Stomach Exercises For Belly Fat: தற்போதைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பால் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தொப்பைக் கொழுப்பைக் குறைப்பது பலருக்கும் சிரமமான ஒன்றாக அமைகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்து வருகின்றனர். அதே போல, தொப்பையைக் குறைக்க யோகா சிறந்த தேர்வாக அமையும். வயிற்றில் படுத்துக் கொண்டு சில யோகாசனங்கள் செய்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இப்போது தொப்பையைக் குறைக்க உதவும் வயிற்றில் படுத்துக் கொண்டு வீட்டிலேயே செய்யக்கூடிய யோகாசனங்கள் குறித்துக் காணலாம்.
தொப்பையைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்
உடலில் தொப்பைக் கொழுப்பை விரைவாகக் குறைக்க வயிற்றில் செய்ய வேண்டிய யோகாசனங்களைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
மகராசனம்
வயிற்றில் செய்யக்கூடிய யோகாசனங்களில் இது எளிதான யோகாசனம் ஆகும். இந்த யோகாசனம் செய்வது செரிமானத்தை மேம்படுத்தி, வாயு மற்றும் மலச்சிக்கல்லை நீக்க உதவுகிறது. மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ashna Zaveri: சக்கராசனம் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள்!
மகராசனம் செய்யும் முறை
- முதலில் அமைதியாக சூழலில் பாயில் வயிற்றில் படுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் இரு கைகளையும் வளைத்து, முழங்கைகளை மார்பின் முன், தரையில் வைக்க வேண்டும்.
- இரு உள்ளங்கைகளையும் கன்னத்தில் வைக்கவும்.
- இந்த நிலையில் சுவாச செயல்முறையை சாதாரணமாக வைத்திருக்க வேண்டும்.
- இவ்வாறு இரண்டு நிமிடங்கள் வைத்து, பின் மீண்டும் ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
- மகராசனம் செய்யும் போது, கழுத்து மற்றும் முதுகுத் தண்டு இரண்டும் நேராக இருப்பதை உறுதி செய்யவும்.

ஷலபாசனம்
இது வயிற்றில் படுத்துக் கொண்டு, தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவும் யோகாசனம் ஆகும். இந்த ஆசனம் செய்யும் போது வயிறு மற்றும் முதுகு தசைகள் நீட்டப்படுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Chandra Namaskar Benefits: சந்திர நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஷலபாசனம் செய்யும் முறை
- இதில் முதலில் வயிற்றில் படுத்துக் கொண்டு, இரு கைகளையும் தொடைகளுக்குக் கீழே வைக்க வேண்டும்.
- கன்னத்தைத் தரையில் வைத்து கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும்.
- இந்த நிலையில் மூச்சை உள்ளிழுத்து, வலது காலை உயர்த்தி, சிறிது நேரம் அப்படியே இருக்க வேண்டும்.
- பிறகு, மூச்சை வெளியேற்றி மெதுவாக காலை கீழே கொண்டு வரலாம்.
- அதன் பின் இடது காலை மேலே தூக்கி இதே போல கீழே இறக்க வேண்டும்.
- பிறகு மூச்சை உள்ளிழுத்து இரண்டு கால்களையும் உயர்த்த வேண்டும்.
- இந்நிலையில், சிறிது நேரம் இருந்த பிறகு, மூச்சை வெளியேற்றி கீழே இறக்கலாம்.
- இவ்வாறு 5-6 முறை மீண்டும் செய்யலாம்.
- எனினும், குடலிறக்கம் அல்லது ஏதேனும் வயிறு தொடர்பான பிரச்சனை இருந்தால், இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

புஜங்காசனம்
வயிற்றில் செய்யக்கூடிய ஆசனங்களில் இந்த ஆசனமும் ஒன்று. புஜங்காசனம் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இது படிப்படியாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இந்த ஆசனத்தில் வயிறு, முதுகு, கழுத்து மற்றும் தோள்களின் தசைகள் நீட்டப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Yoga Before Sleep: உடல் எடை சட்டுனு குறைய இரவு தூங்கும் முன் செய்ய வேண்டிய யோகாசனங்கள்
புஜங்காசனம் செய்யும் முறை
- இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் வயிற்றில் படுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் இரண்டு கால்களின் கால் விரல்கள் மற்றும் குதிகால்களை இணைக்க வேண்டும்.
- இரு உள்ளங்கைகளையும், மார்பின் முன் தரையில் வைக்க வேண்டும்.
- இப்போது சுவாசிக்கும் போது உள்ளங்கையில் அழுத்த வேண்டும்.
- பின் தலை , மார்பு மற்றும் வயிற்றை தொப்புள் வரை உயர்த்தவும்.
- இந்நிலையில் வானத்தை நோக்கி பார்த்து, கழுத்தை நேராக வைக்க வேண்டும்.
- இந்த நிலையில் சிறிது நேரம் இருந்து பின், மூச்சை வெளிவிடலாம்.
- பின் படிப்படியாக இயல்பு நிலைக்கு வரலாம்.
- இந்த யோகாசனத்தை 3 முதல் 5 முறை மீண்டும் செய்யலாம்.

இது தவிர இன்னும் சில வயிற்றில் படுத்து செய்யக்கூடிய ஆசனங்கள் உள்ளன. இந்த ஆசனங்கள் மிகவும் எளிதானது மற்றும் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். தொப்பையைக் குறைக்க விரும்புவோர், இந்த யோகாசனங்களைச் செய்வது உடலை ஆரோக்கியமாக வைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் முடியும். எனினும், தொடக்கத்தில் இந்த யோகாசனங்களை நிபுணரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Face Fat Reduce Yoga: முகம் மட்டும் பெருசா இருக்கா? முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க இந்த உடற்பயிற்சி செய்யுங்க
Image Source: Freepik