Brain Health Yoga Asanas: உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பது போல, மன ஆரோக்கியத்தைக் காப்பதும் அவசியமாகும். மன உளைச்சல், பதற்றம் போன்றவை அதிகம் இருந்தால், அதன் விளைவு நீண்ட காலம் வரை நீடிக்கலாம். உடல் ஆரோக்கிய பாதிப்பிற்கு, மனநிலை சரியில்லாமல் இருத்தலும் முக்கிய காரணமாகும். இந்த சூழ்நிலையில் ஒருவர் கடுமையான நோய்களுக்கு உள்ளாகலாம். எனவே மூளையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது மிக முக்கியமாகும். இதில் மூளையை ஆரோக்கியமாக வைப்பதுடன், மூளை ஆற்றலை அதிகரிக்க உதவும் சில யோகாசனங்களைக் காணலாம்.
மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் யோகாசனங்கள்
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த, மூளைத் திறனை அதிகரிக்க செய்ய வேண்டிய யோகாசனங்கள் சிலவற்றைக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Exercises: தொப்பை வேகமாகக் குறைய தினமும் இந்த யோகாசனங்களை செய்யுங்க
விருக்ஷாசனம்
இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் யோகாசனம் ஆகும். இந்த யோகாசனம் செய்வது மூளையின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
செய்முறை
- முதலில் தரையில் நேராக நின்று, கைகளை மடக்கி மார்புக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின், வலது முழங்காலை மடக்கி, இடது பாதத்தின் மீது பாதத்தை வைக்க வேண்டும்.
- இந்நிலையில் சமநிலையை பராமரிக்க முயற்சி செய்து, மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
- இப்போது ஏதாவது ஒரு பொருளின் மீது கவனம் செலுத்தி, கைகளை மேல்நோக்கி நீட்டவும்.
- இந்நிலையில் சிறிது நேரம் இருந்து பின் சாதாரண நிலைக்கு மாறலாம்.

சேது பந்தாசனம்
இந்த ஆசனம் செய்வது முழு உடலுக்கும் நன்மை தரும். இது மன அழுத்தத்தைப் போக்குவதுடன், மன அமைதிக்கு உதவுகிறது.
செய்முறை
- யோகா மேட் ஒன்றில் முதுகில் படுத்து, கால்களை வளைக்க வேண்டும்.
- பின், கைகளால் கணுக்கால்களைப் பிடிக்க முயற்சி செய்யவும்.
- இப்போது உடலின் கீழ் பகுதியை இடுப்பிலிருந்து மேல்நோக்கி உயர்த்த முயற்சிக்கலாம்.
- இந்நிலையில் சிறிது நேரம் பிடித்து ஓய்வெடுக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Face Fat Reduce Yoga: முகம் மட்டும் பெருசா இருக்கா? முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க இந்த உடற்பயிற்சி செய்யுங்க
பத்மாசனம்
பத்மாசனம் செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. இது மனம் மற்றும் மூளையை அமைதியாக வைக்க உதவுகிறது. மேலும், செறிவு மற்றும் கவனத்தை அதிகரிப்பதில், இந்த ஆசனம் பயனுள்ளதாக அமைகிறது.
செய்முறை
- இந்த ஆசனத்தில் முதலில் முதுகை நேராக வைத்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
- பின், வலது முழங்காலை வளைத்து, அதை இடது தொடையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல, இடது முழங்காலை வலது தொடையில் வைத்துக் கொள்ளலாம்.
- இதில் கால்கள் வயிற்றின் கீழ் பகுதியை தொட வேண்டும். இப்போது கைகளை நேராக்கி, இரு முழங்கால்களிலும் வைக்க வேண்டும்.
- மூச்சை உள்ளிழுத்து, சிறிது நேரம் வைத்து பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடலாம்.

பச்சிமோத்தாசனம்
இந்த ஆசனம் மனதை அமைதியாக வைத்திருக்க மற்றும் மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. இதன் வழக்கமான பயிற்சி மூளை சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
செய்முறை
- முதலில் சுகாசன தோரணையில் அமர்ந்து, ஆழ்ந்த மூச்சு விட வேண்டும்.
- பின், இரு கால்களையும் முன்னோக்கி நீட்டி நிதானமாக இருக்க வேண்டும்.
- இப்போது, முன்னோக்கி வளைந்து, உங்கள் கால்களின் கால்விரல்களைப் பிடிக்க வேண்டும்.
- பிறகு, உங்கள் நெற்றி முழங்கால்களைத் தொட வேண்டும் மற்றும் முழங்கைகள் தரையில் இருக்க வேண்டும்.
- இந்த நிலையில் சிறிது நேரம் இருந்து, மீண்டும் முதல் தோரணைக்கு வரலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga for Mental Health: மனதை அமைதியாகவும், பதற்றம் இல்லாமல் வைக்க இந்த யோகாசனங்களை செய்யவும்!
Image Source: Freepik