Powerful morning routine ideas for more energy: நம் அன்றாட வாழ்வில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் காலை நேர பழக்கங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் காலையில் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. உண்மையில் நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும், எந்த மன அழுத்தமும் இல்லாமல் இருக்க சில காலை பழக்கங்களைக் கையாள வேண்டும். ஏனெனில், இன்று பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்திலேயே வாழ்கின்றனர். இந்த காலசூழ்நிலையில் நல்ல தூக்கத்தை எடுத்துக் கொண்ட போதிலும், அவர்கள் சோர்வை உணர்கின்றனர்.
எனவே சோர்வை நீக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கையாள்வதன் மூலம் காலை பழக்கங்களுடன் சக்தியை மீட்டமைக்கலாம். இதில் ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலுக்கு ஆற்றலை வழங்கக்கூடிய காலை நேர பழக்கங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “சர்க்காடியன் தாளம் ஆற்றல், செரிமானம், ஹார்மோன்கள் முதல் தூக்கத்தின் தரம் வரை பல்வேறு செயல்பாடுகளை இயக்குகிறது. இதை எவ்வாறு மீட்டமைப்பது மற்றும் ஆதரிப்பது என்பது குறித்த தகவல்களைக் காணலாம்.” என்று தனது பதிவை ஆரம்பித்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Gut Health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை பழக்கங்கள்..
ஆற்றலை மேம்படுத்தும் காலை நேர பழக்கங்கள்
நிலையான விழித்தெழும் நேரத்தை அமைப்பது
ஒவ்வொரு நாளும் நிலையான எழுந்திருக்கும் மற்றும் தூக்க நேரத்தை அமைக்க வேண்டும். மேலும் அவர் இதில் 30 நிமிடங்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நாள்தோறும் சீரான தூக்க-விழிப்பு முறையைக் கையாள்வது கார்டிசோல் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் இது தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியைத் தூண்டவும், குடல் இயக்கத்தை நிலைநிறுத்தவும் உதவுகிறது.
10-15 நிமிடங்கள் காலை சூரிய ஒளியைப் பெறுவது
நிபுணர், காலை நேரத்தில் 10-15 நிமிடங்கள் சூரிய ஒளியைப் பெற வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். ஏனெனில், மேகமூட்டமான ஒளி கூட மூளையின் முதன்மை கடிகாரத்தை (SCN) மீட்டமைக்கிறது. மேலும் காலை நேரத்தில் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி-யைப் பெறலாம். இது எலும்பு ஆரோக்கியத்திற்கும், நோயெதிர்ப்பு அமைப்புக்கும் அவசியமானதாகும். மேலும் இது செரோடோனின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் வெளியீட்டை அதிகரிக்கிறது, இது விழிப்புணர்வையும், நேர்மறை உணர்வுகளையும் மேம்படுத்துகிறது.
புரதம் நிறைந்த காலை உணவை உண்ணுவது
காலை உணவில் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் கார்டிசோல் அளவை சமநிலையில் வைக்கலாம். இது இன்சுலின் உணர்திறனை சமநிலைப்படுத்தவும், பசியைக் குறைக்கும் எனவும் நிபுணர் பகிர்ந்துள்ளார். பொதுவாக, காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளும் புரத உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் அதிக சிற்றுண்டி உட்கொள்ளலைத் தவிர்க்கலாம்.
காஃபினை 1 மணி நேரம் தாமதப்படுத்துவது
காலை எழுந்ததும் காஃபின் குடிப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் அல்லது 1 மணி நேரம் தாமதமாகக் குடிக்கலாம். இவ்வாறு காஃபின் அருந்துவதை தாமதப்படுத்துவது கார்டிசோல் கூர்முனைகளையும், மதிய உணவு ஆற்றல் செயலிழப்புகளையும் தடுக்கிறது. இதன் மூலம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Morning habits for success: தினமும் காலையில் இதை செய்தால் கடினமான இலக்கையும் எளிதில் அடையலாம்
குடல் கடிகாரத்துடன் உணவை சீரமைப்பது
குடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான காலை உணவுமுறைகளைக் கையாள்வது அவசியமாகும். அதே சமயம், நுண்ணுயிரிகளை ஆதரிப்பதற்கு இரவு நேர உணவை குறிப்பாக, இரவு 10 மணிக்குப் பிறகு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இரவு தாமதமாக உணவு உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம்.
View this post on Instagram
சர்க்காடியன் ஊட்டச்சத்துக்களைச் சேர்ப்பது
சர்க்காடியன் தளத்தை சீராக வைத்திருக்க உதவக்கூடிய ஊட்டச்சத்துக்களை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். அதன் படி, மெக்னீசியம், டிரிப்டோபான், ஒமேகா-3, B12 போன்றவற்றைச் சேர்க்கலாம். இவை நம் உடலை சீராக வைத்திருப்பதற்கு உதவுகிறது.
இரவில் நீல ஒளியைக் குறைப்பது
நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இரவு நேரத்தில் நீல ஒளியைக் குறைப்பது அவசியமாகும். இரவில் நீல ஒளியைக் குறைப்பதன் மூலம் மெலடோனினைப் பாதுகாக்கலாம். மேலும் இது வேகமாக தூங்க உதவுகிறது.
இறுதியாக, நிபுணர் “சிறிய தினசரி பழக்கவழக்கங்கள் உங்கள் உடலின் கடிகாரத்தை மீட்டமைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: காலையில் எழுந்தவுடன் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?
Image Source: Freepik