Fri Sep 11, 2026 | 10:21 PM IST

Fertility Diet: பெண்களே சீக்கிரம் குழந்தை பிறக்கணுமா? - கருவுறுதல் நிபுணர் சொல்லும் இந்த உணவுகள கட்டாயம் சாப்பிடுங்க

சரியான சிகிச்சைமுறையும், நல்லதொரு கருவுருதல் சிகிச்சை நிபுணம் வாய்த்துவிட்டால் குழந்தைப்பேறு எளிதே. குறிப்பாக உணவுமுறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என சென்னையைச் சேர்ந்த ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 

Food For Pregnancy: கனவுப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது குழந்தைப்பேறு. ஆனால் வாழ்க்கைமுறை, உணவுமுறை மாற்றங்களால் பலருக்கும் அது கனவாகவே மாறி விடுகிறது. இன்றைய அறிவியல் உலகம் தந்திருக்கும் யுகப்புரட்சி அனைத்தையும் சாத்தியப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. சரியான சிகிச்சைமுறையும், நல்லதொரு கருவுருதல் சிகிச்சை நிபுணம் வாய்த்துவிட்டால் குழந்தைப்பேறு எளிதே.

குழந்தைப்பேறு தொடர்பாக பல்வேறு கேள்விகளுடன் சென்னையைச் சேர்ந்த ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கம் ( Dr.Ramya Ramalingam, IVF Specialist jeevan Mithra Fertility Centre, Chennai)  அவர்களிடம் உரையாடியதிலிருந்து...

 

 

குழந்தையின்மை பிரச்சனைக்கும் சரிவிகித உணவு முறைக்கும் தொடர்பு உண்டா?

நிச்சயமாக தொடர்பு உண்டு. சரிவிகித உணவு முறை கருவுறுதல் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஹார்மோன் சமநிலை, இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்தை பாதுகாக்கின்றன.

happy-pregnant-woman-eating-heal

சரிவிகித உணவில் புரதங்கள், நல்ல கொழுப்புகள், மற்றும் மெதுவாக செரிக்கும் கார்போஹைட்ரேட்டுகள் இனப்பெருக்க ஹார்மோன்களை (எஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன், டெஸ்டோஸ்டிரோன்) சமநிலையில் வைக்க உதவுகிறது. உதாரணமாக, அதிக சர்க்கரை அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்ற நிலைகளை மோசமாக்கலாம், இது குழந்தையின்மைக்கு வழிவகுக்கும்.

என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்? எது எடுத்துக் கொள்ளக் கூடாது?

பெண்களுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (வைட்டமின் C, E, செலினியம்), ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை முட்டையின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஆண்களுக்கு ஜிங்க், செலினியம், மற்றும் வைட்டமின் D போன்றவை விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் தரத்தை அதிகரிக்கின்றன. உடல் பருமன் அல்லது குறைந்த எடை இரண்டுமே கருவுறுதலைப் பாதிக்கலாம். சரிவிகித உணவு முறை உடல் எடையை ஆரோக்கியமான வரம்பில் வைத்திருக்க உதவுகிறது, இது மாதவிடாய் சுழற்சி மற்றும் கருத்தரிப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும்.

ஃபோலிக் அமிலம், இரும்பு, மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கர்ப்ப காலத்தில் கருவின் ஆரோக்கியத்திற்கு முக்கியம். சரிவிகித உணவு இந்த ஊட்டச்சத்துக்களை உறுதி செய்கிறது. கருவுறுதலை மேம்படுத்த ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு நிறைந்த கீரை, ப்ரோகோலி, நார்ச்சத்து மற்றும் B வைட்டமின்கள் உள்ள கினோவா, பழுப்பு அரிசி).நல்ல கொழுப்புகளான ஒமேகா-3 நிறைந்த மீன்கள் (சால்மன்), விதைகள் (சியா, ஆளி), மற்றும் நட்ஸ் (பாதாம், வால்நட்), புரத உணவுகளான முட்டை, பருப்பு வகைகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெர்ரி பழங்கள், ஆரஞ்சு, பால் பொருட்களான வைட்டமின் D போன்றவை பயன்படுகின்றன.

பதப்படுத்தப்பட்ட உணவுகளான டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் அதிக சர்க்கரை உள்ள உணவுகள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கலாம். மிதமான காஃபின் பாதுகாப்பானது, ஆனால் அதிக அளவு கருவுறுதலை குறைக்கலாம். ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கம் விந்தணு மற்றும் முட்டையின் தரத்தை பாதிக்கின்றன.

PCOS உள்ளவர்கள் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (Low GI) உணவுகளை தேர்ந்தெடுப்பது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகள் விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மேலும் விரிவான தகவல்களுக்கு: https://jeevanmithrafertilitycentre.com/

Image Source: Freepik

Read Next

கர்ப்பமா இருக்கீங்களா.? அப்போ மீன் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்னை எல்லாம் வரும்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content