Olive oil for weight loss: வெயிட்லாஸ் பண்ண இந்த ஒரு ஆயிலை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க!

Olive Oil Benefits for Weight Loss: ஆரோக்கியமற்ற உணவுமுறையின் முக்கிய விளைவாக உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. இது நாள்பட்ட நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க எடையைக் குறைப்பது அவசியமாகும். அவ்வாறு எடையைக் குறைப்பதற்கு ஆலிவ் எண்ணெய் சிறந்ததாகும்
  • SHARE
  • FOLLOW
Olive oil for weight loss: வெயிட்லாஸ் பண்ண இந்த ஒரு ஆயிலை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க!


How can olive oil help you lose weight: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இவ்வாறு உடல் எடையைக் குறைக்க வீட்டிலேயே உள்ள சில இயற்கையான வைத்தியங்களைக் கையாளலாம்.

அதன் படி, எடையைக் குறைக்க சில எண்ணெய்கள் உதவுகிறது. இதில் ஆலிவ் எண்ணெயும் அடங்கும். ஆலிவ் எண்ணெய் ஆனது ஆலிவ் மரத்தின் பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு இயற்கையான எண்ணெய் ஆகும். பொதுவாக இது சமையலறை மூலப்பொருளாகக் கருதப்படுகிறது. ஆலிவ் எண்ணெய், ஆலிவ்களை அழுத்தி அல்லது நசுக்கி பெறப்படுகிறது. மேலும், இது அதிக ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்புக் கலவைகள், குறிப்பாக பாலிபினால்களைக் கொண்டுள்ளது. இந்த எண்ணெயானது இதயம் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்வாறெனில், அதை எப்படி உட்கொள்வது என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Olive Oil for Migraines: ஒற்றைத் தலைவலி இருந்த இடம் தெரியாமல் போக இந்த ஒரு எண்ணெய் போதும்

எடையிழப்புக்கு ஆலிவ் எண்ணெய் எவ்வாறு உதவுகிறது?

உடல் எடையைக் குறைக்க ஆலிவ் எண்ணெய் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதன் முதன்மை பண்புகளாக, வயிறு நிரம்பிய உணர்வைத் திரும்புவது, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பது போன்றவை அடங்கும்.

  • ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், அதிலும் குறிப்பாக மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் நிரம்பியதாக உணர உதவுகிறது. இது உணவுக்கு இடையில் சிற்றுண்டி அல்லது அதிகம் சாப்பிடுவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது. இது கலோரி உட்கொள்ளலைத் தடுக்க உதவுகிறது.
  • ஆலிவ் எண்ணெய் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், விரைவான இரத்த சர்க்கரை கூர்மைக்கு வழிவகுக்காது. குறிப்பாக, எடையை நிர்வகிக்க விரும்புவோருக்கு இது பயனுள்ளதாக அமைகிறது. ஏனெனில் நிலையான இரத்த சர்க்கரை அளவு பசியைக் குறைக்கவும், இன்சுலின் கூர்முனைகளைத் தடுக்கவும், நாள் முழுவதும் ஆற்றல் அளவை மேம்படுத்த உதவுகிறது.
  • ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியமான கொழுப்புகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமற்ற கொழுப்புகளான டிரான்ஸ் கொழுப்புகள் அல்லது நிறைவுற்ற கொழுப்புகளைத் தவிர்க்கலாம். இது உடலில் அதிகப்படியான கொழுப்பு திரட்சியின் அபாயத்தைக் குறைக்கவும், எடையிழப்பு இலக்குகளை ஆதரிக்கவும் உதவுகிறது.
  • ஆலிவ் எண்ணெய் ஒரு லேசான மலமிளக்கியாக செயல்பட்டு, செரிமானத்தை ஆதரிக்க மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இந்த மேம்படுத்தப்பட்ட செரிமானம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும், உணவை திறமையாகப் பயன்படுத்த உடலுக்கு உதவுகிறது.
  • பெரும்பாலும் எடை அதிகரிப்பு மற்றும் மோசமான வளர்சிதை மாற்றம் காரணமாக நாள்பட்ட வீக்கம் ஏற்படலம். ஆய்வு ஒன்றில், எடை அதிகரிப்பு மற்றும் உடலில் வீக்கம் போன்றவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு ஒன்று கண்டறியப்பட்டது. இந்த எண்ணெயில் ஓலியோகாந்தல் போன்ற பாலிஃபீனால்கள் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை வீக்கத்தைக் குறைப்பதன் மூலம், வளர்சிதை மாற்றம் மற்றும் எடை குறைப்பில் பங்களிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஆலிவ் ஆயில் சாப்பிட்டா உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

எடையிழப்புக்கு ஆலிவ் எண்ணெயை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம்?

ஆலிவ் எண்ணெய் மற்றும் சூடான தண்ணீர்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து, காலை அல்லது உணவுக்கு முன்னதாக எடுத்துக் கொள்ளலாம். இது செரிமானத்தை ஆதரிக்கவும், வீக்கத்தைத் தடுக்கவும் உதவுகிறது. இவை மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கவும் ஒரு மென்மையான வழியாகும்.

ஆலிவ் எண்ணெய் & எலுமிச்சைச் சாறு

ஒரு தேக்கரண்டி விர்ஜின் பிளஸ் ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் புதிய எலுமிச்சை சாறு கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஆய்வின் படி, உடல் பருமனை அடக்குவதற்கு எலுமிச்சைச் சாறு சிறந்த தேர்வாகும்.

ஆலிவ் எண்ணெய் & கிரேக்க தயிர்

ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைத் தயிருடன் சேர்த்து உட்கொள்வது எடையிழப்புக்கு சிறந்த தேர்வாகும். இதில் கூடுதலாக, சியா விதைகள், ஆளிவிதைகள் அல்லது பெர்ரி போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்யலாம். இந்த சிற்றுண்டியில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை நிறைந்துள்ளது.

இவ்வாறு பல்வேறு ஆரோக்கியமான வழிகளில் ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் பருமனைக் குறைக்கலாம். எனினும், இதை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவர் அல்லது நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: நெய்யுடன் ஆலிவ் எண்ணெய் கலந்த கலவையை முடிக்கு பயன்படுத்தலாமா?

Image Source: Freepik

Read Next

Effects of Eating Fast: உணவை வேகமாக மென்று சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

Disclaimer