Best seeds for pcod problem: பொதுவாக பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் (PCOD), பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்றும் அழைக்கப்படுகிறது. இது இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே ஏற்படக்கூடிய பொதுவான ஹார்மோன் கோளாறைக் குறிக்கிறது. PCOS ஆனது மரபணு, ஹார்மோன் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் PCOD உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஆண்ட்ரோஜன்கள் அதாவது ஆண் ஹார்மோன்கள் உயர்ந்த அளவு காணப்படும். PCOS காரணமாக ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அண்டவிடுப்பின் போது முட்டைகள் வளர்ச்சி மற்றும் வெளியீட்டில் தலையிடக்கூடும்.
PCOD உள்ள பல பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது அவர்களின் செல்கள் இன்சுலினுக்கு திறம்பட பதிலளிக்கவில்லை. இதனால், அது அதிக இன்சுலின் அளவுகளுக்கு வழிவகுக்கிறது. மேலும், கருப்பைகள் அதிக ஆண்ட்ரோஜன்களை உற்பத்தி செய்ய தூண்டும். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை வழக்கங்களைக் கையாள்வதன் மூலம் PCOD-ஐக் கட்டுப்படுத்தலாம். ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தனது இன்ஸ்டகிராம் பதிவில், PCOD-க்கு கட்டாயம் செய்ய வேண்டிய சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS உள்ள பெண்கள் ஈசியா உடல் எடையைக் குறைக்க... இந்த 7 உடற்பயிற்சிகள் கைகொடுக்கும்...!
நிபுணரின் கருத்து
அதில் அவர் குறிப்பிட்டதாவது, “தினமும் 1 தேக்கரண்டி அலிவ் (ஹலிம்/கார்டன் க்ரெஸ்) விதைகளை பாலில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், வாரம் முழுவதும் ராஜ்மா, லோபியா, சனா போன்ற பல்வேறு பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, சூரன், அர்பி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற காய்கறிகளை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்துவதும் நல்லது” என்று அவர் கூறியுள்ளார். மேலும், சில விதைகளில் உள்ள ஊட்டச்சத்து பண்புகள் காரணமாக அவை PCOD அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது. இதில் PCOD-ஐக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் விதைகள் மற்றும் நன்மைகளைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
PCOS பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய விதைகள்
சியா விதைகள்
இது அதிகளவிலான நார்ச்சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இவை உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், இது PCOS அறிகுறிகளை நிர்வகிக்கவும் உதவுகிறது
பூசணி விதைகள்
இதில் மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை ஹார்மோன் ஒழுங்குமுறை மற்றும் வீக்கத்தைக் குறைக்க மிகவும் முக்கியமாகும். பூசணி விதைகளின் ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் ஆதரிக்கின்றன.
சூரியகாந்தி விதைகள்
இந்த விதைகளில் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, வீக்கத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
எள் விதைகள்
இதில் லிக்னான்கள் உள்ளது. இவை ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளை சமநிலைப்படுத்தி கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்க உதவுகின்றன. மேலும், இதில் நிறைந்துள்ள கால்சியம் ஊட்டச்சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல மற்றும் சிறந்த மூலமாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: PCOS ஆல் எடை குறைப்பதில் சிரமமா? இதோ நிபுணர் சொன்ன வெயிட்லாஸ் சீக்ரெட்
சணல் விதைகள்
இதில் அதிகளவிலான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கவும் உதவுகின்றன.
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னான்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை பெண்களின் உடலில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
நைஜெல்லா விதைகள்
நைஜெல்லா விதைகள் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். இவை இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும், ஒட்டுமொத்த ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் PCOS பிரச்சனையை நிர்வகிக்கலாம்.
வெந்தய விதைகள்
இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் நன்கு அறியப்படுகிறது. மேலும், இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி PCOD அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
உணவில் விதைகளை எப்படி சேர்ப்பது?
அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த விதைகளைச் சேர்க்கலாம். அதன் படி, விதைகளை ஸ்மூத்திகள், சாலடுகள், சூப்கள் போன்ற வழிகளில் சேர்க்கலாம். இது ஆரோக்கியமான சிற்றுண்டியாக அமைகிறது. காலை ஸ்மூத்தியில் பிடித்தமான விதைகளில் ஒரு தேக்கரண்டி சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக, ஊட்டச்சத்துக்காக சாலட்களின் மீது விதைகளைத் தூவலாம். இது தவிர, சில பேக்கரி பொருள்களுடன் இந்த விதைகளை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். மேலும், தயிரில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது வறுத்து மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS பிரச்னையால் எடை கூடுகிறதா.? இந்த விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.!
Image Source: Freepik