#Exclusive பெண்களே PCOS பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி? கருத்தரித்தல் சிக்கல் குறித்து Dr.ரம்யா ராமலிங்கம் விளக்கம்..!

PCOS Treatment: பெண்களுக்கு நீர்க்கட்டி (Ovarian Cyst) இருப்பது குழந்தைப்பேறு தள்ளிப்போக ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். வாழ்க்கை முறை மாற்றம், உடல் பருமன், மன அழுத்தம், உடற்பயிற்சின்மை ஆகியவை தற்போது பெண்களிடையே மிகவும் அதிகரித்து வருவதாகக் கூறும் சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள ஜீவன்மித்ரா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரம்யா ராமலிங்கம், (Dr.Ramya Ramalingam, IVF Specialist jeevan Mithra Fertility Centre, Chennai) அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். 
  • SHARE
  • FOLLOW
#Exclusive பெண்களே PCOS பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி? கருத்தரித்தல் சிக்கல் குறித்து Dr.ரம்யா ராமலிங்கம் விளக்கம்..!


PCOS என்றால் என்ன?

பிசிஓஎஸ் (பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்) என்பது பெண்களின் ஹார்மோன் கோளாறு காரணமாக ஏற்படுவதாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கருமுட்டைப் பையில் (Ovaries) மிகச் சிறிய அளவிலான பல நீர்க்கட்டிகள் இருக்கும். கருமுட்டை உற்பத்தி மற்றும் கருமுட்டை வெடிப்பது பாதிக்கப்படும், மாதவிடாய் முறையாக ஏற்படாமல், உடல் எடை அதிகரிக்கும். தேவையற்ற பகுதிகளில் (முகம், மார்பு மற்றும் வயிறு) முடி வளரும். குழந்தைப்பேறு அடைவதில் தாமதம் மற்றும் சிக்கல் ஏற்படும். கருச் சிதைவிற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

View this post on Instagram

A post shared by Jeevan Mithra Fertility & Women Care Centre (@jeevanmithramark)

image

why-weight-loss-is-difficult-for-women-with-pcos-Main-1732871195284.jpg

PCOS பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

ஹார்மோன் சமநிலையின்மை (Hormonal Imbalance):

PCOS (Polycystic Ovary Syndrome) பெண்கள் உடலில் இயல்பாக இருக்கக் கூடிய FSH, LH போன்ற ஹார்மோன்கள் சமநிலையை இழப்பதனாலும், முறையாகச் செயல்படாததாலும் கரு முட்டைப் பையில் கருமுட்டை இருந்தும் சரிவர கருமுட்டை வளராமல், வெடிக்காமல் போகின்றது. இதனால் கருமுட்டைப் பையில் பல சிறிய, சிறிய நீர்க்கட்டிகள் உருவாகும்.

இன்சுலின் எதிர்ப்பு (insulin resistance):

PCOS உள்ள பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. இதனால், உடலுக்குள் இன்சுலின் அளவு அதிகரிக்கும், இது ஆண் பாலினத் தன்மைக்கான ஆண்ட்ரோஜன் (androgens)ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சிக் குறைபாடு:

உடற்பயிற்சி இல்லாமல் இருக்கும் வாழ்க்கை முறையும், தேவையற்ற உணவுகளை அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் (உதாரணமாக அதிக அளவு சர்க்கரை, கொழுப்பு) PCOS-க்கு வழிவகுக்கும்.

உடல் பருமன் (Obesity):

அதிக உடல் பருமன், உடலில் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி, PCOS உருவாக்கும்.

மனஅழுத்தம் (Stress):

அதிகமான மன அழுத்தமும், ஹார்மோன் சமநிலையை பாதித்து, பிசிஓஎஸுக்கு வழிவகுக்கும். பல காரணிகள் சேர்ந்தும், PCOS பிரச்சனை உருவாகலாம்.

நீர்க்கட்டி பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டால் என்னென்ன மாதிரியான சிகிச்சை, கருத்தரித்தலுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என மருத்துவர் ரம்யா ராமலிங்கம் விளக்கியுள்ளார்.

image

PCOD-diet-1733972121512.jpg

கட்டாயம் செய்ய வேண்டியவை:

PCOS பிரச்சனைக்கான பிரதான சிகிச்சை வாழ்க்கை முறை மாற்றம் ஆகும். அதனையடுத்து உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் அதனை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனி வகைகளை சாப்பிடக்கூடாது. மைதா, கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள், கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக நிறைய காய்கறிகள், பழங்கள், முளைக்கட்டிய பயிறு வகைகள், உலர்ந்த கொட்டைகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

image

how to lose weight with pcod

தினமும் கட்டாயம் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆக்கப்பூர்வமான உடற்பயிற்சியை மேற்கொள்வது உடல் எடையைக் குறைக்கவும், அதன் மூலமாக ஹார்மோன் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

பல ஆண்டுகளாக தீவிர பிசிஓஎஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூட தினமும் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைக்கும் போது, நீர்க்கட்டிகள் படிப்படியாகக் குறைந்து, கருமுட்டை உருவாகி இயற்கையான முறையில் கருத்தரித்துள்ளனர்” என்கிறார் மருத்துவர் ரம்யா ராமலிங்கம்.

