Doctor Verified

மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து நிவாரணம் பெற.. இந்த பழங்களை சாப்பிடுங்கள்..

மலச்சிக்கல், உப்புசம் மற்றும் IBS பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? குடல் இயக்கத்தை மேம்படுத்தும் 7 முக்கிய பழங்களை மருத்துவர் பகிர்ந்துள்ளார். கிவி முதல் பப்பாளி வரை – இயற்கை லாக்சட்டிவ் போல செயல்படும் இந்த பழங்களை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து நிவாரணம் பெற.. இந்த பழங்களை சாப்பிடுங்கள்..

குடல் செயல்பாடு மந்தமாகி, மலச்சிக்கல் மற்றும் உப்புசம் பிரச்னைகள் அதிகரிக்கும் போது, பலர் மருந்துகளை நாடுவதை நாம் பார்க்கிறோம். ஆனால், சில சாதாரண பழங்கள் இயற்கை லாக்சட்டிவ் (Natural Laxative) போல செயல்பட்டு குடல் இயக்கத்தை சீராக்கும் தன்மை கொண்டவை என்கிறார் நிபுணர் Dr. Joseph Salhab.


முக்கியமான குறிப்புகள்:-


மார்ச் 27 அன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், குடல், கல்லீரல், பாங்கிரியாஸ் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான Dr. Salhab, மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 முக்கியமான பழங்களை பட்டியலிட்டார். நீண்டகால மலச்சிக்கல், IBS, அல்லது உப்புசம் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பழங்கள் மிக மென்மையாக நிவாரணம் தரும் என அவர் விளக்குகிறார்.

கிவி – செரிமானத்திற்கு உதவும் இயற்கை நொதியுக் கருவி

கிவி பழத்தில் அதிக நார்ச்சத்து (Fibre) மட்டுமல்லாமல், செரிமானத்தை விரைவாக்கும் Actinidin எனும் நொதியுக் கருவியும் உள்ளது. இது குடலில் உணவுப் பசையை எளிதில் நகர்த்த உதவுகிறது. தினமும் ஒரு கிவி பழம் எடுத்துக்கொள்வது மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

டிராகன் ஃப்ரூட் – ப்ரீபயாட்டிக் நார்ச்சத்து நிறைந்தது

டிராகன் பழம் Prebiotic fibre + அதிக தண்ணீர் கொண்டது. இது குடல் பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக செயல்பட உதவி, bloating மற்றும் constipation இரண்டையும் குறைக்கிறது.

பேரிக்காய் – Sorbitol இருக்கும் இயற்கை லாக்சட்டிவ்

பேரிக்காயில் உள்ள Sorbitol என்பது இயற்கையான laxative.இது மலத்தை எளிதில் வெளியேறும் வகையில் உதவுகிறது. மேலும், soluble + insoluble fibre இரண்டும் அதிகமாக இருப்பதால் குடல் இயக்கம் சீராகும்.

ஆப்பிள் – “ஒரு ஆப்பிள் சட்டென்று மலச்சிக்கலை துரத்தும்”

ஆப்பிள் அதிக நார்ச்சத்து கொண்டது. Insoluble fibre மலம் அளவை அதிகரித்து எளிதில் வெளியேற உதவுகிறது. Soluble fibre மலத்தை மென்மையாக்கும். ஆப்பிளிலும் sorbitol இருப்பதால் இது இயற்கை laxative போல வேலை செய்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா.? டாக்டர் சிவராமன் விளக்கம்..

பப்பாளி – Papain நொதி உப்புசத்தை குறைக்கும்

பப்பாளியில் உள்ள Papain எனும் செரிமான நொதி, புரதங்களை உடைத்து செரிமானத்தைக் குணப்படுத்துகிறது. இதனால் bloating, indigestion குறைந்து மலச்சிக்கல் சீராகிறது.

ப்ரூன்ஸ் – “Original bowel mover”

Prunes மிகவும் பழமையான இயற்கை laxative food. நார்ச்சத்து + sorbitol அதிகமாக இருப்பதால் குடல் இயக்கத்தை விரைவாக்கும்.பல மருத்துவ நிபுணர்கள், வீட்டு வைத்தியமாக prune juice + butter + warm water கலவையை பரிந்துரைக்கிறார்கள்.

பெர்ரி (Berries) – Fibre + Antioxidants நிறைந்தவை

Strawberry, Blueberry, Raspberry போன்ற பேரிக்களில் ஆக்ஸிடேஷன் எதிர்ப்பு சக்தி மிக உயர்ந்தது.
அதிக நார்ச்சத்து வலி, bloating, constipation ஆகியவற்றை குறைக்கிறது.

View this post on Instagram

A post shared by Dr. Joseph Salhab (@thestomachdoc)

இறுதியாக..

மலச்சிக்கலால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் மருந்துகளை நாடுவதற்கு முன்பாக இந்த இயற்கை laxative பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முடிவில், குடல் ஆரோக்கியத்தை பேண, நார்ச்சத்து + தண்ணீர் + சீரான உணவு பழக்கம் ஆகியவை மிக முக்கியம்.

Disclaimer: இந்தக் கட்டுரை தகவல் பகிர்வு நோக்கத்திற்காக மட்டுமே. இதில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. உங்கள் உடல்நிலை, மருத்துவ வரலாறு என்பவற்றைப் பொருத்து மாற்றங்கள் செய்யும் முன் மருத்துவர்/ஊட்டச்சத்து நிபுணருடன் கலந்தாலோசிக்கவும்.

Read Next

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா.? டாக்டர் சிவராமன் விளக்கம்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 20, 2025 09:46 IST

    Published By : Ishvarya Gurumurthy