Prune juice for constipation: மலம் கழிப்பதில் சிரமமா இருக்கா? இந்த ஒரு ஜூஸ் குடிங்க போதும்

How does prune juice help with bowel movements: மலச்சிக்கல் பிரச்சனை இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட ஒரு சிறந்த தீர்வாக ஃப்ரூன் சாறு அமைகிறது. இதில் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனையிலிருந்து விடுபட கொடிமுந்திரி சாறு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
Prune juice for constipation: மலம் கழிப்பதில் சிரமமா இருக்கா? இந்த ஒரு ஜூஸ் குடிங்க போதும்


How quickly does prune juice help with constipation: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மலச்சிக்கல் அமைகிறது. இதன் காரணமாகவே தினமும் காலையில் அல்லது வாரத்திற்கு மூன்று முறைக்கு குறைவாக மலம் கழிப்பதில் சிரமத்தை அனுபவிக்கலாம். இந்நிலையில் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மலம் கழிப்பதை எளிதாக்குகிறது. அதன் படி சில பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்தின் சிறந்த ஆதாரங்களை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த வகை உணவுகளை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும் கொடி முந்திரிகளை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு ப்ரூன்ஸ் பழமான கொடி முந்திரியில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதன் இயற்கையான மலமிளக்கிய பண்புகளுக்காக பரவலாக அறியப்படுகிறது. இதை நேரடியாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது சிறந்த குடல் ஆரோக்கியத்திற்காக கொடி முந்திரியை ஒரு சுவையான சாறாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பிளம்ஸ் சாப்பிடுவதால் பெண்களுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

மலச்சிக்கலைப் போக்க கொடிமுந்திரி உதவுமா?

ஆம். மலச்சிக்கலைப் போக்குவதில் கொடிமுந்திரி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆய்வு ஒன்றில், கொடிமுந்திரி மல நிலைத்தன்மையை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. எனவே மலச்சிக்கல் நிவாரணத்திற்கு கொடிமுந்திரி உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.

நார்ச்சத்துக்கள் நிறைந்த

உலர்ந்த பிளம்ஸில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மலத்தை பெருக்கி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. ஆய்வில் நூறு கிராம் உலர்ந்த பிளம்ஸில் 7.1 கிராம் நார்ச்சத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

பீனாலிக் சேர்மங்கள் நிறைந்த

இந்த சூப்பர்ஃபுட்டில் பீனாலிக் சேர்மங்கள் நிறைந்துள்ளது. இதில் முக்கியமாக நியோகுளோரோஜெனிக் மற்றும் குளோரோஜெனிக் அமிலங்கள் உள்ளது. இந்த சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்றிகளாகச் செயல்பட்டு, குடலைத் தூண்டுவதன் மூலம், செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது சிறந்த குடல் இயக்கங்களுக்கு வழிவகுக்கிறது.

சார்பிட்டால் நிறைந்த

உலர்ந்த பிளம்ஸில் சார்பிட்டால் உள்ளது. சார்பிட்டால் ஆனது ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை கார்போஹைட்ரேட் ஆகும். இது குடலுக்குள் தண்ணீரை இழுப்பதன் மூலம் மலத்தை மென்மையாக்குகிறது. மேலும் மலம் கழிப்பதை எளிதாக்குகிறது.

மலச்சிக்கலைப் போக்க கொடிமுந்திரிகளை எப்படி சாப்பிடலாம்?

மலச்சிக்கல் நிவாரணத்திற்கு கொடிமுந்திரிகளை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.

முழுவதுமாக சாப்பிடுவது

கொடிமுந்திரியை (Prunes) சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வது உடலில் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கிறது. இது மலத்தில் மொத்தத்தை சேர்க்கவும் ஒரு நேரடி வழியாகும்.

ஊறவைத்து சாப்பிடுவது

இந்த பழத்தை வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். இந்த பழத்தை ஊறவைத்து மென்மையாக்கி உட்கொள்வது செரிமானத்தை எளிதாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Apricot Benefits: இதயம் முதல் எதிர்ப்பு சக்தி வரை… பாதாமியின் நன்மைகள் இங்கே…

ப்ரூன் சாறு அருந்துவது

கொடிமுந்திரியை முழுமையாக அப்படியே சாப்பிடுவது நன்மை பயக்கும். ஆனால், இதை சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆய்வில் கொடி முந்திரி சாறு உட்கொள்வது மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த சாற்றை அருந்திய பிறகு மலச்சிக்கல் அறிகுறிகள் மற்றும் வயிறு அசௌகரியம் இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வெவ்வேறு உணவுகளில் சேர்ப்பது

இந்த உலர் பிளம்ஸை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதை தயிர் அல்லது பாலுடன் ஸ்மூத்திகளில் சேர்க்கலாம் அல்லது கஞ்சி அல்லது தானியங்களில் நறுக்கிய கொடிமுந்திரிகளைச் சேர்க்கலாம். கூடுதலாக, நார்ச்சத்தை அதிகரிப்பதற்கு ப்யூரி செய்து, பேக்கரி பொருட்களில் சேர்க்கலாம்.

இந்த சாற்றை நாளின் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். ஆனால், இதை காலையில் உட்கொள்வது மலச்சிக்கலை நிர்வகிப்பதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இது செரிமான அமைப்பை மேம்படுத்தி, நாள் முழுவதும் நார்ச்சத்தை செயலாக்க அனுமதிக்கிறது. மேலும் இது வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Plums During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Image Source: Freepik

Read Next

Tooth sensitivity remedies: பற் கூச்சத்தால் எதுவுமே சாப்பிட முடியலயா? இதிலிருந்து விடுபட உதவும் டாப் ரெமிடிஸ் இதோ

Disclaimer