Bedtime Yoga Poses For Weight Loss: உடல் எடை குறைய பலரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். சிலர் ஜிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் பெரும்பாலும் யோகா மறைந்துவிட்டது. ஆனால், யோகா உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் நிர்ணயிப்பதாகும். மேலும் இவை உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. யோகாவின் அற்புதங்களும், ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம். இவை எடை இழப்புக்கு உதவுவதுடன், சிறந்த தூக்கத்தையும் தருகிறது. இதில் இரவு நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கும், எடை இழப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் இரவு தூங்கும் முன் சில யோகாக்களைச் செய்யலாம்.
யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை மற்றும் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. வாதாடி, அஷ்டாங்க மற்றும் ஹத யோகா சாதக், லோகேஷ் அவர்களின் கருத்துப்படி, நினைவாற்ரல், நெகிழ்வுத் தன்மை, வலிமை, மூச்சுக்கட்டுப்பாடு போன்றவற்றை ஒருங்கிணைத்து உடல் மற்றும் மனதை வளர்க்க சீரான பயிற்சியை உருவாக்குகிறது. குறைகப்பட்ட மன அழுத்தம், மேம்படுத்தப்பட்ட உடல் தகுதி, மனத் தெளிவு போன்றவற்றை அனுபவிக்கலாம் என லோகேஷ் கூறினார்.
முக்கிய கட்டுரைகள்

யோகா ஆசனங்கள் செய்யும் காலமும், எண்ணிக்கையும்
யோகாசனங்கள் செய்யும் கால அளவு அதன் நிலை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. யோகாசனங்களின் ஒவ்வொரு நிலையும் சுமார் 1 முதல் 2 நிமிடங்கள் வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது நன்மைகளை அனுபவிப்பதற்கான போதுமான நேரத்தை அனுமதிக்கிறது. மேலும், எண்ணிக்கையைப் பொறுத்த வரை, படுக்கைக்கு முன் இந்த யோகாக்களை வாரம் மூன்று முறையாவது பயிற்சி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Trikonasana Benefits: திரிகோணாசனம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன?
ஆசனங்கள் செய்யும் முன் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியவை
யோகாசனங்களை செய்யும் முன் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
தயாராகுதல்
இரவு படுக்கைக்கு முன் யோகாசனங்களைச் செய்வதற்கு முன்னதாக, உடலைத் தயார்படுத்த மென்மையாக ஈடுபடலாம். இதில் உடலின் தசைகளை தளர்த்த மெதுவாக நீட்டுவது அல்லது சூரிய நமஸ்காரம் செய்வது போன்றவை அடங்கும்.
ஆழ்ந்த சுவாசம்
நல்ல உறக்கத்திற்கு ஆழ்ந்த சுவாசம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இவை இரவில் யோகாக்கள் செய்யும் போது உங்களை வழிநடத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Surya Namaskar For Weight Loss: எடை குறைப்புக்கு சூர்ய நமஸ்காரம்.! எத்தனை முறை செய்யலாம்.?
வசதியான சூழல்
யோகா செய்யும் இடம் வசதியான சூழலை ஏற்படுத்துமாறு அமைய வேண்டும். உங்கள் வசதிக்காக போர்வைகளைப் பயன்படுத்தலாம்.
இரவில் தூங்கும் முன் செய்ய வேண்டிய யோகாசனங்கள்
நிபுணரின் கூற்றுப்படி, இரவு தூங்கும் முன் செய்யும் சில யோகாசனங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், சிறந்த தூக்கத்தையும் தருகிறது.
விபரீத கரணி (லெக்ஸ்-அப்-தி-வால் போஸ்)
இந்த ஆசனத்தில் கால்களை நீட்டியவாறு சுவர் பக்கத்தில் உங்கள் முதுகில் படுத்துக் கொள்ளலாம். பின், கைகளை பக்கவாட்டில் தளர்த்தவும். சுவரில் கால்களை மேல்நோக்கி இருக்குமாறு வைக்கும் யோகாவில் மென்மையான தலைகீழ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இவை கால்களின் வீக்கத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
உத்தனாசனா (நின்று முன்னோக்கி வளைதல்)
முதலில் கால்களை இடுப்பு அகலத்தில் வைத்து உயரமாக நிற்க வேண்டும். பின், மூச்சை வெளியிட்டு முன்னோக்கி வளைந்து மேல் உடலைக் கீழே தொங்க விடவும். இந்த ஆசனம் உடல் முழுவதையும் வேலை செய்ய வைப்பதுடன் தொடை எலும்புகள், மற்றும் கீழ் முதுகை நீட்ட உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Stamina Yoga: உங்கள் ஸ்டாமினாவை அதிகரிப்பதற்கான யோகாசனங்கள் என்னென்ன தெரியுமா?
சப்த மத்ஸ்யேந்திரசனம் (சாய்ந்த முதுகுத்தண்டு)
இந்த வகை யோகாசனத்தில் முகுகில் படுத்து, முழங்கால்களை மார்பில் கட்டிப்பிடிக்க வேண்டும். பின் கைகளை பக்கவாட்டில் நீட்டில் கால்களை ஒரு பக்கம் மெதுவாகக் குறைத்து முதுகைத் திருப்ப வேண்டும். இது முதுகை இலகுவாக வைக்க உதவுகிறது. மேலும் இந்த ஆசனத்தின் மூலம் வயிற்று உறுபுகளை மசாஜ் செய்து செரிமானத்திற்கு உதவுகிறது.
பத்தா கோனாசனா (பட்டாம்பூச்சி போஸ்)
இந்த ஆசனத்தில் கால்களை ஒன்றாக சேர்த்து, வளைத்து உட்கார வேண்டும். பின் முழங்கால்களை தரையில் மெதுவாக அழுத்தவும். இவை வயிற்று உறுப்புகளைத் தூண்டுவதுடன், தசைகளைத் தளர்த்த உதவுகிறது. மேலும் இவை செரிமானத்திற்கு உதவுகிறது.
சவாசனா (சடல போஸ்)
சவாசனா யோகாசனத்தில் முதுகில் படுத்து கால்களை நேராக வைத்து, கைகளைப் பக்கவாட்டில் தளர்த்தி வைக்க வேண்டும். இவ்வாறு படுத்து ஆழ்ந்த கவனத்துடன் சுவாசம் செய்யலாம். இது உடலைச் சமநிலையில் வைப்பதுடன் ஆழ்ந்த தளர்வு மற்றும் தூக்கத்திற்கு உதவுகிறது.
இந்த வகை யோகாசனங்களை இரவு தூங்கும் முன் செய்வதன் மூலம் உடலை சீராக வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் உடல் நிலைக்கு ஏற்றவாறு சுகாதார வழங்குநரை அணுகி பயன்பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Chandra Namaskar Benefits: சந்திர நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Image Source: Freepik