Weight Lose Tips: எளிதில் எடை குறைய வேண்டுமா.? இதை ஃபாளோ பண்ணுங்க.!

  • SHARE
  • FOLLOW
Weight Lose Tips: எளிதில் எடை குறைய வேண்டுமா.? இதை ஃபாளோ பண்ணுங்க.!

காலையில் உடல் எடையை சரிபார்த்தல், தண்ணீர் அருந்துதல், காலை உணவாக புரதம் நிறைந்த உணவுகளை உண்பது போன்ற சிறிய முன்னெச்சரிக்கைகள் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் சில பழக்கங்கள் குறித்து இங்கே விரிவாக காண்போம். 

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டியவை இவை!

காலை கடன் முடிந்த உடல் உங்கள் எடையை சரிபார்க்கவும். இதன் மூலம் சரியான எடையை தெரிந்துக்கொள்ள முடியும். தியம் மற்றும் மாலையில் சோதனை செய்தால், அதற்குள் நீங்கள் ஏதாவது சாப்பிட்டுவிட்டு குடித்திருப்பீர்கள், அதனால் உங்கள் எடை அதிகமாக தோன்றும். உடல் எடை குறைய தினமும் காலை நீங்கள் செய்ய வேண்டிய பழக்கங்கள் இங்கே. 

நிறைய தண்ணீர் குடிக்கவும்

டிபன் சாப்பிடுவதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடல் எடையை குறைக்கலாம். தண்ணீரில் கலோரிகள் இல்லை. ஆனால் வயிற்றை நிரப்புகிறது மற்றும் பசியைக் குறைக்கிறது. இதனால் அதிகமாக டிபன் சாப்பிடுவதை தவிர்க்கிறோம். உயிரியல் செயல்முறைகளின் வேகமும் தண்ணீருடன் அதிகரிக்கிறது. இது உங்கள் கலோரிகளை எரிக்க உதவுகிறது. 

காலை உணவு

காலை உணவில் புரதம் அதிகம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது பசியை விரைவாகத் தடுக்கிறது. தினை, பெசரா, வேர்க்கடலை, முட்டை மற்றும் தயிர் ஆகியவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க டீ உதவுமா? வாங்க பாக்கலாம்..

உணவு பட்டியல்

நாள் முழுவதும் நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள் என்று காலையில் ஒரு பட்டியலைத் தயாரிக்கவும். இது கலோரிகள் குறைவாக உள்ள உணவுகளை முன்கூட்டியே தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது. கலோரிகள் அதிகம் உள்ள பீட்சா, பர்கர் மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடாமல் கவனமாக இருங்கள்

சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிடுங்கள்

காலையில் வெயிலில் நேரத்தை செலவிடுபவர்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே வெயிலில் நின்று காலையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

இப்படி சாப்பிடுங்கள்

காலை உணவை அவசரமாக சாப்பிடுவதை விட மெதுவாக சாப்பிட்டு அதன் சுவை மற்றும் நறுமணத்தை அனுபவிக்கவும். இப்படி சாப்பிடுவதன் மூலம் நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம், என்ன சாப்பிடுகிறோம் என்பதை புரிந்துகொள்கிறோம். அதனால் நமக்குத் தேவையான உணவை மட்டுமே சாப்பிடுகிறோம். இது எடை இழப்புக்கு உதவுகிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்

மதிய உணவின் போது பழங்களோடு சரிவிகித உணவையும் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உணவுடன் அதிக நார்ச்சத்து உட்கொள்வது நல்லது. அவை நீண்ட நேரம் வயிறு நிறைந்ததாக உணரவைக்கும். அதனால் உடனே பசி எடுக்காது. 

காலையில் எழுந்தவுடன் இந்த சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது.

Image Source: Freepik

Read Next

பால் குடிப்பதை நிறுத்தினால் உடல் எடை குறையுமா.?

Disclaimer

குறிச்சொற்கள்