Herbs For Brain Power: மூளை ஃபாஸ்ட்டா வேலை செய்யணுமா? இந்த ஹெர்ப்ஸ் யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Herbs For Brain Power: மூளை ஃபாஸ்ட்டா வேலை செய்யணுமா? இந்த ஹெர்ப்ஸ் யூஸ் பண்ணுங்க

இது தவிர, அன்றாட உணவில் நாம் சேர்க்கும் சில காய்கறிகள், பழங்கள் போன்றவையும் மூளைத்திறன் மேம்பாட்டிற்கு உதவுகிறது. ஆனால், இந்த வரிசையில் மூலிகையும் அடங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். மருத்துவ குணங்களுக்காக  பயன்படுத்தும் பண்டைய நடைமுறையானது, மூலிகைகளை மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவும் தீர்வுகளை வழங்குகிறது. இதில் மேம்பட்ட மனக்கூர்மை மற்றும் அறிவாற்றல் போன்றவற்றிற்கு உதவும் மூலிகைகளைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Brain Sharpening Tips: மூளைத் திறன் மேம்பாட்டிற்கு உதவும் டாப் பழக்க வழக்கங்கள்

மூளைத் திறன் மற்றும் அறிவாற்றல் திறனை மேம்படுத்தும் மூலிகைகள்

அஸ்வகந்தா

இது ஆயுர்வேதத்தில் சிறந்த விளங்கக்கூடிய மூலிகைகளில் ஒன்றாகும். இதில் உள்ள அடாப்டோஜெனிக் பண்புகள் உடல் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை நிர்வகிக்க உதவுகிறது. மேலும், இது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆய்வு ஒன்றில் அஸ்வகந்தாவை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அறிவாற்றல் செயல்திறன், நிர்வாக செயல்பாடு, கவனம் போன்றவற்றில் முன்னேற்றமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இவை கார்டிசோலின் அளவைக் குறைக்கவும், சிறந்த நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலுக்கு உதவக்கூடிய அமைதியான மனதை ஊக்குவிக்கிறது.

பயன்படுத்துவது எப்படி?

அஸ்வகந்தாவை பவுடர் அல்லது காப்ஸ்யூல் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். இந்த பவுடரை பால் அல்லது தேனுடன் கலந்து குடிக்கலாம். இதன் வழக்கமான நுகர்வு, குறிப்பாக மாலையில் அருந்துவது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

பிராமி

பிராமி என்பது Bacopa Monnieri என்றும் அழைக்கப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாகவே ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்கும் ஒரு சக்திவாய்ந்த மூளை டானிக்காக அறியப்படுகிறது. இது நினைவாற்றலை மேம்படுத்துதல், பதட்டத்தைக் குறைப்பது மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டையும் மேம்படுத்த உதவுகிறது. ஆய்வு ஒன்றில் பிராமியை எடுத்துக் கொண்டவர்களின் நினைவக செயல்திறன் மற்றும் அறிவாற்றல் செயலாக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த மூலிகையில் பேகோசைடுகள் என்ற சேர்மங்கள் உள்ளது. இவை சேதமடைந்த நியூரான்களை சரிசெய்து நரம்பு தூண்டுதல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்?

பிராமியானது பொடிகள், காப்ஸ்யூல்கள் அல்லது தேநீர் போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. எனவே பிராமியை தினசரி வழக்கத்தில் ஸ்மூத்திகளில் அல்லது அதை ஒரு துணைப் பொருளாக உட்கொள்வது போன்றவை அறிவாற்றல் நன்மைகளைப் பெற உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Smoking And Brain Health: ஸ்மோக்கிங் செய்வதை நிறுத்துவதால் மூளை ஆரோக்கியத்திற்குக் கிடைக்கும் நன்மைகள்!

பாசில் மரம்

பாசில் மரத்தின் தாவரவியல் பெயர் ஜின்கோ பிலோபா ஆகும். மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் நன்கு அறியப்பட்ட மூலிகையாக ஜின்கோ பிலோபா அமைகிறது. இது பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆய்வு ஒன்றில், இந்த Ginkgo Biloba அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், வயதானவர்களை அறிவாற்றல் வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

எப்படி பயன்படுத்துவது

இது பொதுவாக மாத்திரை அல்லது காப்ஸ்யூல் வடிவில் கிடைக்கிறது. இதை தேநீராகவும் உட்கொள்ளலாம். இதன் வழக்கமான உட்கொள்ளல் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக வயதானவர்களின் மூளை ஆரோக்கியத்தில் ஜின்கோ பிலோபா பெரிதும் உதவுகிறது.

மஞ்சள்

ஆயுர்வேதத்தில் சிறந்த விளங்கும் மற்றொரு மூலிகைகளில் ஒன்று மஞ்சள் ஆகும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் குர்குமின் போன்ற கலவைகளுக்கான இது நன்கு அறியப்படுகிறது. இவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. ஆய்வு ஒன்றில் குர்குமின் உட்கொள்வது டிமென்ட் இல்லாத பெரியவர்களுக்கு நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த குர்குமின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இவையிரண்டுமே அறிவாற்றல் வீழ்ச்சியுடன் இணைக்கப்பட்டதாகும்.

எப்படி பயன்படுத்துவது?

மஞ்சளை நேரடியாக உணவில் சேர்க்கலாம். மஞ்சள் பால், மஞ்சள் டீ போன்ற வழிகளில் சேர்க்கலாம். இதன் சிறந்த உறிஞ்சுதலுக்கு, கருப்பு மிளகுடன் மஞ்சளை உட்கொள்வது மிகவும் நல்லது. மேலும் இதில் பைபரின் நிறைந்துள்ளது. இவை குர்குமின் உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது.

இது போன்ற மூலிகைகள் மூளைத் திறன் மற்றும் அறிவாற்றல் திறனை மேம்படுத்துகின்றன. எனவே, சிறந்த நினைவாற்றல் மேம்பாட்டிற்கு இந்த மூலிகைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Brain Power Increasing Habits: ப்ரெய்ன் ஷார்ப்பா இருக்கணும்னா தினமும் நீங்க செய்ய வேண்டியது இது தான்!

Image Source: Freepik

Read Next

Night Shift Healthy Tips: நைட் ஷிப்ட்லயும் ஹெல்த்தியா, சுறுசுறுப்பா வேலை செய்யணுமா ? இத செய்யுங்க

Disclaimer