Doctor Verified

தொடர்ச்சியான கருச்சிதைவா? - குழந்தை இல்லைங்கிற ஏக்கத்தை விடுங்க - டாக்டர் சொல்லுறத கேளுங்கள்...!

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணம் என்ன, இது மீண்டும் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவர் ரம்யா ராமலிங்கம் ( Dr.Ramya Ramalingam, IVF Specialist jeevan Mithra Fertility Centre, Chennai) விளக்கம் அளித்துள்ளார்.
  • SHARE
  • FOLLOW
தொடர்ச்சியான கருச்சிதைவா? - குழந்தை இல்லைங்கிற ஏக்கத்தை விடுங்க - டாக்டர் சொல்லுறத கேளுங்கள்...!


திருமணமான இளம் பெண்களுக்கு மீண்டும், மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து Only MY Health-க்கு ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவர் ரம்யா ராமலிங்கம் ( Dr.Ramya Ramalingam, IVF Specialist jeevan Mithra Fertility Centre, Chennai) அளித்துள்ள விளக்கம் இதோ...

கருச்சிதைவு என்பது கருவுற்ற பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக கருவை இழப்பது ஆகும். பெரும்பாலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இது நிகழ்கிறது. ஒருமுறை கருச்சிதைவு ஏற்படுவது பொதுவாகவே நிகழக்கூடியது. ஆனால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறைகளுக்கு மேல் நிகழ்ந்தால், இது மருத்துவ ரீதியாக கவனிக்க வேண்டிய பிரச்சனையாக மாறுகிறது.

சிகிச்சை முறைகள்:

  • கருச்சிதைவிற்கான காரணத்தைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும். முதல் முறை கருச்சிதைவு ஏற்படுகிறதா அல்லது இரண்டாம் முறை கருச்சிதைவு ஏற்படுகிறதா என்பதைப் பொறுத்தும்.
  • எந்த மாதங்களில், முதல் மூன்று மாதங்களிலா, மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்கு உள்ளாகவா என்பதைப் பொறுத்து காரணமும் சிகிச்சை முறைகளும் வேறுபடும்.
  • ஹார்மோன் குறைபாடுகள் இருந்தால், ஹார்மோன் மாற்று சிகிச்சை வழங்கப்படுகிறது. கருப்பை வடிவ மாற்றங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது (பாலிப்ஸ், ஃபைப்ராய்டுகள் அகற்றல்).
  • தொற்றுகள் இருந்தால், அந்த நோய்க்கு ஏற்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன. நோயெதிர்ப்பு கோளாறுகளுக்கு தகுந்த மருந்துகள் மற்றும் கவனிப்பு வழங்கப்படுகிறது.
  • வாழ்க்கைமுறை மாற்றங்கள், புகை, மதுபானம் தவிர்ப்பு, உடல் பருமன் குறைத்தல், சரியான ஊட்டச்சத்து ஆகியவை மிகவும் அவசியம்.
  • ஆண்களுக்கு விந்தணு தரம் குறைபாடுகள் இருந்தால், அதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது.

 

 

image
MixCollage-14-Apr-2025-02-48-PM-1713

திரும்ப திரும்ப கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு ஐ.வி.எப் முறை ஒரு தீர்வாகுமா? :

ஐ.வி.எப் சிகிச்சை முறை கருச்சிதைவு பிரச்சினைக்கு ஒரு தீர்வாகாது. கருச்சிதைவிற்கான காரணங்களைக் கண்டறியாமல் நிறையப் பேர் நேரடியாக ஐ.வி.எப் சிகிச்சைக்குச் செல்கின்றனர். அப்படிச் செல்லும் போது மீண்டும் அதே போன்ற பிரச்சினைகள் வரும். ஐ.வி.எப் கருத்தரித்தலுக்கான ஒரு வழிமுறையே தவிர, கருத்தரித்த பிறகு அதைத் தங்க வைப்பது உடலிடம் தான் இருக்கிறது. முதலில் கருச்சிதைவிற்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்த பின்னர் ஐ.வி.எப் சிகிச்சைக்கு செல்வதுதான் நல்லது.

அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொண்ட பின்னரும் கருச்சிதைவிற்கு என்ன காரணம் என்று கண்டறிய முடியாதவர்கள், எல்லாமே இயல்பாக இருப்பவர்கள் ஐ.வி.எப் சிகிச்சை முறைக்குச் செல்லும் போது ஐ.வி.எப்பில் உண்டாக்கப்படும் கருவை ஜெனிடிக் டெஸ்ட் செய்து அது குரோமோசோமிலும் இயல்பான கருவா என்பதை ஆய்வு செய்து கருவை உள்ளே வைக்கும் போது வெற்றி விகிதம் அதிகமாக இருக்கும்.

குரோமோசோம் குறைபாடு பிரச்சினை உள்ள தம்பதியரும் ஐ.வி.எப் முறையில் ஜெனிடிக் பரிசோதனை செய்து பின்னர் முயற்சிக்கும் போதும் வெற்றி விகிதம் அதிகமாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு: https://jeevanmithrafertilitycentre.com/

 

Read Next

கர்ப்ப காலத்தில் துளசி தேநீர் குடிக்கலாமா.? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்..

Disclaimer

குறிச்சொற்கள்