ஆண்களுக்கு semen analysis விந்து பரிசோதனை:
ஆண்களுக்கான பிரச்சனைகளை கண்டறிவதில் இது முக்கிய பரிசோதனை. விந்து பரிசோதனை என்பது ஆண்களின் விந்தணுவின் அளவு, அசையும் தன்மை, தரம் ஆகிய மூன்றையும் பரிசோதிக்கும் முறையாகும்.
உடலுறவுக்கு பிறகு விந்தணுவை 2 முதல் 7 நாட்களுக்குள் பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும்.பரிசோதனை ரிசல்ட் முழுமையாக இருக்க வேண்டும் என்றால், நல்ல பரிசோதனை மையத்தில் வெளிவரும் மொத்த விந்தணுவை பரிசோதிக்க கொடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது என்கிறார் மருத்துவர் ரம்யா ராமலிங்கம்.
முக்கிய கட்டுரைகள்
விந்தணுக்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்திற்கும் மேல் இருந்தால் தான் நார்மல். அதேபோல் அசையும் தன்மை 40 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். முதல் முறை விந்தணு பரிசோதனை முடிவுகள் குறைவாக இருந்தால் உடனே பயப்படத் தேவையில்லை. புகைப்பிடிக்கும் பழக்கம், நைட் ஷிப்ட் வேலை, காய்ச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், அது விந்தணு பரிசோதனையில் பிரதிபலிக்கக்கூடும். எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி, சம்பந்தப்பட்ட ஆணின் பிரச்சனையைக் கண்டறிந்து, அதற்கு தீர்வளித்த பின்னர் 4 முதல் 6 வார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் விந்தணு பரிசோதனை மேற்கொள்ளலாம். ஒருவேளை மீண்டும் மேற்கொள்ளப்படும் விந்தணு பரிசோதனை முடிவுகளும் சாதகமாக இல்லாத பட்சத்தில், மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கருமுட்டை உருவாதல் பரிசோதனை (Test of ovulation):
மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு கருமுட்டை வெடிக்கும் போது கணவன், மனைவி உறவு கொள்வது குழந்தைப்பேறுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஒழுங்கற்ற மாதவிடாயை கொண்டிருப்பவர்களுக்கு கருமுட்டை சரிவர உண்டாகாது, அப்படி உருவானாலும் சரியான நேரத்தைக் கண்டறிய முடியாது. எனவே திருமணத்திற்கு முன்பே ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும் பெண்கள், திருமணமாகி ஓராண்டு வரை காத்திருப்பதை விட உடனடியாக இந்த பரிசோதனையை மேற்கொள்வதுடன், அதற்கான சிகிச்சைகளையும் பெறுவது, கருத்தரித்தலுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் ரம்யா ராமலிங்கம்.
இவர்களுக்கென பிரத்யேகமாக பயன்படுத்தப்படுத்தப்படும் ஓவுலேஷன் டெஸ்ட் ஸ்ட்ரிப்களைக் கொண்டு கருமுட்டை வெளியேறுவதை கண்டறியலாம்.
இது அண்டவிடுப்பின் போது முட்டையின் வெளியீட்டை தூண்டும் லுடினைசிங் ஹார்மோன் கண்டறிவதன் மூலம் செயல்படக்கூடிய ஒன்று.
இந்த பரிசோதனையின் மூலம் கருமுட்டை வெடிப்பைக் கண்டறிந்து, அதன் பின்னர் கணவன், மனைவி உடலுறவு கொள்ளும் போது கருத்தரித்தலுக்கான வாய்ப்பு கணிசமான அளவு அதிகரிக்கும்.
