இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமான பலர் எப்போதும் சோர்வு, நினைவிழப்பு, மலச்சிக்கல், வயிறு உப்புசம், எப்போதும் குளிர் உணர்வு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். போதுமான அளவு உறக்கம் இருந்த போதும் புத்துணர்ச்சி இல்லாமல் உணர்கிறார்கள்.
இந்த பிரச்னையை சரிசெய்ய உணவுகள் உங்களுக்கு உதவலாம் என்கிறார், நியூட்ரிஷனிஸ்ட் லவ்நீத் பட்ரா. மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எந்த பிரச்னைக்கு எந்த உணவு தீர்வு கொடுக்கும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். அவை என்னவென்று இங்கே தெரிந்துக் கொள்வோம்.
சோர்வுக்கு ராகி..
8 மணி நேரம் தூங்கியும் சோர்வாக இருக்கிறீர்களா? அப்போ ராகி சாப்பிடவும். ராகியில் B-விட்டமின் மற்றும் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், உடல் சோர்வை தகர்க்கும். மேலும் ராகியில் உள்ள டிரிப்டோபேன் (Tryptophan) என்ற அமினோ அமிலம், மன அமைதியை தரும் செரட்டோனின் (Serotonin) மற்றும் நல்ல தூக்கத்திற்கு உதவும் மெலட்டோனின் (Melatonin) ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால் சோர்வும் குறையும், தூக்கமும் சீராகும்.
வயிறு உப்புசத்திற்கு இஞ்சி..
உணவுக்குப் பிறகும் வயிறு உப்புசம் ஏற்படுகிறதா.? அதற்கு இஞ்சி தான் தீர்வு. இஞ்சி குடலின் இயக்கத்தை (Gut Motility) தூண்டி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் குடல் அலர்ஜியை குறைத்து, வாயுத்தொல்லை மற்றும் கனத்த உணர்வை நீக்குகிறது. ஆகையால், தினசரி சிறிது இஞ்சியை உணவில் சேர்ப்பது, வயிற்றுப் பிரச்சனைகளை குறைக்க உதவும்.
மலச்சிக்கலுக்கு பிளம்ஸ்..
நார்ச்சத்து (Fibre) சாப்பிட்டும் மலச்சிக்கலா? அதற்கான சிறந்த தீர்வு பிளம்ஸ். இது இயற்கையான சோர்பிட்டோல் (Sorbitol) மற்றும் இயற்கை Laxative-களைக் கொண்டுள்ளது. இது குடலின் இயக்கத்தை மென்மையாக தூண்டி, மலச்சிக்கலைக் குறைக்கிறது. பிளம்ஸ், அதிக பக்க விளைவுகள் இல்லாமல், சீரான மலச்சிக்கலை வழங்கும் இயற்கை மருந்தாகும்.
குளிச்சியான உணர்வுக்கு எள்ளு
எப்போதும் குளிர்ச்சியாக உணர்கிறீர்களா? அதற்கான தீர்வு எள்ளு. எள்ளில் இரும்புச் சத்து, துத்தநாகம் (Zinc), டைரோசின் (Tyrosine) ஆகியவை நிறைந்துள்ளன. இவை தைராய்டு சுரப்பி சீராகச் செயல்பட உதவுகிறது. தைராய்டு சுரப்பி சீராக இயங்கினால், உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துகிறது. இதனால் எப்போதும் குளிர்ச்சியாக உணரமாட்டீர்கள்.
மூளை பிரச்னைக்கு வால்நட்ஸ்
மந்தமான மூளை, நினைவிழப்பு, கவனக் குறைவு போன்ற பிரச்னைகளால் அவதியா.? அதற்கான தீர்வு வால்நட்ஸ். வால்நட்ஸில் ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பாலிஃபீனால்கள், Vitamin E அதிகம் உள்ளன. இவை மூளைக்குச் சக்தி அளித்து, நினைவாற்றலை அதிகரிக்கின்றன. மேலும் மூளை செல்களை சத்தான முறையில் பராமரித்து, “Brain Fog” எனப்படும் மன குழப்பத்தை குறைக்கிறது.
View this post on Instagram
இறுதியாக
சிறிய உணவு பழக்க மாற்றங்கள், பெரிய ஆரோக்கிய பலன்களைத் தரும். எளிய உணவுகளை சரியாக எடுத்துக்கொள்வதன் மூலம் உடல், மனம் இரண்டும் ஆரோக்கியமாக இயங்கும் என நியூட்ரிஷனிஸ்ட் லவ்நீத் பட்ரா கூறியுள்ளார்.