்டுக்குறிப்புகள் இதோ:

  • ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில், ஒரு டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் தண்ணீர் தொட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.
  • ஸ்ட்ராபெர்ரி பழத்தை வெட்டி அதனைக் கொண்டு நேரடியாக முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.
  • பச்சை பயறை அரைத்து மாவு செய்து, அந்த மாவைக் கொண்டு தினமும் முகத்தை தேய்த்து கழுவி வர, மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.
  • க்ரீன் டீயின் பையில் உள்ள பொடியைக் கொண்டும் கரும்புள்ளிகளை அகற்றலாம். அதற்கு க்ரீன் டீ பொடியில் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
  • வேர்க்கடலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, மூக்கின் மேல் தடவி மென்மையாக 10 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கி, பொலிவோடு காணப்படும்.
  • 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து ஒன்றாக கலந்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் பட்டை சருமத்துளைகளை விரிவடையச் செய்து, சுத்தம் செய்து, வெள்ளைப்புள்ளிகளை எளிதில் அகற்ற உதவும்.
  • ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், வெள்ளைப்புள்ளிகள் மட்டுமின்றி, சருமத்துளைகளும் சுத்தமாகும்.

  • எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸில் அமிலம், சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, வெள்ளைப்புள்ளிகள் வருவதைக் குறைக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை காட்டனில் நனைத்து, வெள்ளைப்புள்ளிகள் வரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் வெள்ளைப்புள்ளிகள் அகலும்.
  • ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு தோலின் பொடியை எடுத்துக் கொண்டு, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ , மூக்கில் வரும் கரும்புள்ளிகள் நீங்கும்.
  • மஞ்சள் மற்றும் வேப்பிலையில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், வெள்ளைப்புள்ளிகளை நீக்கும். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
  • வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தேனைத் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ, அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் வெள்ளைப்புள்ளிகள் நீங்கி, சருமம் பட்டுப்போன்று மென்மையாகும்.
  • அரிசி மாவு ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன், சம அளவில் மஞ்சள் தூள், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை அவ்விடத்தில் தெளித்து மீண்டும் ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், வெள்ளைப்புள்ளிகள் அகலும்.

Read Next

சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஆயுர்வேதிக் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்