போதுமான தூக்கம் எடுத்தும் சோர்வாகவே இருக்கிறீர்களா? அடிக்கடி வீக்கம், மலச்சிக்கல், மறதி, அல்லது எப்போதும் குளிராக உணர்வது போன்ற பிரச்சினைகள் உங்களை பாதிக்கிறதா? இவை எல்லாம் வாழ்க்கை முறையிலும், உணவில் உள்ள குறைபாடுகளிலும் தான் இருக்கிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா.
மேலும், இந்த சிரமங்களை நீக்க சில Super Foods-ஐ தினசரி உணவில் சேர்த்தால் உடல் சக்தியும், மன புத்துணர்ச்சியும் அதிகரிக்கும் என்று நிபுணர் கூறுகிறார். லோவ்னீத் பத்ரா பகிர்ந்த உணவுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள் (Energy Boosting Foods)
சோர்வை துரத்தும் ராகி
காலை எழுந்ததும் சோர்வாக இருப்பவர்கள், ராகி (Finger Millet)-ஐ உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் பி-வைட்டமின்கள், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இவை சோர்வை குறைக்கும். இது, டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் மூலம் செரடோனின், மெலடோனின் சுரந்து நல்ல தூக்கத்தையும் மன அமைதியையும் தருகிறது.
வீக்கத்தை குறைக்கும் இஞ்சி
உணவு சாப்பிட்டதும் அடிக்கடி வயிறு வீங்குகிறதா? அதற்கு இயற்கையான தீர்வு இஞ்சி. இது குடல் இயக்கத்தை அதிகரிக்கிறது, வாயுவையும் கனத்த உணர்வையும் குறைக்கிறது மற்றும். செரிமானத்தை மேம்படுத்துகிறது.
மலச்சிக்கலை சரி செய்யும் கொடிமுந்திரி
நார்ச்சத்து சாப்பிட்டும் மலச்சிக்கல் இருந்தால், அதை தடுக்க கொடிமுந்திரி (Prunes) உதவும். இதில் சர்பிடால் மற்றும் இயற்கையான மலமிளக்கிகள் நிறைந்துள்ளது. இது பெருங்குடலை மெதுவாகத் தூண்டி கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: எப்போதும் ஆற்றலுடன் இருக்க இந்த உணவுகளை சாப்பிடவும்..
குளிர்ச்சியை விரட்டும் எள் விதைகள்
எப்போதும் உடல் குளிராக இருப்பவர்களுக்கு எள் விதைகள் (Sesame Seeds) சிறந்த தீர்வு. இரும்பு, துத்தநாகம், டைரோசின் நிறைந்த இந்த விதைகள், தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
மூளை செயல்பாட்டை கூர்மைப்படுத்தும் வால்நட்
மறதி, கவனக் குறைபாடு, Brain Fog போன்ற பிரச்சினைகள் இருந்தால் வால்நட்ஸ் (Walnuts) அவசியம். வால்நட்ஸ் - ஓமேகா-3, பாலிபினால்கள், வைட்டமின் E நிறைந்தது. இது மூளைச் செல்களை பாதுகாக்கிறது. மேலும் கவனத்தை கூர்மைப்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது.
View this post on Instagram
இறுதியாக..
சோர்வு, வீக்கம், மலச்சிக்கல், குளிர்ச்சி, மறதி போன்ற பிரச்சினைகள் உங்களை அடிக்கடி தாக்கினால், இந்த சூப்பர் உணவுகளை உணவில் சேர்த்து பாருங்கள். சிறிய மாற்றங்களே உடல், மன ஆரோக்கியத்தில் பெரிய பலனைத் தரும் என நிபுணர் லோவ்னீத் பத்ரா வலியுறுத்துகிறார்.