திருமணமான இளம் பெண்களுக்கு மீண்டும், மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து Only MY Health-க்கு ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவர் ரம்யா ராமலிங்கம் ( Dr.Ramya Ramalingam, IVF Specialist jeevan Mithra Fertility Centre, Chennai) அளித்துள்ள விளக்கம் இதோ...
கருச்சிதைவு என்பது கருவுற்ற பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக கருவை இழப்பது ஆகும். பெரும்பாலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இது நிகழ்கிறது. ஒருமுறை கருச்சிதைவு ஏற்படுவது பொதுவாகவே நிகழக்கூடியது. ஆனால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறைகளுக்கு மேல் நிகழ்ந்தால், இது மருத்துவ ரீதியாக கவனிக்க வேண்டிய பிரச்சனையாக மாறுகிறது.
மீண்டும் மீண்டும் கருச்சிதைவை எதிர்கொள்ளும் தம்பதி செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள்:
இரண்டு முறைக்கு மேல் கருச்சிதைவு பிரச்சனையை, எதிர்கொள்ளும் தம்பதிகள் இருவரும் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பரிசோதனைகள் உள்ளன. இவை மூலம் காரணத்தை கண்டறிந்து, தகுந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
முக்கிய கட்டுரைகள்
பெண்களுக்கு:
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound/Transvaginal Ultrasound): கருப்பையின் வடிவம், முட்டை வளர்ச்சி, கருப்பை சுவர் (endometrium), பாலிப்ஸ், ஃபைப்ராய்டுகள், கர்ப்பபையின் பிறவிக் கோளாறுகள் போன்றவை பார்க்கலாம்.
HSG (ஹிஸ்டெரோசல்பிங்கோகிராம்): கருப்பை மற்றும் குழாய்களில் அடைப்பு, கர்ப்பபையில் கட்டி, வடிவ மாற்றம் இருப்பதா என்பதை கண்டறிய.
ஹார்மோன் சோதனைகள்: FSH, LH, TSH, Prolactin, AMH போன்ற ஹார்மோன்களின் அளவு சரியா என்பதை தெரிந்துகொள்ள.
TORCH சோதனை: வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் இருப்பதா என்பதை கண்டறிய.
டயாபெட்டீஸ் சோதனை, தைராய்டு சோதனை: இரத்தத்தில் சக்கரை மற்றும் தைராய்டு அளவை பார்க்க.
லேபராஸ்கோபி, ஹிஸ்டெரோஸ்கோபி: கருப்பை மற்றும் குழாய்களை நேரில் பார்த்து, தேவையான சிகிச்சை செய்ய.
குரோமோசோம் பிரச்சினை : மரபணு கோளாறுகள், அதிக/குறைவு குரோமோசோம்கள் (முட்டை/விந்தணுவில் பிரச்சனை)
ஆன்டிபாடி பரிசோதனைகள் : லூபஸ், ஆன்டிபாஸ்போஸ்போலிபிட் ஆன்டிபாடி சிண்ட்ரோம், இதுபோன்ற ஆன்டிபாடி பிரச்சினைகள் (antibody problem) பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு:
விந்து பகுப்பாய்வு: விந்தணுவின் எண்ணிக்கை, இயக்கம், வடிவம் ஆகியவை பரிசோதிக்க.
சர்க்கரை சோதனை: இரத்தத்தில் சர்க்கரை அளவு இருப்பதைப் பார்க்க.
குரோமோசோம் பரிசோதனை : கணவன், மனைவி இருவருக்குமே குரோமோசசோம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://jeevanmithrafertilitycentre.com/
Image Source: Freepik