
திருமணமான இளம் பெண்களுக்கு மீண்டும், மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து Only MY Health-க்கு ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவர் ரம்யா ராமலிங்கம் ( Dr.Ramya Ramalingam, IVF Specialist jeevan Mithra Fertility Centre, Chennai) அளித்துள்ள விளக்கம் இதோ...
கருச்சிதைவு என்பது கருவுற்ற பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக கருவை இழப்பது ஆகும். பெரும்பாலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இது நிகழ்கிறது. ஒருமுறை கருச்சிதைவு ஏற்படுவது பொதுவாகவே நிகழக்கூடியது. ஆனால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறைகளுக்கு மேல் நிகழ்ந்தால், இது மருத்துவ ரீதியாக கவனிக்க வேண்டிய பிரச்சனையாக மாறுகிறது.
கருச்சிதைவு ஏற்படும் முக்கிய காரணங்கள்:
கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் பலவாக உள்ளன. மிக முக்கியமான காரணம் கருவில் குரோமோசோம்கள் அல்லது மரபணு கோளாறுகள் ஆகும். கருவில் குரோமோசோம் எண்ணிக்கையில் அதிகம் அல்லது குறைவு, அல்லது மரபணுவில் மாற்றம் ஏற்பட்டால், அந்த கரு வளர்ச்சியைத் தொடர முடியாமல் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம். இது இயற்கையாகவே நடக்கும் ஒரு பாதுகாப்பு முறையாகவும் கருதப்படுகிறது.
இதேபோல், ஹார்மோன்கள் பிரச்சனையாலும், கருப்பை அமைப்பில் பிறவிக்குரிய குறைபாடுகள் இருந்தாலும், நோயெதிர்ப்பு அமைப்பில் கோளாறுகள் இருந்தாலும், கருத்தரிக்கும் பெண்ணிற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
சில சமயங்களில், தொற்றுகள், வாழ்க்கைமுறை காரணிகள், ஆண்களின் விந்தணுவில் பிரச்சனைகள், கருப்பை சுவர் (endometrium) பிரச்சனைகள், கருப்பை வாய் (cervix) வலிமை குறைவாக இருப்பது, கருப்பை பாலிப்ஸ் (polyps), ஃபைப்ராய்டுகள் (fibroids), மற்றும் இரத்தம் தொடர்பான நோய்கள் போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.
View this post on Instagram
கருச்சிதைவிற்கான காரணங்கள்:
- குரோமோசோம் பிரச்சனைகள் - மரபணு கோளாறுகள், அதிக/குறைவு குரோமோசோம்கள் (முட்டை/விந்தணுவில் பிரச்சனை)
- கருப்பை வடிவம்/அளவு - பிறவிக்குரிய வடிவ மாற்றங்கள் (பைகார்னுவேட், செப்டேட், யுனிகார்னியேட் uterus)
- கருப்பை சுவர் பிரச்சனை - மெல்லிய Endometrium, பாலிப்ஸ் (polyps), ஃபைப்ராய்டுகள் (fibroids)
- ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் - ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் கருச்சிதைவும், குறைபாடுள்ள குழந்தையும் பிறக்க வாய்ப்புண்டு
- ஹார்மோன் கோளாறுகள் - தைராய்டு, இனப்பெருக்க ஹார்மோன் குறைபாடுகள், PCOS
- நோயெதிர்ப்பு கோளாறுகள் - லூபஸ்(Lupus), ஆன்டிபாஸ்போஸ்போலிபிட் ஆன்டிபாடி சிண்ட்ரோம் (antiphospholipid antibody syndrome)
- இரத்தத்தில் ஆன்டிபாடி பிரச்சினைகள் (antibody problem)- தொற்றுகள் TORCH, பாக்டீரியா, வைரஸ் தொற்றுகள்
- வாழ்க்கைமுறை - புகை, மதுபானம், போதைப்பொருள், அதிக உடல் எடை, ஊட்டச்சத்து குறைபாடு, மனஉளைச்சல்
- தைராய்டு நோய் - பெண்களுக்கு தைராய் அளவு ரத்தத்தில் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பிரச்சினை
- ஆண்களின் காரணிகள் - விந்தணுவில் குரோமோசோம் பிரச்சனைகள், விந்து தரம் குறைபாடு, ஆண்களுக்கு uncontrolled diabetes பிரச்சினை இருந்தால் மனைவிக்கு கருச்சிதைவு பிரச்சினை ஏற்படும்
- கருப்பை வாய் பிரச்சினை - Cervix நிறைமாதத்திற்கு முன் திறந்துவிடும் பிரச்சனை (incompetent cervix)
- வயது - அதிக வயது (35க்கு மேல்) (வயது அதிகரிக்கும் போது பெண்களுக்கு கருமுட்டையில் உள்ள குரோசோம்களில் பிரச்சினை வர வாயப்புகள் அதிகம்)
மேலும் விவரங்களுக்கு - https://jeevanmithrafertilitycentre.com/
Image Source: Freepik
Read Next
கர்ப்ப காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது பாதுகாப்பானதா.? மருத்துவரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்..
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version