பெண்களிடையே பிசிஓஎஸ் பிரச்சனை அதிகரிக்க மன அழுத்தம் மிக முக்கியமான காரணமாக அமைகிறது. எனவே மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க உங்களுக்கு பிடித்தமான விஷயங்களைச் செய்யலாம். பாட்டு, நடனம், தோட்டக்கலை, ஓவியம் வரைதல், உடற்பயிற்சி போன்ற உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம். தினமும் 6 முதல் 7 மணி நேரம் நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் அவசியமாகும்.

இதையும் படிங்க: தம்பதியின் வயது IVF சிகிச்சையைப் பாதிக்குமா? – IVF ஸ்பெஷலிஸ்ட் சொல்லுறத கேளுங்க!

ஓவுலேஷன் இன்டக்‌ஷன் (Ovulation Induction):

PCOS பிரச்சனை இருக்கும் பெண்கள் அனைவருமே ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்ற வேண்டும். அதுமட்டுமில்லாமல் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வாழ்வியல் முறை மாற்றத்திற்காக நிறைய நாட்கள் காத்திருக்காமல் அதனுடன் சேர்த்து கருமுட்டை உண்டாவதற்கான ஓவுலேஷன் இன்டக்சன் என்ற சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளும் போது வெற்றி விகிதம் அதிகரிக்கும்.

ஓவுலேசன் இன்டக்சன் மருத்துவமுறையானது, எளிமையான மருந்துகள் மூலம் கருமுட்டை பை தூண்டப்பட்டு கருமுட்டைகள் உண்டாகி வளர வைக்கும்.

அதாவது, பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு கருமுட்டைகள் சரியான நேரத்தில் உற்பத்தியாகி, வளராமல் வெடிக்காமல் போகிறது. அதை சரிசெய்ய மாதவிடாய் ஆன இரண்டாம் நாளிலிருந்து ஐந்து நாட்கள் வரை எளிமையான மருந்துகள் கொடுக்கும் போது கருமுட்டைப் பையை தூண்டி கரு முட்டைகளை பெரிதாக வளர செய்யும் சிகிச்சை ஆகும்.

image

benefits of having sex during periods

பிசிஓஎஸ் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்திக்கான மாத்திரைகளைக் கொடுத்து, சரியான முறையில் கருமுட்டை உற்பத்தியாகிறதா என ஃபோலிகுலர் மானிட்டரிங் (Follicular monitoring) செய்ய வேண்டும். தொடர்ந்து 6 மாதத்திற்கு ஓவுலேஷன் இன்டக்‌சன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும், பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்களுக்கு 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

ஓவுலேஷன் இன்டக்சன் சிகிச்சையின் முக்கியத்துவமே ஃபோலிகுலர் மானிட்டரிங்கில் தான் உள்ளது. பிசிஓஎஸ் உள்ள பெண்ணுக்கு ஓவுலேஷன் இன்டக்‌சன் சிகிச்சையின் படி வழங்கப்படும் மாத்திரை பலனளிக்கிறதா? கருமுட்டை வளர்ச்சி எப்படி இருக்கிறது? என்பதை பாலிக்கிள் மானிட்டரிங் ஸ்கேன் மூலமாக கண்காணிக்க வேண்டும். இறுதியாக கருமுட்டை வெடிக்க தயாராகும் போது, கணவன் - மனைவி இணைந்திருக்க பரிந்துரைக்க வேண்டும். இது மிக, மிக கட்டாயம் என்கிறார்.

டியூப் டெஸ்டிங்:

image

asain-woman-holds-model-female-r

ஓவுலேஷன் இன்டக்‌சன் மூலம் கருமுட்டை உருவாகியும், கணவன் மனைவி இணைந்திருந்தும் கருத்தரிக்க இயலாமல் போகும் பிசிஓஎஸ் பெண்கள் அடுத்தக்கட்டமாக டியூப் டெஸ்டிங்கையும், கணவரின் விந்தணு பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் ரம்யா ராமலிங்கம் பரிந்துரைக்கிறார். அடுத்தடுத்து எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis),பைப்ராய்டு கட்டிகள்(Uterine fibroids)போன்ற பிரச்சனைகள் குறித்து பரிசோதிக்க வேண்டும்.

