Sat Sep 12, 2026 | 01:49 AM IST

Doctor Verified

Sesame Seeds Benefits: பெண்கள் எள் விதைகள் சாப்பிட்டா, இந்த 5 பிரச்சனைகள் வரவே வராதாம்!

Health Benefits Of Sesame Seeds For Female: எள் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் சூடான தன்மை உடலுக்கு வெப்பமூட்டும் தன்மையைக் கொண்டுள்ளது. இது குளிர்காலத்திற்கு ஏற்ற உணவாக அமைகிறது. குளிர்காலத்தில் பெண்கள் எள் விதைகளைச் சாப்பிடுவது பல வகையானநன்மைகளைத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை நீக்க உதவுகிறது.

பெண்களின் எலும்புகளை வலுவடைவதுடன், உடல் வலியைக் குறைக்கிறது. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், புரதம், வைட்டமின் ஏ, சி மற்றும் சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவேய்தனை உட்கொள்வதன் மூலம் பெண்களின் தசைகள் வலுவடைவதோடு செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளும் நீங்குகிறது. இதில் பெண்களுக்கு எள் விதைகள் தரும் நன்மைகள் குறித்து ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Bloated Stomach During Period: மாதவிடாய் காலத்தில் வயிறு உப்புசமா? இதெல்லாம் டிரை பண்ணுங்க

பெண்கள் எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு

ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாக, பல்வேறு நேரங்களில் பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சந்திக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்கள் எள் விதைகளை உட்கொள்வதன் மூலம், இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற முடியும். மேலும், எள்ளில் கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இவை மாதவிடாய் காலத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

வீக்கத்தை எதிர்த்துப் போராட

எள் விதைகள் வைட்டமின் B6 நிறைந்த வளமான மூலமாகும். இது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் போது ஈஸ்ட்ரோஜன்-புரோஜெஸ்ட்டிரோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. மேலும், மாதவிடாய் தொடர்பான வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

உடலுக்கு ஆற்றலைத் தரும் எள்

பொதுவாக பல்வேறு காரணங்களால், பெண்கள் அடிக்கடி ஆற்றல் இழந்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பெண்கள் எள் விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. மேலும், இதில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Breast Milk: இயற்கையான முறையில் தாய்ப்பால் சுறப்பை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்.!

ஹார்மோன் சமநிலையின்மைக்கு

பெண்கள் பெரும்பாலும் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். எள்ளில் அதிகளவிலான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிக்கிறது. கூடுதலாக, எள்ளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கூறுகள் போன்றவை காணப்படுகிறது. இந்த பண்புகள் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையைக் குணப்படுத்துகிறது.

சருமத்திற்கு நன்மை தரும் எள்

பெண்கள் எள் உட்கொள்வதன் மூலம், அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த நன்மை பயக்கும். மேலும் இது சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். எள்ளில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது. மேலும், இது சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.

எலும்புகளை வலுவாக்க எள்

எள் சாப்பிடுவது பெண்களுக்கு எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இதற்கு எள்ளில் உள்ள கால்சியம் மற்றும் அமினோ அமிலங்களே காரணமாகும். இவை எலும்புகளுக்கு ஊட்டமளித்து வலிமை அளிக்கிறது. எனவே பெண்கள் எள் உட்கொள்வதன் மூலம் உடல் சோர்வு நீங்குவதுடன், உடல் பலவீனமும் நீங்கும். இது தசை இயக்கம், நரம்பு சமிக்ஞை பரிமாற்றம், இரத்த நாள செயல்பாடு மற்றும் ஹார்மோன் வெளியீடு போன்றவற்றில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் எள் பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் பங்களிக்கிறது. எனவே பெண்கள் எள் உட்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கருப்பையைப் பாதிக்கும் சைனீஸ் உணவுகள்! நீங்க இத கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

Image Source: Freepik

Read Next

PCOS Symptoms: சாதாரணமா இருந்தாலும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.. PCOS ஆக இருக்கலாம்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content