Which food clears brain fog: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் மூளை சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. இதன் காரணமாக அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்துவது கூட கடினமாக தோன்றலாம்? இது ஒரு முக்கியமான முடிவை எடுக்க முயற்சிக்கும்போது அடிக்கடி குழப்பமடையலாம்? இந்த கேள்விகளுக்கான பதில் ஆம் என்றே பலரும் கூறுவர். இதற்கு மூளை மூடுபனி அறிகுறியாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மூளை மூடுபனி என்பது சரியாக சிந்திக்கும் திறனைப் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான நிலையாகும். மூளை மூடுபனிக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் மூளை மூடுபனியை நிர்வகிக்கலாம். நாம் தினமும் உட்கொள்ள வேண்டிய உணவைப் பொறுத்து மூளை எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை அறியலாம். இது குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மூளை மூடுபனியைக் குறைத்து மன தெளிவை மீண்டும் பெற உதவும் நான்கு உணவுகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மூளையை ஷார்ப்பாக வைக்க உதவும் முக்கிய வைட்டமின் எது தெரியுமா? இதற்கு எந்த உணவை சாப்பிடலாம்
மூளை மூடுபனி என்றால் என்ன?
மூளை மூடுபனி என்பது மூளை வழக்கம் போல் செயல்பட முடியாத ஒரு நிலையைக் குறிக்கிறது. இது செறிவு, நினைவாற்றல் மற்றும் சிந்தனை போன்றவற்றைப் பாதிக்கலாம். இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மூளை மூடுபனி அறிவாற்றல் குறைபாடு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மூளை மூடுபனியின் அறிகுறிகள்
- சோர்வு
- மறதி
- கவனம் செலுத்துவதில் சிரமம்
- குழப்பம்
மூளை மூடுபனி ஏற்படுவதற்கான காரணங்கள்
- உணவுமுறை
- மன அழுத்தம்
- தூக்கமின்மை
- ஹார்மோன் மாற்றங்கள்
மூளை மூடுபனியைக் குறைக்க உதவும் உணவுகள்
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, மூளை மூடுபனியைக் குறைக்க சில ஆரோக்கியமான உணவுகள் உதவுகின்றன.
வால்நட்ஸ்
பெரும்பாலான நட்ஸ் வகைகள் நமது மூளைக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. அனைத்துமே அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்றாலும், குறிப்பாக வால்நட்ஸ் சாப்பிடுவதை நிபுணர் பரிந்துரைக்கிறார். வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். இது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. எனவே, நாள்தோறும் சிலவற்றை சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். இதை ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Causes of Memory Loss: எந்த வைட்டமின் குறைபாடு நினைவாற்றலை பலவீனப்படுத்தும்? நிபுணர்கள் கூறுவது இங்கே!
அவுரிநெல்லிகள்
ப்ளூபெர்ரிகள் உணவில் சுவையை கூட்டுவதற்காக மட்டுமல்லாமல், அதில் இன்னும் பல நன்மைகள் உள்ளது. நிபுணரின் கூற்றுப்படி, ப்ளூபெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகின்றன. அன்றாட உணவில் ப்ளூபெர்ரிகளைப் பல்வேறு வழிகளில் சேர்ப்பதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
புரதம் நிறைந்த உணவுகள்
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த நிபுணர் கூறியதாவது, “புரதச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இதற்கு தயிர், கோழிக்கறி, முட்டை மற்றும் பருப்பு போன்ற உணவுகளால் உணவை வளப்படுத்துவது நரம்பியக்கடத்தி உற்பத்திக்கு உதவுகிறது. சிறந்த மன கவனம் மற்றும் ஒட்டுமொத்த ஆற்றலுக்கு இது மிகவும் அவசியமாகும்” என்று கூறியுள்ளார்.
கீரை
மூளை மூடுபனியைக் குறைக்க உதவும் மற்றொரு உணவுப் பொருளாக பசலைக் கீரை அமைகிறது. இந்த கீரையில் மூளைக்கு ஊட்டமளிக்கத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர் கூறியுள்ளார். மேலும், பசலைக் கீரையை உட்கொள்வது உடல் சோர்வை எதிர்த்துப் போராடவும், மனரீதியாக சுறுசுறுப்பாக உணரவும் உதவுகிறது.
மூளை மூடுபனி அறிகுறிகளை அனுபவித்தால், மூளைத்திறனை மேம்படுத்துவதற்கு இந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Herbs For Brain Power: மூளை ஃபாஸ்ட்டா வேலை செய்யணுமா? இந்த ஹெர்ப்ஸ் யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik