கருச்சிதைவு என்பது கருவுற்ற பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக கருவை இழப்பது ஆகும். பெரும்பாலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இது நிகழ்கிறது. ஒருமுறை கருச்சிதைவு ஏற்படுவது பொதுவாகவே நிகழக்கூடியது. ஆனால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறைகளுக்கு மேல் நிகழ்ந்தால், இது மருத்துவ ரீதியாக கவனிக்க வேண்டிய பிரச்சனையாக மாறுகிறது.
திரும்ப திரும்ப கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு ஐ.வி.எப் முறை ஒரு தீர்வாகுமா? :
ஐ.வி.எப் சிகிச்சை முறை கருச்சிதைவு பிரச்சினைக்கு ஒரு தீர்வாகாது. கருச்சிதைவிற்கான காரணங்களைக் கண்டறியாமல் நிறையப் பேர் நேரடியாக ஐ.வி.எப் சிகிச்சைக்குச் செல்கின்றனர். அப்படிச் செல்லும் போது மீண்டும் அதே போன்ற பிரச்சினைகள் வரும். ஐ.வி.எப் கருத்தரித்தலுக்கான ஒரு வழிமுறையே தவிர, கருத்தரித்த பிறகு அதைத் தங்க வைப்பது உடலிடம் தான் இருக்கிறது. முதலில் கருச்சிதைவிற்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்த பின்னர் ஐ.வி.எப் சிகிச்சைக்கு செல்வதுதான் நல்லது.
அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொண்ட பின்னரும் கருச்சிதைவிற்கு என்ன காரணம் என்று கண்டறிய முடியாதவர்கள், எல்லாமே இயல்பாக இருப்பவர்கள் ஐ.வி.எப் சிகிச்சை முறைக்குச் செல்லும் போது ஐ.வி.எப்பில் உண்டாக்கப்படும் கருவை ஜெனிடிக் டெஸ்ட் செய்து அது குரோமோசோமிலும் இயல்பான கருவா என்பதை ஆய்வு செய்து கருவை உள்ளே வைக்கும் போது வெற்றி விகிதம் அதிகமாக இருக்கும்.
குரோமோசோம் குறைபாடு பிரச்சினை உள்ள தம்பதியரும் ஐ.வி.எப் முறையில் ஜெனிடிக் பரிசோதனை செய்து பின்னர் முயற்சிக்கும் போதும் வெற்றி விகிதம் அதிகமாக இருக்கும்.
முக்கிய கட்டுரைகள்
தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படும் தம்பதியரும், குழந்தைப் பேறு தாமதாகும் தம்பதியரும் எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
கருச்சிதைவு அடைந்த பெண்கள், கருத்தரித்தலுக்காக முயற்சி செய்து முடியாதவர்கள், திருமணமாகி ஓராண்டு முறைான உடலுறவு கொண்டும் அதன் மூலம் குழந்தைப்பேறு இல்லாதவர்கள், 35 வயதிற்கு மேல் திருமணம் ஆனவர்கள் 6 மாதத்திற்குள்ளும் மருத்துவரை அணுகலாம்.
சிறுவயதில் கர்ப்பப்பை, ஓவரிஸ் தொடர்பான அறுவைச் சிகிச்சைகள் ஏதேனும் செய்திருந்தால் திருமணத்திற்குப் பிறகு உடனடியாக மருத்துவரை அணுகலாம். முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள், விரைப்பை அறுவைச்சிகிச்சை (Testicles surgery) செய்தவர்கள், நெடுங்காலம் டிபி சிகிச்சை எடுத்தவர்கள், 40 வயதிற்கு மேல் திருமணம் செய்தவர்கள் ஓராண்டிற்கு மேல் காத்திருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
கருச்சிதைவு என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடியது. பெரும்பாலான கருச்சிதைவுகள் தன்னிச்சையாகவும், தற்காலிகமாகவும் இருக்கலாம். ஆனால், தொடர்ந்து நிகழும் கருச்சிதைவுகள், கருத்தரிக்க முடியாமை போன்ற பிரச்சனைகளுக்கு விரைவாக மருத்துவரை அணுகி, தேவையான பரிசோதனைகள் செய்து, காரணத்தை அடையாளம் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம். நம்பிக்கை, பொறுமை மற்றும் சரியான மருத்துவ வழிகாட்டல் மூலம், பெரும்பாலான பெண்கள் வெற்றிகரமாக கருவை தாங்கி, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு: https://jeevanmithrafertilitycentre.com/