ஊசி மருந்து மூலம் ஓவுலேஷன் இன்டக்‌ஷன்:

ஓவுலேஷன் இன்டக்‌ஷன் சிகிச்சை மூலம் கருமுட்டை நன்றாக வளர்ந்து கருவுறாதவர்களுக்கும், கருமுட்டை சரியாக வளர்ச்சி அடையாதவர்களுக்கும் டியூப் டெஸ்டிங் பரிசோதனைக்குப் பிறகு இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஹார்மோன் ஊசி மூலம் கருமுட்டைகளை உண்டாக்கி வளரச் செய்யும் சிகிச்சை முறை இதுவாகும்.

ஓவுலேசன் இன்டக்சன் இன்ஜெக்சன் பண்ணும் போது அவசியம் பாலிகுலார் மானிட்டரிங் செய்ய வேண்டும். கருத்தரித்தல் சிகிச்சை நிபுணரின் கீழ் தான் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனென்றால் சில சமயங்களில் மிகையான எதிர்வினைகள் ஏற்பட்டு நிறைய பாலிக்கிள் உருவாகி, ஓவேரியன் ஹைப்பர்ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் (OHSS)என்கிற பிரச்சனை ஏற்படலாம். எனவே நாம் கொடுக்கும் மருந்துகளின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை அறிய கருத்தரித்தல் சிகிச்சை நிபுணரின் வழிகாட்டுதலுடன், ஃபோலிகுலர் மானிட்டரிங் செய்ய வேண்டும்.

ஃபோலிகுலர் ஸ்டெடி மூலமாக கருமுட்டை பெரிதானதும், அதனை ஊசி மருந்து மூலமாக வெடிக்க வைத்து, அந்த தருணத்தில் கணவன் - மனைவி மூலமாக இயற்கையான முறையில் கருத்தரித்தலை ஊக்குவிக்கலாம்.

இதையும் படிங்க: Fertility Tests For Couples: குழந்தை இல்லையா?... இந்த 3 பரிசோதனைகளை உடனே செய்யுங்க... Dr.ரம்யா ராமலிங்கம் அட்வைஸ்...!

கர்ப்பப் பைக்குள் விந்து செலுத்துதல் (IUI):

இந்த முறையில் பெண்ணிற்கு கருமுட்டை வெளியாகும் சமயத்தில், செறிவூட்டப்பட்ட விந்தணு நேரடியாக கருப்பையில் செலுத்தப்படுகிறது. IUIக்கு பிறகு 18 நாட்களுக்குப் பிறகு கர்ப்ப பரிசோதனை மூலம் கர்ப்பம் உறுதி செய்யப்படும்.

லேப்ராஸ்கோபி கருப்பை துளையிடுதல் (Laparoscopic ovarian drilling):

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு ஓவுலேஷனைத் தூண்ட உதவும் ஒரு அறுவை சிகிச்சை. இந்த சிகிச்சையில் லேப்ரோஸ்கோபி மூலம் கருமுட்டைப் பகுதியில் நான்கு இடங்களில் துளையிடப்பட்டு ஹார்மோன் பிரச்சனைகளை குறைக்க வழிவகை செய்யப்படுகிறது.

image

ivf-1734491428107.jpg

இந்த சிகிச்சையை ஒரே ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டுமோ தவிர, மீண்டும் மீண்டும் முயற்சிக்க முடியாது. சில பெண்களுக்கு இந்த சிகிச்சை நல்ல பலனைக் கொடுத்தாலும், சிலருக்கு தீவிரத்தை குறைக்கும் அல்லது பெரிய அளவில் பலனளிக்காமலேயே போகக்கூடும் எனத் தெரிவித்துள்ள மருத்துவர் ரம்யா ராமலிங்கம், எக்காரணம் கொண்டும் ஒருமுறை லேப்ராஸ்கோபி கருப்பை துளையிடுதல் சிகிச்சையை மீண்டும், மீண்டும் முயற்சிக்கக்கூடாது என அறிவுறுத்துகிறார்.

இந்த முறைகள் கைகொடுக்காமல் போகும் போது மட்டுமே பிசிஓஎஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐவிஎஃப் சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படும். ஆனால் எவ்வளவு மோசமான பிசிஓஎஸ் பிரச்சனை என்றாலும் ஐ.வி.எப் முறையில் வெற்றியின் விகிதம் நல்ல முறையில் இருக்கும் என்கிறார் மருத்துவர் ரம்யா ராமலிங்கம்.

Image Source: Freepik

Read Next

Fertility Tests For Couples: குழந்தை இல்லையா?... இந்த 3 பரிசோதனைகளை உடனே செய்யுங்க... Dr.ரம்யா ராமலிங்கம் அட்வைஸ்...!

Disclaimer