Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Expert

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியா? இந்த 7 எளிய முறைகளைப் பின்பற்றுங்க போதும்.. நிபுணர் தரும் கூடுதல் டிப்ஸ்

மலச்சிக்கல் இன்று பலரும் சந்திக்கக் கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இதில் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய பிஸியான காலகட்டத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளும் அடங்குகிறது. பொதுவாக, மலச்சிக்கல் என்பது ஒரு நபரின் குடல் இயக்கத்தை ஒரு வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக வெளியேற்றும் போது ஏற்படும் ஒரு நிலையாகும். மலச்சிக்கல் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் மலம் கழிக்க கடினமாக சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். மேலும் அவர்கள் பொதுவாக கழிப்பறையில் நீண்ட நேரம் செலவிடுவார்கள்.

இந்நிலையில், மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும் இயற்கை வழிகள் குறித்து ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளரும், உணவியல் நிபுணருமான மன்பிரீத் கல்ரா அவர்கள் சில குறிப்புகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மலச்சிக்கலை இயற்கையாகவே குணப்படுத்த உதவும் 7 எளிய வழிகள்

நிபுணர் தனது பதிவில் கூறியதாவது,”ஒழுங்கற்ற குடல் இயக்கங்களுடன் போராடுகிறீர்களா? இந்த 7 உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உங்களை ஒழுங்காக வைத்திருக்கவும் உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் பெற.. இதை  மட்டும் சாப்பிடவும்..

சரியான கழிப்பறை நிலை

மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட சரியான கழிப்பறை நிலையைப் பெற்றிருப்பது அவசியமாகிறது. இதற்கு, “இடுப்புகளை விட முழங்கால்கள் உயரமாக உட்காருவது (கால் இருக்கையைப் பயன்படுத்தவும்) இயற்கையாகவே குடல் இயக்கங்களை எளிதாக்க உதவுகிறது” என நிபுணர் கூறுகிறார். இவ்வாறு குடல் இயக்கங்களை எளிதாக்குவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

போதுமான தண்ணீர் குடிப்பது

மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க உடலை போதுமான அளவு நீரேற்றமாக இருப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. எனவே, தினமும் 8–10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது, மலத்தை மென்மையாக்கவும் செரிமானத்தை எளிதாக்கவும் உதவுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபடலாம்.

அதிக நார்ச்சத்து சாப்பிடுவது

செரிமானம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை மல இயக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன.

வழக்கமான உணவு நேரங்களை பராமரிப்பது

மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட விரும்புபவர்கள் வழக்கமான உணவு நேரங்களை பராமரிப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. இந்த நிலைத்தன்மையானது குடலுக்கு பயிற்சி அளிக்கவும், செரிமான தாளத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.

சுறுசுறுப்பாக இருப்பது

தினமும் 20–30 நிமிட நடைபயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சி செய்வது குடல் இயக்கத்தைத் தூண்டுகிறது. இவ்வாறு உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதன் மூலம் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: காலை கடன் சரியா போகுதா? வாழைப்பழம் தான் இயற்கையான தீர்வு! மருத்துவர் சிவராமன் விளக்கம்..

கட்டுப்படுத்தக்கூடாது

எப்போதும் மலம் வெளியேறுவதை கட்டுப்படுத்தக்கூடாது. எனவே, கடினமான மலத்தைத் தடுக்க உடனடியாக தூண்டுதல்களுக்கு பதிலளிக்க வேண்டும். இதன் மூலம் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைப்பது

பொதுவாக, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்நிலையில், பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. மேலும், முழு, இயற்கை உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

View this post on Instagram

A post shared by Dt Manpreet Kalra | Hormone and Gut Health Coach | (@dietitian_manpreet)

மலச்சிக்கலை மேம்படுத்தும் 5 சூப்பர் உணவுகள்

ஆளி விதைகள் - இவை நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 அதிகம் உள்ளதாகும். இது மென்மையான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கின்றன.

புரூன்ஸ் - இவை இயற்கை மலமிளக்கியாகவும், நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் மற்றும் சர்பிடால் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது.

கிவி - இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. மேலும் இதில் செரிமானத்தைத் தூண்டும் ஆக்டினிடின் என்ற நொதி உள்ளது.

பப்பாளி - இது புரதங்களை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்தும் பப்பேன் நொதியைக் கொண்டுள்ளது.

அத்திப்பழம் (புதிய அல்லது உலர்ந்த) - இது குடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நார்ச்சத்துக்கள் மற்றும் ப்ரீபயாடிக்குகள் நிறைந்ததாகும்.

இதனைத் தொடர்ந்து, “எளிமையான, நிலையான மாற்றங்கள் செரிமானத்தை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் குடலை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவும்” என நிபுணர் குறிப்பிடுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய 5 நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இங்கே..

Image Source: Freepik

Read Next

நல்ல தூக்கம் = நல்ல ஆரோக்கியம்.. தூக்கம் மற்றும் சர்க்காடியன் தாளத்தை மேம்படுத்துவது எப்படி?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 29, 2025 13:53 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content