திருமணமான தம்பதியரின் கனவுப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது குழந்தைப்பேறு. ஆனால் வாழ்க்கைமுறை, உணவுமுறை மாற்றங்களால் பலருக்கும் அது கனவாகவே மாறி விடுகிறது. இன்றைய அறிவியல் உலகம் தந்திருக்கும் யுகப்புரட்சி அனைத்தையும் சாத்தியப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. சரியான சிகிச்சைமுறையும், நல்லதொரு கருவுருதல் சிகிச்சை நிபுணம் வாய்த்துவிட்டால் குழந்தைப்பேறு எளிதே.
குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் குறித்து சென்னையைச் சேர்ந்த ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கம் (Dr.Ramya Ramalingam, IVF Specialist jeevan Mithra Fertility Centre, Chennai) அளித்துள்ள விளக்கம் இதோ...
குழந்தை பேறு இன்மை (infertility) சிகிச்சை முறைகள் தம்பதியரின் குறிப்பிட்ட பிரச்சினைகளைப் பொறுத்து மாறுபடும். பெண்களுக்கு முட்டை உற்பத்தியைத் தூண்டுவதற்கு கிளோமிஃபீன் (Clomiphene), லெட்ரோசோல் (Letrozole) அல்லது கோனாடோட்ரோபின்கள் (Gonadotropins) பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாட்டிற்கு ஹார்மோன் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
முக்கிய கட்டுரைகள்
கருப்பையக கருவூட்டல் (IUI - Intrauterine Insemination):
பெண்களுக்கு கரு முட்டை உருவாவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு, கருமுட்டைகள் நன்றாக உருவாகிறதா என ஸ்கேனில், ஃபாலிக்குலர் மானிட்டரிங் (Follicular monitoring) செய்யப்படும். கருமுட்டைகள் வளர்ந்து நன்கு பெரிதான பின்பு, அது வெடிப்பதற்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி, கருமுட்டைகள் வெடிக்கும் சமயத்தில், கணவரின் விந்தணுக்களைப் பெற்று இயக்கம் (motility) மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஆய்வகத்தில் தயார் செய்யப்பட்டு கருப்பைக்கு அனுப்பப்படுகிறது.
இதையும் படிங்க: Fertility Tests For Couples: குழந்தை இல்லையா?... இந்த 3 பரிசோதனைகளை உடனே செய்யுங்க... Dr.ரம்யா ராமலிங்கம் அட்வைஸ்...!
கணவனும், மனைவியும் இயற்கையாகச் சேரும் போது யோனியில் விந்து தங்கும். ஆனால் தயார் செய்யப்பட்ட விந்துவை (semen) கர்ப்பப்பையில் கொண்டு போய் செலுத்தப்படும் முறை IUI சிகிச்சை எனப்படுகிறது.
இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன் (ICSI - Intracytoplasmic Sperm Injection):
யாருக்கெல்லாம் தீவிரமான விந்தணுப் பிரச்சனை இருக்கிறதோ முட்டையின் அருகில் விந்தணுவை வைத்தால் கூட உள்ளே செல்லுமா என்கிற நிலையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு விந்தணுவை எடுத்து கருமுட்டைக்குள் நேரடியாக செலுத்தப்படுகிறது.
பெண்களுக்கு கருப்பை குழாய் அடைப்பு, எண்டோமெட்ரியோசிஸ் அல்லது ஃபைப்ராய்டுகளுக்கு லேப்ரோஸ்கோபி மூலம் தீர்வு காண முயற்சிக்கலாம். அதில் கரு நிற்கவில்லை எனில் IVF சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
இதையும் படிங்க: Exclusive: IUI முறையில் 100% குழந்தை பெற முடியுமா? - மருத்துவர் ரம்யா ராமலிங்கம் விளக்கம்!
இன் விட்ரோ கருத்தரித்தல் (IVF-In Vitro Fertilization):
பெண்களுக்கு நிறைய முட்டைகள் உருவாவதற்கு ஊசிமூலமாக மருந்து செலுத்தப்பட்டு அந்த முட்டைகள் பெரிதாகும்போது, அதை வெளியில் எடுத்து கணவரின் விந்தணுவையும் ஆய்வகத்தில் அருகருகே வைத்து கருவாக உருவான பின்பு கருப்பைக்கு மாற்றப்படுகிறது.
கருத்தரித்தல் தொடர்பான விழிப்புணர்வு தற்போது அதிகரித்து பெரும்பாலும் IVF சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருவேளை இம் மருத்துவமுறை வெற்றியளிக்கவில்லை எனில் அடுத்து என்ன செய்வது?
- IVF ன் வெற்றிவிகிதம் 30 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கிறது. வயது, உங்களிடைய சிகிச்சை வரலாறு, நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவர் மற்றும் மையத்தைப் பொறுத்து உங்களுடைய வெற்றி விகிதம் மாறுபடும்.
- IVF என முடிவெடுத்த பின்னர் சிறந்த மருத்துவமனையை தேர்வு செய்வது முக்கியம். ஒவ்வொரு மையங்களைப் பொறுத்து வெற்றி விகிதம் வேறுபடும்.
- 35 வயதிற்குள்ளாக IVF மேற்கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேல் வெற்றி விகிதம் குறைந்து விடும்.
- IVF ல் கரு நிற்காதவர்கள் பயப்படவோ மன உளைச்சலுக்கு ஆளாகவோ வேண்டாம். அந்தமுறை தான் நெகட்டிவ் வந்திருக்கிறது. அடுத்தமுறை பாசிட்டிவ் ஆகலாம்.
- நெகட்டிவ் வந்தவர்கள் சிறந்ததொரு கருவுறுதல் நிபுணரிடம் சென்று கரு நிற்காமைக்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதன்பின் இயற்கையான முறையில் கருத்தரிக்கலாம்.
- இல்லை மீண்டும் IVF சிகிச்சையே வெற்றியைத் தரலாம். இன்றைய நவீன காலகட்டத்தில் எந்தவகையான பிரச்சனையாக இருந்தாலும் அவற்றைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க அதிசிறந்த மருத்துவமுறைகள் வந்து விட்டன.
விவரங்களுக்கு: https://jeevanmithrafertilitycentre.com/
Image Source: Freepik