கருக்குழாய் பரிசோதனை:
கருக்குழாய் அடைப்பைக் கண்டறிய ஹிஸ்டெரோசல்பிங்கோகிராம் (HSG) பரிசோதனை மிகவும் பயனுள்ளது. இது எக்ஸ்ரே மூலம் கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்களைக் கண்டறியும் ஒரு பரிசோதனையாகும். இந்த பரிசோதனை மூலமாக கருக்குழாய் திறந்துள்ளதா அல்லது அடைப்பு உள்ளதா எனக் கண்டறிய முடியும். ஒருவேளை இந்த' பரிசோதனையில் ரிசல்ட் சாதகமாக இல்லை என்றால், உடனடியாக அவர்களுக்கு லேப்ரோஸ்கோபி செய்ய வேண்டும்.
குறிப்பாக, 35 வயதிற்கு மேற்பட்டவர்கள், வலியுடன் கூடிய மாதவிடாய், கருப்பை பிரச்சனை, எண்டோமெட்ரியாசிஸ் போன்ற பிரச்சனை உள்ள பெண்களுக்கு லேப்ரோஸ்கோபி முறை மூலம் பரிசோதனை செய்து, கருக்குழாயில் அடைப்பு உள்ளதா கர்ப்பப்பை சார்ந்த பகுதிகளில் வேறு ஏதும் பிரச்சனைகள் இருக்கிறதா? என கண்டறிய வேண்டும். அப்போது நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகள் கண்டறியப்பட்டால் அதற்கும் ஒன்றாகவே சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் கருத்தரித்தலுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
கருக்குழாயில் சின்ன, சின்ன பிரச்சனைகள் இருந்தால் லேப்ரோஸ்கோபியின் போதே சரி செய்துவிட முடியும் எனக்கூறும் மருத்துவர் ரம்யா ராம்லிங்கம், கருக்குழாயில் பெரிய அளவிலான அடைப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் நம்பகமான ஐவிஎஃப் சிகிச்சை மூலமாக குழந்தைப்பேறுக்கு முயற்சிப்பது நல்லது என்கிறார்.
இதையும் படிங்க: தம்பதியின் வயது IVF சிகிச்சையைப் பாதிக்குமா? – IVF ஸ்பெஷலிஸ்ட் சொல்லுறத கேளுங்க!
இந்த 3 பரிசோதனைகளுக்குப் பிறகு தம்பதிகளில் ஆண், பெண் இருவருக்குமான பிரச்சனைகள் கண்டறியப்பட்டு அவரவருக்கான பிரத்யேக சிகிச்சைகள் வழங்கப்படும். அதேசமயம், இந்த 3 பரிசோதனைகளின் முடிவுகளும் சரியாக உள்ள நிலையில், சர்க்கரை மற்றும் தைராய்டு போன்ற பிரச்சனைகள் இல்லை, சரியான உடல் எடை, வாழ்க்கை முறை மற்றும் திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆகிறது, 30 வயதிற்குள் உள்ள தம்பதிக்கு சிறிது காலத்திற்கு மீண்டும் இயற்கை முறையிலேயே கருத்தரிக்க அறிவுரை வழங்குவோம் என்கிறார்.
சிலர் கருத்தரித்தல் மையம் அல்லது மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற சென்றாலே அவர்கள் தேவையில்லாத சிகிச்சைகளை பரிந்துரைப்பார்கள். அதற்கு அதிக தொகை செலவாகும் என்றெல்லாம் தவறாக நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. சரியான கருத்தரித்தல் நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறும் போது, குழந்தைப்பேறு தொடர்பாக தம்பதிகளிடம் உள்ள சின்ன பிரச்சனையைக் கூட துல்லியமாக கண்டறிவார்கள். புதுமண தம்பதி என்பதால், இயற்கையான முறையில் கருத்தரித்தலுக்கான வழிகளையே முதலில் பரிந்துரைப்பார்கள். சில வாழ்க்கை முறை மாற்றங்களை மட்டும் பரிந்துரைத்து, கணவன் - மனைவி எவ்வாறு இயற்கையான வழியில் கருத்தரிக்க முயற்சிக்கலாம் என்பது குறித்த மருத்துவ ரீதியிலான ஆலோசனைகளை வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Image Source: Freepik