PCOS ஆல் எடை குறைப்பதில் சிரமமா? இதோ நிபுணர் சொன்ன வெயிட்லாஸ் சீக்ரெட்

How to lose weight with pcos: உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். அதிலும் PCOS உடன் எடையைக் குறைப்பது சற்று கடினமான ஒன்றாகும். இதில் PCOS உடன் எடையைக் குறைக்கும் முறை குறித்து நிபுணர் ஒருவர் பரிந்துரைத்த சில குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
PCOS ஆல் எடை குறைப்பதில் சிரமமா? இதோ நிபுணர் சொன்ன வெயிட்லாஸ் சீக்ரெட்

How to lose weight with pcos naturally: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உடல் எடை அதிகரிப்பு அமைகிறது. உடல் எடையைக் குறைப்பதற்கு அனைவருக்கும் மிகவும் கடினமாக இருக்கலாம். குறிப்பாக, பொது மக்களை விட PCOS உள்ளவர்கள் எடை குறைப்பதில் அதிகளவு சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பொதுவாக, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது PCOS என்பது இனப்பெருக்க வயதுடைய பெண்களைப் பாதிக்கக் கூடிய ஒரு ஹார்மோன் கோளாறு பிரச்சனை ஆகும்.

PCOS உடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாக எடை அதிகரிப்பும் ஒன்றாகும். PCOS பிரச்சனையுடன் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவரின் கூற்றுப்படி, “PCOS-ல் இருந்து, உடல் எடையைக் குறைக்க போராடுபவர்கள் என்றால், அது இயற்கையானதாகும். ஏனெனில், PCOS என்பது ஹார்மோன் சமநிலையின்மை பற்றியது. இது ஆண்ட்ரோஜன் அல்லது ஆண் ஹார்மோனின் அதிகரிப்பைக் குறிக்கிறது. இதில் இன்சுலின் எதிர்ப்பு உள்ளது. மற்றும் இது உடல் எடையிழப்பைத் தடுக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: PCOS பிரச்னையால் தொப்பை போடுதா.? இந்த யோகா ஆசனங்களை ட்ரை பண்ணுங்க..

PCOS உடன் உடல் எடையைக் குறைக்க உதவும் வழிகள்

பிகோஸ் பிரச்சனையுடன் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் குறித்து அஞ்சலி முகர்ஜி அவர்கள் கூறிய சில குறிப்புகளைக் காணலாம்.

குறைந்த கிளைசெமிக் குறியீடு

PCOS உடன் உடல் எடையைக் குறைப்பதற்கு இரத்த சர்க்கரையை நிலையாக வைத்திருக்கலாம். எனவே அவர்கள் குறைந்த குறியீட்டு உணவைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இது இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை நீக்கி உடல் எடையிழப்புக்கு வழிவகுக்கிறது.

ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசத்தைக் குறைப்பது

ஆண்ட்ரோஜன்களைக் குறைக்க உதவும் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் PCOS உடனான உடல் எடையைக் குறைக்கலாம். இந்த நிலையில் எடுத்துக்கொள்ளக்கூடிய மிகவும் பொதுவான சப்ளிமெண்ட்கள் மியோ-இனோசிட்டால் மற்றும் டி-கைரோ-இனோசிட்டால் ஆகும். இவற்றைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம், அது ஹைப்பர்ஆண்ட்ரோஜனிசத்தைக் குறைக்க உதவுகிறது.

நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது

உடல் எடையைக் குறைப்பதற்கு புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். இது சிறந்த திருப்தியை அளிக்கக் கூடியதாகும். மேலும், இந்த புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு உட்கொள்ளலை அதிகரிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

முழு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்

உணவுமுறையைப் பொறுத்த வரை, அன்றாட உணவில் சிப்ஸ், குளிர் பானங்கள், கேக்குகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில், இது உடல் எடையை அதிகரிக்கலாம். எனவே இது போன்ற உணவுகளைத் தவிர்த்து, அதற்கு பதிலாக முழு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: PCOS பிரச்னையால் எடை கூடுகிறதா.? இந்த விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.!

பகுதிக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க வேண்டும். இதற்கு, பகுதிக் கட்டுப்பாடு மற்றும் மெதுவாக சாப்பிடுவதைப் பயிற்சி செய்ய வேண்டும். மேலும், பகுதிக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது சுவை மற்றும் முழுமையின் உணர்வை அடையாளம் காண உதவுகிறது.

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

பெரும்பாலும் அதிகளவிலான மன அழுத்தத்தைக் கொண்டிருப்பவர்கள் உடல் எடையைக் குறைப்பதில் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே, மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு உடற்பயிற்சி, மனநிறைவு மற்றும் தரமான தூக்கத்தைக் கையாள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் அஞ்சலி முகர்ஜி அவர்கள் கூற்றின்படி, “இந்த சிறிய வாழ்க்கை முறை மாற்றங்களின் உதவியுடன், உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், PCOS-ஐ நிர்வகிக்க உதவுவதற்கும் உதவுகிறது” என கூறியுள்ளார்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: PCOS உள்ள பெண்கள் ஈசியா உடல் எடையைக் குறைக்க... இந்த 7 உடற்பயிற்சிகள் கைகொடுக்கும்...!

Image Source: Freepik

Read Next

5:2 Diet : உடல் எடையை கடகடன்னு குறைக்க, ஃபார்முலா 5:2 டயட் பத்தி டாப் டு எண்ட் தெரிஞ்சிக்கோங்க...!

Disclaimer