காலை எழுந்தவுடன் சோர்வா? வேகமா வேலை செய்ய நிபுணர் சொன்ன இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க

Foods to fight morning sickness: காலை சோர்வு இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனினும் காலையில் ஏற்படும் சோர்வை நீக்குவதற்கு சில வழிகளைப் பின்பற்றலாம். இந்த காலை சோர்வை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும் சிறந்த உணவுகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார்.
  • SHARE
  • FOLLOW
காலை எழுந்தவுடன் சோர்வா? வேகமா வேலை செய்ய நிபுணர் சொன்ன இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க

Best food to deal with morning sickness: இன்றைய நவீன காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பலரும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, காலை சோர்வு அல்லது தூக்கமின்மை போன்றவற்றால் எழுந்தவுடன் சோர்வு மற்றும் சோம்பலை உண்டாக்கலாம். இது பெரும்பாலும் சிறிது நேரம் நீடிக்கலாம். மக்கள் சோர்வாக எழுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக நாள் முழுவதும் உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகள் காரணமாக சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும், இது நாள் முழுக்க நீட்டிப்பதாகவும், அடுத்த நாள் காலையில் எழுவதை சிரமமாகவும் மாற்றுகிறது.

எனினும் காலை சோர்வு பெரும்பாலும் தூக்கமின்மையால் மட்டுமல்லாமல், மோசமான ஊட்டச்சத்துக்களின் காரணமாகவும் எழலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் கூறுகிறார். மேலும், அவர் காலை சோர்வை எதிர்த்துப் போராட நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். இதில் காலையில் ஏற்படக்கூடிய சோம்பலை எதிர்த்துப் போராட உதவும் சில உணவுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Low Iron Levels: உடலில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் இந்த அறிகுறிகள் எல்லாம் வரும்!

காலை சோர்வை எதிர்த்துப் போராட சாப்பிட வேண்டிய உணவுகள்

காலை சோர்வை நீக்குவதற்கு, காஃபின் இல்லாமல் இயற்கையாகவே ஆற்றலாக மாற்றக்கூடிய சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

முருங்கைக்காய்

காலை நேர சோர்வை எதிர்த்துப் போராடுவதில் முருங்கை ஒரு சாத்தியமான இயற்கை சிகிச்சையாக அமைகிறது. குறிப்பாக, முருங்கையில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், இரும்புச்சத்து போன்றவற்றின் அதிக செறிவு, ஆற்றலை வழங்கக்கூடியதாகவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது.
ஆற்றல் மாற்றத்தைக் கவனிக்கவும், காலை சோர்வை எதிர்த்துப் போராடவும் ஒரு டீஸ்பூன் அளவிலான முருங்கைப் பொடியை சில பழங்களுடன், காலையிலோ அல்லது மாலை சிற்றுண்டியிலோ சேர்க்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்துள்ளார்.

தேனீ மகரந்தம்

தேனீ மகரந்தம் என்பது தேனீக்களால் சேகரிக்கப்படக்கூடிய பூக்களின் மகரந்தம் ஆகும். இது தேனீக்களால் தேன் தயாரிக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகும். இது பூக்களில் இருந்து சேகரிக்கப்படும் ஒரு இயற்கை உணவு மூலமாகக் கருதப்படுகிறது. இது சகிப்புத்தன்மை மற்றும் ஆற்றல் மட்டங்களை கணிசமாக அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, தேனீ மகரந்தம் ஆனது இயற்கையின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் பி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உயிர்ச்சக்தியை ஊக்குவிக்கவும், செல்லுலார் சோர்வை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

மேலும் செல் சோர்வு காரணமாக சோர்வாக இருப்பின், தயிருடன் 1 டீஸ்பூன் தேனீ மகரந்தத்தைக் கலந்து நாளைத் தொடங்கலாம். இதன் மூலம் ஆற்றல் மாற்றத்தை நாம் உடனடியாகக் காண முடியும் என்று நிபுணர் பத்ரா கூறியுள்ளார்.

அவுரிநெல்லிகள்

ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்களின் கூற்றுப்படி, ப்ளூபெர்ரி அல்லது அவுரி நெல்லிகளை சாப்பிடலாம். இது மூளை மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இவை அந்தோசயினின்கள் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளது.

அவுரிநெல்லிகள் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் செறிவை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இவை காலை சோர்வை சமாளிக்க உதவுகிறது. அவுரிநெல்லிகள் ஒரு சரியான காலை சிற்றுண்டி அல்லது ஸ்மூத்தி சேர்க்கையாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: வெயில் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டால் உடனடி ஆற்றல் கிடைக்கும்!

வாழைப்பழங்கள்

வாழைப்பழத்தில் அதிகளவிலான பொட்டாசியம், வைட்டமின்கள் பி மற்றும் மெக்னீசியம் நிறைந்ததாக அமைகிறது. மேலும் இதில் போதுமான அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இரத்த ஓட்டத்தில் சர்க்கரை வெளியீட்டை மெதுவாக்குகிறது.

நிபுணரின் கூற்றுப்படி, வாழைப்பழங்கள் உடனடி மற்றும் மென்மையான எரிபொருளாக இருப்பதாக கூறியுள்ளார். இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இயற்கை கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை ஆற்றலை அதிகரிக்கவும் தசை பழுதுபார்க்கவும் உதவுகின்றன.

வாழைப்பழத்தை காலை உணவாகவோ அல்லது காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாகவோ சாப்பிடுவது சரியாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் பழுக்காத வாழைப்பழத்தை விட, பழுத்த வாழைப்பழம் சர்க்கரை வடிவில் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஆற்றலை வழங்குகிறது.

இந்த உண்மையான, ஆரோக்கியமான உணவுகளால் நம் காலை உணவைத் தொடங்குவதன் மூலம் நாம் தொடர்ந்து ஆற்றலைப் பெறலாம். மேலும், காலையில் இயற்கையாகவே புத்துணர்ச்சி அடையலாம் என ஊட்டச்சத்து நிபுணர் கூறினார்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: எப்போதும் ஆற்றலுடன் இருக்க இந்த உணவுகளை சாப்பிடவும்..

Image Source: Freepik

Read Next

கிராம்பு மற்றும் தேனை ஒன்றாக சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா.?

Disclaimer